25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


மிளகு - பூண்டு குழம்பு.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மிளகு - பூண்டு குழம்பு.

தேவையானவை:

மிளகு - 4 தேக்கரண்டி,

சீரகம் - ஒரு தேக்கரண்டி,

பூண்டு - 10 பல்,

தோலுரித்தசின்ன வெங்காயம் - 10,

கறிவேப்பிலை சிறிதளவு,

புளி எலுமிச்சை அளவு,

கடுகு, வெந்தயம் - தலா கால் தேக்கரண்டி,

உப்பு, நல்லெண்ணெய்- தேவையான அளவு,

செய்முறை:

 புளியை தண்ணீரில் ஊற வைத்து கரைத்து வடிகட்டவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு மிளகு, சீரகம் சேர்த்து வறுக்கவும். இதனுடன் கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி இறக்கவும். ஆறியதும் மிக்ஸியில் அரைக்கவும். அடுப்பில் கடாய் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, வெந்தயம், பூண்டு சேர்த்து தாளிக்கவும். இதனுடன் அரைத்த விழுதைச் சேர்த்து கிளறவும். பின்னர் புளிக்கரைசல், உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும். மிளகு , பூண்டு குழம்பு ரெடி.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News