தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான - பரிசு பொருட்கள் வழங்கும் விழா
தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை 2022-2023 ஆம் ஆண்டிற்கான விளையாட்டு போட்டிகள் விருதுநகர் மாவட்டத்தில் 11.02.2023 முதல் 26.02.2023 வரை நடைபெற்று முடிவு பெற்றுவிட்டது.
முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் தொடர்பான தகவல்கள் இணைதளத்தில் பதிவதற்கு பல்வேறு செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது, போட்டிகள் இனிதே நிறைவு பெற்றது.
தற்போது,முதலமைச்சர் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ், பதக்கம், மற்றும் பரிசு தொகை வங்கி பரிவர்தனை மூலம் விடுவித்து வழங்கிட தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அமைச்சர் பெருமக்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள்/ சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்டு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கும் விழாவினை சிறப்புடன் நடத்திட தெரிவிக்கப்பட்டுள்ளது.மேற்படி சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கும் விழாவினை விருதுநகர் மாவட்ட மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள கூட்டரங்கத்தில் 23.06.2023 அன்று காலை 11.00 மணிக்கு நடத்திட விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அனுமதி வழங்கி உள்ளார் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் முன்னிலையில் விழா சிறப்பாக நடைபெற உள்ளது.
இது தொடர்பாக முதலமைச்சர் விளையாட்டு போட்டியில் அனைத்து பிரிவுகளில் வெற்றி பெற்ற வீரர்/வீராங்கனைகள் 23.06.2023 அன்று காலை 9.00 மணிக்கு விருதுநகர் மாவட்ட மருத்துவ கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள கூட்டரங்கத்திற்கு வருகை தருமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
0
Leave a Reply