விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி மற்றும் அருப்புக்கோட்டையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, 24.06.2023 அன்று இலவச பன்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீட்டுத் திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் முகாம் நடைபெறவுள்ளது.தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை கொண்டாடுகிற விதமாக, தமிழ்நாடு முழுவதும் 100 இலவச பன்நோக்கு சிறப்பு முகாம்களை நடத்திட தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில் காரியாபட்டி அமலா உயர்நிலைப்பள்ளி மற்றும் அருப்புக்கோட்டை APTSMPS மெட்ரிக் பள்ளி ஆகிய இடங்களில் 24.06.2023, சனிக்கிழமை அன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.இந்த சிறப்பு மருத்துவ முகாமில் பொது மருத்துவம், மகளிர் மருத்துவம், கண்,காது மூக்கு, தொண்டை மருத்துவம், எலும்பியல் மருத்துவம், மனநல மருத்துவம் உள்ளிட்ட பன்னோக்கு மருத்துவ ஆலோசனைகள் சிறப்பு மருத்துவர்களால் வழங்கப்பட இருக்கிறது.இந்த சிறப்பு மருத்துவ முகாமில் ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை, இசிஜி, எக்கோ, பெண்களுக்கான மார்பக புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை, தொழு நோய் கண்டறியும் பரிசோதனை, காசநோய் பரிசோதனை, கர்ப்பப்பை வாய் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைகளும்;, ஆலோசனைகளும் இலவசமாக வழங்கப்பட இருக்கிறது.மேலும், பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, மகளிர் மருத்துவம், கண் மருத்துவம், காது மூக்கு தொண்டை, பல் மருத்துவம், எலும்பியல் மருத்துவம், மனநல மருத்துவம் உள்ளிட்ட சிறப்பு சிகிச்சைக்கான ஆலோசனைகளும் இலவசமாக வழங்கப்பட இருக்கிறது.இந்த மருத்துவ முகாமில், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை 2022-2023 ஆம் ஆண்டிற்கான விளையாட்டு போட்டிகள் விருதுநகர் மாவட்டத்தில் 11.02.2023 முதல் 26.02.2023 வரை நடைபெற்று முடிவு பெற்றுவிட்டது.முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் தொடர்பான தகவல்கள் இணைதளத்தில் பதிவதற்கு பல்வேறு செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது, போட்டிகள் இனிதே நிறைவு பெற்றது.தற்போது,முதலமைச்சர் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ், பதக்கம், மற்றும் பரிசு தொகை வங்கி பரிவர்தனை மூலம் விடுவித்து வழங்கிட தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக அமைச்சர் பெருமக்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள்/ சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்டு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கும் விழாவினை சிறப்புடன் நடத்திட தெரிவிக்கப்பட்டுள்ளது.மேற்படி சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கும் விழாவினை விருதுநகர் மாவட்ட மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள கூட்டரங்கத்தில் 23.06.2023 அன்று காலை 11.00 மணிக்கு நடத்திட விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அனுமதி வழங்கி உள்ளார் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் முன்னிலையில் விழா சிறப்பாக நடைபெற உள்ளது.இது தொடர்பாக முதலமைச்சர் விளையாட்டு போட்டியில் அனைத்து பிரிவுகளில் வெற்றி பெற்ற வீரர்/வீராங்கனைகள் 23.06.2023 அன்று காலை 9.00 மணிக்கு விருதுநகர் மாவட்ட மருத்துவ கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள கூட்டரங்கத்திற்கு வருகை தருமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
விருதுநகர் மாவட்டம் தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நல வாரியத்தில் தாட்கோ அலுவலகத்தின் மூலம் உறுப்பினர் அட்டை பெற்ற தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளில் எவரேனும் பன்னிரெண்டாம் வகுப்பு 2022-2023-ஆம் கல்வி ஆண்டு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பின், அதில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ/மாணவியர்களுக்கு ஊக்கத்தொகையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்க வேண்டியுள்ளது. எனவே பன்னிரெண்டாம் வகுப்பு 2022-2023-ஆம் கல்வி ஆண்டு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ/மாணவியர்களின் விபரங்களுடன் மதிப்பெண் பட்டியல் மற்றும் தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நல வாரிய உறுப்பினர் அடையாள அட்டை நகலுடன் விருதுநகர் தாட்கோ மேலாளர் அலுவலகத்தினை எதிர் வரும் 20.06.2023-ம் தேதிக்குள். தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நல வாரிய உறுப்பினர்கள் அனுகுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன். I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்கள்,
“உயிர்த்திறள் ஒன்றெனக்கோரி தனிப்பெரும் கருணை ஆட்சி நடத்திய வள்ளல் பெருமானாரின் தருமசாலை துவக்கி 156வது ஆண்டு தொடக்கமும் (25.06.2022) வள்ளல் பெருமான் இவ்வுலகத்திற்கு வருவிக்க உற்ற 200-வது ஆண்டு தொடக்கமும் (05.10.2022) ஜோதி தரிசனம் காட்டுவித்த 152-வது ஆண்டும் (05.02.2023) வரவிருப்பதால் இம்மூன்று நிகழ்வுகளையும் இணைத்து அவரது 200-வது அவதார ஆண்டான அக்டோபர் 2022 முதல் 2023 வரை 52 வாரங்களுக்கு முக்கிய நகரங்களில் முப்பெரும் விழா அரசு சார்பாக அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது“. இதனைத்தொடர்ந்து, மதுரை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மண்டலம் சார்பில் 02.07.2023 அன்று வள்ளலார் முப்பெரும் விழா விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம், அருள்மிகு சொக்கநாதசுவாமி திருக்கோயில் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற உள்ளது.அதற்கு முன்னோடியாக விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மாணவ, மாணவியர்கள் கலந்து கொள்ளும் வள்ளலார் அவர்களின் வாழ்க்கை மற்றும் பாடல்கள் குறித்த பேச்சுபோட்டி, கட்டுரை போட்டி, பாடல் போட்டி, ஓவியம் வரைதல் போட்டி ஆகியன விருதுநகர், கே.வி.எஸ். வித்யாசலா மேல்நிலைப்பள்ளியில் வைத்து 20.06.2023 அன்று காலை 9.00 மணியளவில் நடைபெறவுள்ளது.மேற்படி போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ மாணவிகளுக்கு 02.07.2023 அன்று நடைபெறும் முப்பெரும் விழாவின் போது பரிசுகள் வழங்கப்படும். இது குறித்த கூடுதல் விவரங்களை விருதுநகர், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் தெரிந்து கொள்ளலாம் என இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அவர்கள் தெரிவித்துள்ளார்.மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்:தலைமை எழுத்தர் அலைபேசி எண் - 9688041776பிரிவு எழுத்தர் அலைபேசி எண் - 9360687563அலுவலக தொலைபேசி எண் - 04562 294607
. 2023-ம் ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழக நிதி அமைச்சர் அவர்கள் ஆற்றிய உரையின்படி, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளைச் சேர்ந்த அனைத்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளில் செயல்பட்டு வரும் தொடக்கப்பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தினை விரிவுபடுத்தி ,செயல்படுத்துவது தொடர்பாக அரசிடமிருந்து வரப்பெற்றுள்ள கீழ்க்காணும் நிலையான வழிகாட்டி செயல்முறைகளின்;படி காலை உணவு சமையல் செய்வதற்கு சுய உதவிக்குழு உறுப்பினர்கள்ஃசமையலர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இப்பணி முற்றிலும் தற்காலிகமானது. இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் சுய உதவிக்குழு உறுப்பினரின் குழந்தைகள் அதே பள்ளியில் படிக்க வேண்டும். அக்குழந்தை வேறு பள்ளிக்கு மாற்றப்படும் பட்சத்தில்,சமையலர்,சுய உதவிக்குழு உறுப்பினர் மாற்றப்பட்டு, அதே பள்ளியில் படிக்கும் குழந்தையின் தாயாரும் சுயஉதவிக்குழு உறுப்பினருமான வேறு நபர் பணியமர்த்தப்படுவார். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அனுபவம் உள்ள சுயஉதவிக்குழுக்கள் ஊராட்;சி அளவிலான கூட்டமைப்புஃபகுதி அளவிலான கூட்டமைப்புகளில் உறுப்பினர்களாக இருத்தல் வேண்டும்.தேர்ந்தெடுக்கப்படும் சுயஉதவிக்குழுக்கள்ஃஊராட்;சி அளவிலான கூட்டமைப்பு பகுதி அளவிலான கூட்டமைப்புகளில் உள்ள உறுப்பினர்கள் அதே கிராம ஊராட்சியில்ஃநகர்ப்புற பகுதியில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.சுய உதவிக்குழு உறுப்பினர்கள் குறைந்த பட்சக்கல்வித்தகுதியாக 10-ஆம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும்.முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்கு தகுதியின் அடிப்படையில் தற்காலிமாக தேர்வுசெய்யப்படும் சுய உதவிக்குழு உறுப்பினராக உள்ள சமையலர் பணியிடமானது முற்றிலும் தற்காலிகமானது. இப்பணிக்கு சமையலர் தேர்வு செய்யும்பொழுது பணம் பெறுதல் உள்ளிட்ட புகார்கள் வந்தால் சம்மந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்I.A.S. அவர்கள் தெரிவித்துள்ளார்.சமையலர் தேர்வு செய்யும்பொழுது பணம் பெறுதல் உள்ளிட்ட புகார்கள் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்
தனியார் விமான நிறுவனமான கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் திவால் நிலைக்கு செல்லும் அபாய நிலையில் உள்ளது கோஃபர்ஸ்ட் நிறுவனம் தேசிய நிறுவன தீர்ப்பாயத்தில் திவால் நடைமுறைக்கு தானாக முன்வந்து மனு அளித்திருந்தது.அதில், அமெரிக்காவில் பிடபிள்யூ என்று அழைக்கப்படும் பிராட் அண்ட் விட்னி நிறுவனத்திடமிருந்து விமான இன்ஜின்கள் முறையாக விநியோகிக்கப்படாததால் விமான சேவையை குறைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.இதனால் ஊழியர்களுக்கு ஊதியம், விமான நிலையங்களுக்கான கட்டணம் செலுத்த முடியாத நிலை உருவாகியுள்ளதால் கடும் இழப்பை சந்தித்துள்ளது என்றும் கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்த நிலையில், திவால் நிலைக்கு உள்ளாகி இருக்கும்பட்சத்தில் மே9ஆம் தேதி வரை அனைத்து விமான சேவைகளையும் ரத்து செய்யப்படுவதாகவருத்தத்துடன் கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.சிரமத்துக்கு நாங்கள் மன்னிப்புக் கோருகிறோம் விரைவில் டிக்கெட் தொகை ரீஃபண்ட் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
'irctcconnect.apk'என்கிற ஆண்ட்ராய்டு செயலியை பதிவிறக்கக்கோரி வாட்ஸ் அப்பில் அனுப்பப்படும் செயலியை பதிவிறக்க வேண்டாம் என்று ஐஆர்சிடிசி எச்சரித்துள்ளதுஇந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (ஐஆர்சிடிசி) மக்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. 'irctcconnect.apk' என்கிற ஆண்ட்ராய்டு செயலியை பதிவிறக்க வேண்டாம் என்று ஐஆர்சிடிசி எச்சரித்துள்ளது. வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போன்ற பிரபலமான தளங்களில் இதுபோன்ற செயலிகளை பதிவிறக்க கோரி செய்திகள் அனுப்பப்படுகிறது. இந்த apk உங்கள் மொபைலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று ஐஆர்சிடிசி எச்சரித்துள்ளது. செயலியின் பின்னணியில் உள்ள மோசடி நபர்கள் ஐஆர்சிடிசி அதிகாரிகள் போல நடித்து ஒரு நபரின் தனிப்பட்ட தகவல்களைப் பெற முயற்சிக்கின்றனர். எனவே இந்த செயலியை டவுன்லோடு செய்வதை தவிர்க்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் (F.L-1), F.L-2/F.L-3/FL-3AA மற்றும் FL-11 ஆகிய மதுபான உரிம ஸ்தலங்களை, 2003-ம் ஆண்டைய தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் விதி 12 துணை விதி (1) The Tamil Nadu Liquor (Licence and Permit) Rules 1981-ன்படி, மே தினமான 01.05.2023 அன்று ஒரு நாள் மட்டும் தற்காலிகமாக மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர் அவர்களால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேற்படி உத்தரவினை மீறி செயல்படும் F.L-1, F.L-2/F.L-3/FL-3AA மற்றும் FL-11 மதுபான ஸ்தலங்களின் உரிமதாரர்களின் மீது The Tamil Nadu Liquor (Licence and Permit) Rules, 1981-ன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.வீ.ப.ஜெயசீலன் I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தினால் நடத்தப்படும் 2023ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம் விருதுநகர் மாவட்டத்தில் 15 நாட்கள் அனைத்து மாணவ /மாணவியர்களுக்கும், வரும் 01.05.2023 முதல் 15.05.2023 வரை காலை 6.30 முதல் 9.00 மணி வரை மாலை 4.00 மணி முதல் 6.30 மணி வரை விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது.இப்பயிற்சி முகாமில் தடகளம், கூடைபந்து, கால்பந்து, வளைகோல்பந்து, மற்றும் வாலிபால், போன்ற விளையாட்டுகளில் மாணவ, மாணவியருக்கு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி முகாமில் சிற்றுண்டி வழங்கப்படும். பயிற்சி முகாமின் முடிவில் சீருடை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். பள்ளி மாணவ /மாணவியர் இப்பயிற்சி முகாமில் சேர்ந்து தங்கள் விளையாட்டு திறனை மேம்படுத்த மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் கேட்டுக்கொள்கிறார்.
விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட 450 கிராம ஊராட்சிகளில் தொழிலாளர் தினமான 01.05.2023 அன்று கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் கீழ்க்காணும் கூட்டப் பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல். (01.04.2022 முதல் 31.03.2023 வரை) கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை குறித்து விவாதித்தல். சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தில். கிராம வளர்ச்சித் திட்டம்(VPDP). அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித்திட்டத்தின் கீழ் 2021-22 மற்றும் 2022-23 ஆம் ஆண்டு ஊராட்சிகளில் தேர்வு செய்யப்பட்டுள்ள பணிகளின் முன்னேற்ற விபரம் குறித்து விவாதித்தல். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் 2022-2023 மற்றும் 2023-24 ஆம் ஆண்டு ஊராட்சிகளில் தேர்வு செய்யப்பட்டுள்ள பணிகளின் முன்னேற்ற விபரம் மற்றும் தொழிலாளர் மதிப்பீடு (Labour Budget) குறித்து விவாதித்தல். பிரதம மந்திரி ஊரக குடியிருப்புத் திட்டம் - குறித்து விவாதித்தல். அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு குறித்து விவாதித்தல். பிரதம மந்திரி கிராம சாலை திட்டம் குறித்து விவாதித்தல். தூய்மை பாரத இயக்கம்(ஊரகம்) சுகாதாரம் குறித்து விவாதித்தல். கழிப்பறை கட்டி பயன்படுத்தும் குடும்பங்களுக்கு பாராட்டு தெரிவித்தல். எங்கள் கிராமம் எழில்மிகு கிராமம் உறுதிமொழி எடுத்தல். ஜல் ஜீவன் இயக்கம் குறித்து விவாதித்தல். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் குறித்து விவாதித்தல். வறுமை குறைப்பு திட்டம்(VPRP) இதர பொருட்கள் குறித்து விவாதித்தல்.எனவே, 01.05.2023 அன்று நடைபெறவுள்ள கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்