இந்திய விமானப்படைப் பிரிவில் ஏர்மேன் பணிக்கு நேரடி ஆர்சேர்ப்பு மூலம் தகுதியான ஆண்கள் மட்டும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.கல்வித்தகுதி: 10/+2 உயிரியியல், இயற்பியல், வேதியியல் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடத்தில் 50% மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் இதில் பங்கேற்கலாம்.வயது: 27-06-2002 முதல் 27.06.2006 ( இடையிலான காலத்தில் பிறந்திருக்க வேண்டும் )நடைபெறும் இடம்: 8 ASC, AFS TAMBARAM (01.02.2023 - அன்று )மேலும் விவரங்களுக்கு www.airmenselection.cdac.in என்ற இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம்.இந்த அரிய வாய்ப்பினை விருதுநகர் மாவட்ட இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி. I A S., அவர்கள் தெரிவித்துள்ளார் .
இணைய தளத்தில் ஏற்பட்ட தடையால் ஜனவரி 19, 20-ம் தேதிகளில் செய்திகள் வெளியிட முடியவில்லை. ஜனவரி 21-ம் தேதி (இன்று) முதல் காணலாம்.
விருதுநகர் மாவட்டத்தில் நடப்பாண்டு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்க 6.00 இலட்சம் குடும்பங்களுக்கு இன்று (03.01.2023) முதல் டோக்கன் விநியோகம் செய்யப்படுகிறது. இது தொடர்பாக விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி , I A S அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதுதமிழர் திருநாளாம் தைப்பொங்கலை சிறப்பாகக் கொண்டாடும் வகையில், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும். இலங்கைத்தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர்களுக்கும். தலா 1 கிலோ பச்சரிசி 1 கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000/- ரொக்கத்துடன், ஒரு முழுக்கரும்பும் சேர்த்து வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். இதன்படி விருதுநகர் மாவட்டத்தில் 5.99,224 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் 1018 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களும் என ஆகமொத்தம் குடும்பங்களுக்கும் மேற்படி பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட உள்ளதுபொங்கல் பரிசுத்தொகுப்பு பெற நாள் ஒன்றுக்கு 250 குடும்ப அட்டைதாரர்கள் வீதம் வழங்கும் வகையில், (03.01.2023) முதல் வரும் 08.01.2023 வரை குடும்ப அட்டைதாரர்களின் வீட்டிற்கே சென்று ரேசன் கடை விற்பனையாளர்கள் மூலம் டோக்கன் வழங்கப்படும். அனைத்து ரேசன் கடைகளிலும், வரும் 09.01.2023 முதல் 13.01.2023 வரை பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும். டோக்கனில் தெரிவிக்கப்பட்டுள்ள நாட்கள் மற்றும் நேரம் விபரத்தின்படி குடும்ப அட்டைதாரர்கள் ரேசன் கடைக்குச் சென்று சமூக இடைவெளியை கடைப்பிடித்து, பொங்கல் பரிசு பெற்றுக்கொள்ளலாம்.அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களும் பொங்கல் பரிசு வழங்குவதற்கு விரிவான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. எனவே. தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்கள், தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் எவ்வித சிரமம் இன்றி பொங்கல் பரிசுத்தொகுப்பு பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் டிசம்பர்- 2022 மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 29.12.2022 அன்று காலை 10.30 மணியளவில் விருதுநகர் மாவட்ட ஆட்சியரக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் நடைபெறவுள்ளது. மேற்படி கூட்டத்தில் விவசாய பெருமக்கள் கலந்து கொள்வதுடன் விவசாயம் தொடர்பான கோரிக்கைகளை நேரடியாக மனு மூலம் தெரிவித்து பயன்பெறலாம்.விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகள் மற்றும் அலுவலர்கள் கொரோனோ தடுப்பு நடவடிக்கைகளான முக கவசம் அணிந்தும், கிருமிநாசினி பயன்படுத்துமாறும், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டும் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி.,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
எனது அன்புத் தாயாரும் , மறைந்த திரு. P. C.பலராமராஜா ( Founder - Janathacem ) அவர்களின் துணைவியுமான, திருமதி. ராஜேஸ்வரி பலராமராஜா அவர்கள் (19.12.2022) அன்று தனது 89-வது வயதில் இறைவனடி சேர்ந்தார், என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். தன்னையும், தன்னை சுற்றியுள்ள அனைவரையும் தன்னுடைய ஹாஸ்யத்தால் சிரிக்க வைப்பார். நல்ல சுவையாக உணவை சமைப்பதில் வல்லவர். அனைவருக்கும் விருந்தளித்து மகிழ்பவர். சிக்கனமாக இருக்க வலியுறுத்துவார். ஆனால் கஞ்சத்தனம் கூடாது, என்று அறிவுரை வழங்குவார். தன் கடைசி காலம் வரை யாருக்கும் பாரமாக இல்லாமல், தன் பலத்திலேயே நின்று ஜெயித்தவர். தவறு என்று தெரிந்தால், அடுத்த கனமே எடுத்துக் கூறி சரி செய்வார். அவர்களின் மறைவு வருத்தத்தை அளித்தாலும், அவருடைய போதனைகள் அனைத்தும் மன நிறைவை கொடுத்துள்ளது. அவர்களுடைய ஆன்மா அமைதி பெற என் சார்பிலும், இராஜபாளையம் டைம்ஸ் சார்பிலும் இறைவனிடம் வேண்டி வணங்குகிறேன்.அன்னாரது அண்டுதீரடம் 28.12.2022 புதன்கிழமை 90. A3 P.S.K, நகரில் உள்ள இல்லத்தில் வைத்து நடைபெறும். திருமதி குணா பாஸ்கர் ராஜா
விருதுநகர் மாவட்டத்தை சார்ந்த கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில்,விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் அனைத்து வங்கிகளின் சார்பில் சிறப்பு கல்வி கடன் முகாம் அனைத்து வட்டாரங்களிலும் நடைபெறவுள்ளது.அதன்படி, 21.12.2022 அன்று நடைபெறும் முகாமில், சாத்தூர் வட்டாரத்தை சேர்ந்த மாணவர்கள் SRNM கலை அறிவியல் கல்லூரியிலும், வெம்பக்கோட்டை வட்டாரத்தை சேர்ந்த மாணவர்கள் PSR பொறியியல் கல்லூரியிலும்,அருப்புக்கோட்டை வட்டாரத்தை சேர்ந்த மாணவர்கள் ஸ்ரீசௌடாம்பிகை பொறியியல் கல்லூரியிலும், ராஜபாளையம் வட்டாரத்தை சேர்ந்த மாணவர்கள் ராம்கோ பொறியியல் கல்லூரியிலும், திருவில்லிபுத்தூர் வட்டாரத்தை சேர்ந்த மாணவர்கள் ஸ்ரீபாலகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியிலும், வத்ராப் வட்டாரத்தை சேர்ந்த மாணவர்கள் கலசலிங்கம் பல்கலைக்கழகத்திலும், காரியாபட்டி வட்டாரத்தை சேர்ந்த மாணவர்கள் சேதுபொறியியல் கல்லூரியிலும், நரிக்குடி மற்றும் திருச்சுழி வட்டாரத்தை சேர்ந்த மாணவர்கள் திருச்சுழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், விருதுநகர் வட்டாரத்தை சேர்ந்த மாணவர்கள் VSVN பாலிடெக்னிக் கல்லூரியிலும்,22.12.2022 அன்று நடைபெறும் முகாமில், சிவகாசி வட்டாரத்தை சேர்ந்த மாணவர்கள் SFR கலை அறிவியல் கல்லூரியிலும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கல்விக்கடன் பெற விரும்பும் மாணவர்கள் www.vidyalakshmi.co.in என்ற இணையத்தில் தங்களுடைய விண்ணப்பத்தை தேவைப்படும் ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து முகாம் நடைபெறும் நாளன்று விண்ணப்பத்தின் நகல் மற்றும் ஆவணங்களுடன் கலந்து கொள்ளஅறிவுறுத்தப்படுகிறார்கள். முகாமில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் வங்கியின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு பரிசீலனை செய்து 20 நாட்களுக்குள் கடன் ஆணைகள் வழங்கப்படும்.மாணவர்கள் விண்ணப்பநகல், மாணவ,மாணவியர் மற்றும் பெற்றோரின் 3 புதிய புகைப்படம், வங்கி joint account பாஸ்புக் நகல், இருப்பிட சான்று நகல், வருமான சான்று நகல், ஜாதி சான்று நகல், ஆதார் நகல், பான் கார்டு நகல், கல்லூரியிலிருந்து பெறப்பட்ட டிழயெகனைந சான்றிதழ் மற்றும் கல்விக்கட்டண விபரம், பத்து, பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் இளநிலை பட்டப்படிப்பின் மதிப்பெண் சான்றிதழ்கள், முதல் பட்டதாரியாக இருப்பின் அதற்கான சான்று மற்றும் கலந்தாய்வு மூலமாக பெறப்பட்ட சேர்க்கைக்கான ஆணை உள்ளிட்ட ஆவணங்களுடன் முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி I A S , அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தை சார்ந்த கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில், விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் அனைத்து வங்கிகளின் சார்பில் சிறப்பு கல்வி கடன் முகாம் அனைத்து வட்டாரங்களிலும் நடைபெறவுள்ளது. அதன்படி, 21.12.2022 அன்று நடைபெறும் முகாமில், சாத்தூர் வட்டாரத்தை சேர்ந்த மாணவர்கள் SRNM கலை அறிவியல் கல்லூரியிலும், வெம்பக்கோட்டை வட்டாரத்தை சேர்ந்த மாணவர்கள் PSR பொறியியல் கல்லூரியிலும், அருப்புக்கோட்டை வட்டாரத்தை சேர்ந்த மாணவர்கள் ஸ்ரீசௌடாம்பிகை பொறியியல் கல்லூரியிலும், ராஜபாளையம் வட்டாரத்தை சேர்ந்த மாணவர்கள் ராம்கோ பொறியியல் கல்லூரியிலும், திருவில்லிபுத்தூர் வட்டாரத்தை சேர்ந்த மாணவர்கள் ஸ்ரீபாலகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியிலும், வத்ராப் வட்டாரத்தை சேர்ந்த மாணவர்கள் கலசலிங்கம் பல்கலைக்கழகத்திலும், காரியாபட்டி வட்டாரத்தை சேர்ந்த மாணவர்கள் சேது பொறியியல் கல்லூரியிலும், நரிக்குடி மற்றும் திருச்சுழி வட்டாரத்தை சேர்ந்த மாணவர்கள் திருச்சுழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், விருதுநகர் வட்டாரத்தை சேர்ந்த மாணவர்கள் VSVN பாலிடெக்னிக் கல்லூரியிலும்,22.12.2022 அன்று நடைபெறும் முகாமில், சிவகாசி வட்டாரத்தை சேர்ந்த மாணவர்கள் SFR கலை அறிவியல் கல்லூரியிலும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.மேலும், கல்விக்கடன் பெற விரும்பும் மாணவர்கள் www.vidyalakshmi.co.in என்ற இணையத்தில் தங்களுடைய விண்ணப்பத்தை தேவைப்படும் ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து முகாம் நடைபெறும் நாளன்று விண்ணப்பத்தின் நகல் மற்றும் ஆவணங்களுடன் கலந்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். முகாமில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் வங்கியின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு பரிசீலனை செய்து 20 நாட்களுக்குள் கடன் ஆணைகள் வழங்கப்படும்.மாணவர்கள் விண்ணப்ப நகல், மாணவ,மாணவியர் மற்றும் பெற்றோரின் 3 புதிய புகைப்படம், வங்கி joint account பாஸ்புக் நகல், இருப்பிட சான்று நகல், வருமான சான்று நகல், ஜாதி சான்று நகல், ஆதார் நகல், பான் கார்டு நகல், கல்லூரியிலிருந்து பெறப்பட்ட bonafide சான்றிதழ் மற்றும் கல்விக்கட்டண விபரம், பத்து, பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் இளநிலை பட்டப்படிப்பின் மதிப்பெண் சான்றிதழ்கள், முதல் பட்டதாரியாக இருப்பின் அதற்கான சான்று மற்றும் கலந்தாய்வு மூலமாக பெறப்பட்ட சேர்க்கைக்கான ஆணை உள்ளிட்ட ஆவணங்களுடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
வாட்ஸ்அப் வியூ ஒன்ஸ் மெசேஜ் அம்சத்தின் படி, நீங்கள் பிறருக்கு அனுப்பும் புகைப்படம் அல்லது வீடியோவை ஒரு முறை மட்டுமே பார்க்க அனுமதிக்கும். மீண்டும் ஒரு முறை பார்க்க நினைத்தால் கூட, வாட்ஸ் அப் உங்களை அனுமதிக்காது. பல நேரங்களில் பாதுகாப்பு சிக்கலில் சிக்கியதால் இப்போது நிறுவனம் அதன் பயனர்களுக்கான பிரைவசி பாதுகாப்பு, நடவடிக்கையை வலுப்படுத்தி வருகிறதுஇது வரை வாட்ஸ்அப் இல் அனுப்பப்படும் ,வியூ ஒன்ஸ் மெசேஜ்களை பெறுநர்கள், ஒரு முறை மட்டுமே பார்க்க முடிந்தது. இருப்பினும், இதில் உள்ள தகவல்கள் ஸ்க்ரீன் ஷாட் எடுக்க, வாட்ஸ்அப் அனுமதித்திருந்தது. சிலர் வியூ ஒன்ஸ் மெசேஜ் தகவலை ஸ்கிரீன் ரெக்கார்ட் செய்தும், பதிவும் செய்ததால் இது பாதுகாப்பு சிக்கலை மோசமாக்கியது.இதன்படி, இனி எந்த வாட்ஸ்அப் பயனர்களும் வியு ஒன்ஸ் மெசேஜ்களை , ஸ்கிரீன்ஷாட் எடுக்கவோ அல்லது ஸ்கிரீன் ரெக்கார்ட் செய்யவோ முடியாது என்று முக்கியமான விதியாகவே அறிவித்துள்ளது.எடுக்கும் பட்சத்தில் வாட்ஸ் அப் உங்களுக்கு கிரே நிற பாப் அப் எச்சரிக்கை மெசேஜை அனுப்பும். மீறி எடுக்கும் பட்சத்தில் வாட்ஸ் அப் உங்களுக்கு, கிரே நிற பாப் அப் பிரைவசி, விதியை மீறி விட்டீர்கள் என எச்சரிக்கை மெசேஜை அனுப்பும். நீங்கள் தவறாக பயன்படுத்தினால் உங்கள் வாட்ஸ்அப் கணக்கு முற்றிலுமாக முடக்கப்படும்.வியூ ஒன்ஸ் மெசேஜ்களை ஷேர் செய்யவும் முடியாது. அதேபோல் இனி பயனர்கள் வியூ ஒன்ஸ் மெசேஜ்களை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து ஷேர் செய்யவும் , பகிரவும் முடியாது. வாட்ஸ்அப் இனி பிரைவசி கண்ட்ரோலை மிகவும் பாதுகாப்பானதாக மாற்றப் போவதாகத் தெரிவித்துள்ளது. வாட்ஸ்அப்பின் இந்த புதிய அப்டேட் பற்றிய விபரங்களை அனைவரிடமும் தெரியப்படுத்துங்கள்.
நிகழும் மங்களகரமான கொல்லம் 1198-ஆம் ஆண்டு ஸ்ரீ சுபகிருது வருடம் மார்கழி மாதம் 1-ஆம் நாள் (16-12-2022) வெள்ளிக்கிழமை அஷ்டமி திதியும், உத்திர நட்சத்திரமும். சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் அன்று மஹாதேவாஷ்டமி பூஜை நடைபெற உள்ளது. அன்று அதிகாலை 4:00 மணிக்கு நடை திறந்து அபிஷேகம், அலங்காரம் நடைபெறும்.மதியம் 11:00 மணியளவில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று அதனைத் தொடர்ந்து சிறப்பு அன்னதானம் நடைபெறும், மாலை 4:30 மணிக்குஅருள்மிகு காலபைரவருக்கு அபிஷேகமும், இரவு 7:30 மணிக்கு சிறப்பு பூஜையும் நடைபெறும். அதனைத் தொடர்ந்து பிரசாதம் வழங்கப்படும். ஆகையால் அனைத்து சிவனடியார்களும், ஆன்மீகச் சான்றோர்களும் அனைத்து பக்த மெய்யன்பர்களும் கலந்து கொண்டு, தெய்வங்களின் திருவருளைப் பெற்றுச் செல்லுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.திருக்கோயில் நிர்வாகம்செயல் அலுவலர்M.K.முத்துராஜா, பி.காம்., பி.எல்.,இரா.ராஜா, எம்.ஏ., பி.எல்.,
விருதுநகர் மாவட்டத்தில் நேரு யுவ கேந்திரா சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட அளவிலான சிறந்த இளைஞர்,மகளிர் மன்ற விருது வழங்கப்படுகிறது. இவ்வாண்டும் சிறப்பாக செயல்பட்ட இளைஞர்,மகளிர் மன்றத்திற்கு விருது வழங்குவதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றது.தகுதி:மாவட்டஅளவிலானசிறந்த இளைஞர் மகளிர் மன்ற விருது(ஒன்று):1. நேரு யுவ கேந்திராவிலும் மாவட்ட பதிவாளர் அலுவலகத்திலும் பதிவுசெய்து இருக்க வேண்டும.2. மேலும் பதிவு செய்த மன்றங்கள் 2021-2022-ம் ஆண்டிற்கான வரவு செலவுக் கணக்கினை தணிக்கை செய்திருத்தல் அவசியம்.3. 01-04-2021 முதல் 31-03-2022 வரை சிறப்பாக பணியாற்றி இருப்பதற்கான ஆதாரங்கள் இணைக்கப்பட வேண்டும்4. ரூ.25000/- ரொக்கப்பரிசும், சான்றிதழும் வழங்கப்படும்.5. இதில் தேர்வு செய்யப்படும் மன்றம் மாநில அளவிலான இளையோர் மன்ற விருதுக்கு தேர்வுசெய்து அனுப்பப்படும்.விருது பெறத் தகுதியுள்ள மன்றங்கள் விண்ணப்ப படிவங்களை மாவட்ட நேரு யுவ கேந்திரா அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவங்களை 15.12.2022-ம் தேதிக்குள் மாவட்ட நேரு யுவ கேந்திராஇகுமாரசாமி ராஜாநகர், மகளிர் காவல் நிலையம் அருகில், விருதுநகர் - 626 002 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாக சமர்பிக்கும் படி, நேரு யுவகேந்திரா மாவட்ட இளைஞர் அலுவலர் அவர்கள் கேட்டுக்கொள்கிறார்.