25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வைப்பாறு, வைகை ஆறுகள் புத்துயிர் பெற மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டும் >> இயந்திரம் மூலம் நெல் நடவு பணியை நாடும் விவசாயிகள். >> (நவ. 6) முதல் ராஜபாளையத்தில் புத்தக கண்காட்சி >> அய்யனார் கோவில் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை. ஒத்துழைக்காத பொதுமக்கள். யாருக்கு நஷ்டம்?. >> எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் துவக்க விழா >> 227 படுக்கைகளுடன் இராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரி  தரம் உயர்வு >> இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >>


முக்கிய அறிவிப்பு

Sep 09, 2023

தேசிய கோபால ரத்ன விருதுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்

கிராமப் பொருளாதாரத்திலும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெருக்குவதிலும் கால்நடை பராமரிப்புத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. மழை பொய்த்து போகின்ற காலங்களில் கால்நடைகளை நம்பியே விவசாயிகள் வருமானத்தை ஈட்டிக்கொள்ள ஏதுவாக அமைகிறது.  ஆகையினால் ஒன்றிய அரசானது பல்வேறு திட்டங்களை தீட்டி குறிப்பாக தேசிய கால்நடை இயக்கத்தின் மூலம் கால்நடைகளுக்கு காப்பீடு, தேசிய செயற்கைமுறை கருவூட்டல் பணி திட்டம் மற்றும் கால்நடை தொழில் சார்ந்த தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் திட்டம் ஆகியவற்றை மானியத்துடன் விவசாயிகளின் பங்களிப்போடு செயல்படுத்தி வருகிறது.மேலும், தேசிய கால்நடை நோய்கள் கட்டுப்பாட்டு திட்டத்தின் மூலம் அனைத்து கால்நடைகளுக்கும் இலவசமாக காலத்திய தடுப்பூசிப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிக பால் உற்பத்தி செய்யவும் மதிப்பு கூட்டு பொருட்கள் உற்பத்தி செய்யவும் பல்வேறு இணையதளங்கள் மூலம் பதிவு செய்து விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். ஆகையினால் முன்னோடி விவசாயிகள், செயற்கைமுறை கருவூட்டல் பணியாளர்கள் மற்றும் கூட்டுறவு பால் உற்பத்தி சங்கங்கள் தேசிய அளவில் சிறப்பாக செயல்பாட்டில் இருக்கிறவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்க ராஷ்ட்ரிய கோகுல் இயக்கம் மூலம் ஒன்றிய அரசின் இணையதளத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.முதலாவதாக முன்னோடி விவசாயிகள் தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட உள்நாட்டு  50 பசுவினம் மற்றும் 17 எருமை இனங்களில் ஒன்றினை பராமரித்து நல்ல முறையில் கால்நடை செல்வத்தை பெருக்கி சிறப்பாக பண்ணை தொழிலை மேற்கொள்ளும் விவசாயிக்கு தேசிய அளவில் விருது வழங்கப்பட இருக்கிறது.  அடுத்ததாக கால்நடைகளுக்கு செயற்கைமுறை கருவூட்டல் பணியினை மேற்கொண்டு சிறப்பாக கிராமங்களில் பணிபுரிந்து அரசின் திட்டங்களில் பங்கேற்று மக்களுக்கு அதனை கொண்டு சென்ற விதத்தில் சிறப்பாக பணிபுரியும் 90 நாட்கள் பயிற்சி பெற்ற செயற்கைமுறை கருவூட்டல் பணியாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட இருக்கிறது.  அடுத்ததாக சிறப்பாக செயல்படும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் குறைந்தது ஒரு நாளைக்கு 100 லிட்டர் பால் சேகரிப்புடன் 50 உறுப்பினர்கள் உள்ளடக்கியதோடு அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் செவ்வனே செயல்பட்டு கிராமப் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும்படியாக இயங்கி வரும் சங்கங்களுக்கு தேசிய அளவில் விருது வழங்கப்பட இருக்கிறது.இந்த விருதின் பெயர் தேசிய கோபால் ரத்னா விருது ஆகும்.  இவ்விருது தேசிய பால் தினமான நவம்பர் 26 அன்று ஒன்றிய அரசால் வழங்கப்படும். இவ்விருதில் சான்றிதழ், மற்றும் ரொக்கப்பணம் வழங்கப்படுகிறது. முதல் பரிசாக 5 இலட்சம், இரண்டாவது பரிசாக 3 இலட்சம், மூன்றவாது பரிசாக 2 இலட்சம் ரொக்கத்தொகை தேர்வு செய்யப்பட்ட மூன்று இனங்களிலும் வழங்கப்பட இருக்கிறது.   விண்ணப்பதாரர்கள் ஒன்றிய அரசின் கால்நடை பராமரிப்புத்துறை, மீன்வளம் இணையதளத்தில் (https://awards.gov.in/Home/Awardpedia?MinistryId=DO23&OnGoingAwards=1& ptype=Phttps://awards.gov.in/Home/AwardLibrary) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. விண்ணப்பிக்க செப்டம்பர் 2023,  15 ஆம் தேதி  இறுதி நாளாகும்.சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு சிறந்த விவசாயி, சிறந்த செயற்கைமுறை கருவூட்டல் பணியாளர் மற்றும் சிறப்பாக செயல்படும் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்டு அதற்குரிய விருது வழங்கப்பட இருப்பதால் தகுதியான நிறுவனம் மற்றும் விவசாயிகள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.இவ்விருது தொடர்பாக கூடுதல் விவரங்கள் தேவைப்படின் இராசபாளையத்திலுள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மற்றும் விருதுநகரிலுள்ள கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர்முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I AS.,அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Sep 07, 2023

செப்டம்பர் 1 முதல் . புது ரூல்ஸ்

ஒவ்வொரு மாதமும் பல்வேறு நிதி சார்ந்த விதிமுறைகள் மாறுகின்றன. அப்படிப்பட்ட சூழலில் வருகிற செப்டம்பர் மாதத்திலும் பல விதிகளில் மாற்றம் வருகிறது. அவை உங்கள் பாக்கெட்டை நேரடியாக பாதிக்கும். சமையல் சிலிண்டர்களின் விலை ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் மாறுவது வழக்கம். அந்த வகையில் செப்டம்பர் 1ஆம் தேதியும் எல்பிஜி சிலிண்டர் விலையில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனுடன், சிஎன்ஜி மற்றும் பிஎன்ஜி விலையிலும் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்படுவதாக இந்திய ரிசர்வ் வங்கி கடந்த மே மாதம் அறிவித்தது. 2023 மே 23ஆம் தேதி முதல் 2023 செப்டம்பர்30 வரை2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு அல்லது டெபாசிட் செய்வதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் இன்னும் 2000 ரூபாய் நோட்டை மாற்றவில்லை என்றால் அதை விரைவாகச் செய்யுங்கள்.இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) மக்களுக்கு இலவச ஆதார் புதுப்பிப்பு சேவைகளை வழங்குகிறது. இருப்பினும், இந்த வசதி செப்டம்பர் 14ஆம் தேதியன்று காலாவதியாகும். இதுபோன்ற சூழ்நிலையில், பத்து ஆண்டுகளாக ஆதார் அட்டையை புதுப்பிக்காதவர்கள் செப்டம்பர் 14ஆம் தேதிக்குள் புதுப்பிக்க வேண்டும் என்று ஆதார் அமைப்பு தெரிவித்துள்ளது.பான் கார்டு மற்றும் ஆதார் கார்டுகளை இணைக்காதவர்கள் செப்டம்பர்30ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்று அரசு மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்தியுள்ளது. எனவே உடனடியாக இவற்றை இணைத்து விடுவது நல்லது.உங்கள் ஆதார் மற்றும் பான் இணைக்கப்படவில்லை என்றால் உங்கள் டிமேட் கணக்கும் பாதிக்கப்படும். இது சம்பந்தமாக, வர்த்தகம் மற்றும் டிமேட் கணக்கு வைத்திருப்பவர்களுக்கான பதிவு அல்லது பரிந்துரையை திரும்பப் பெறுவதற்கான காலக்கெடுவை செப்டம்பர் 30 செபி நீட்டித்துள்ளது.இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ’வி கேர்’ திட்டம்செப்டம்பர்30 சிறப்புFD திட்டத்தைக் கொண்டுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், மூத்த குடிமக்கள் இந்தத் திட்டத்தில் செப்டம்பர் 30 வரை முதலீடு செய்யலாம்.ஐடிபிஐ வங்கி சிறப்புFD திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளஅம்ரித் மஹோத்சவ் திட்டம். ஐடிபிஐயின் இந்த ஃபிக்சட் டெபாசிட் திட்டமானது375 நாள்FD திட்டமாகும். இதில் வழக்கமான வாடிக்கையாளர்கள் 7.10% லாபம் பெறலாம். அதேபோல, மூத்த குடிமக்கள் 7.60% வருமானத்தை பெறலாம்.நாட்டின் முன்னணி தனியார் துறை வங்கியான ஆக்சிஸ் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு மேக்னஸ் கிரெடிட் கார்டு வசதியை இலவசமாக வழங்குகிறது. ஆனால் செப்டம்பர்1 முதல் மேக்னஸ் கிரெடிட் கார்டில் வருடாந்திர கட்டண தள்ளுபடி வசதி வழங்கப்படாது. அதாவது வாடிக்கையாளர்களுக்கு கட்டணம் விதிக்கப்படும் என்று அவ்வங்கி தெரிவித்துள்ளது.

Sep 05, 2023

வால்பாறைபொள்ளாச்சி இடையே இயக்கப்படும் அரசு பஸ்களில் கட்டணம் குறைக்கப்பட்டு இருப்பதாக அறிவிப்பு

தமிழகத்தில் மக்கள் அரசு பேருந்துகளில் மக்கள் அதிகமாக பயணம் செய்கின்றனர். ஆனால் ஒரு சில பேருந்துகளில் கட்டணம் அதிகமாக இருக்கிறது. அதனால் ஏழை மக்கள் சிரமத்தில் இருக்கின்றனர். இந்நிலையில் அரசு பெண்களுக்கு இலவசமாக பேருந்து வசதி ஏற்படுத்தி கொடுத்தும் அது பல இடங்களுக்கு பொருந்தவில்லை. அந்த வகையில் வால்பாறைபொள்ளாச்சி இடையே இயக்கப்படும் அரசு பஸ்களில் கட்டணம் குறைக்கப்பட்டு இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.அதாவது வால்பாறை அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து பொள்ளாச்சி, கோவை, பழனி, திருப்பூர், சேலம் மற்றும் கேரள மாநிலம் மன்னார்காடு ஆகிய வழித்தடங்களில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்துகளில் ரூ.64 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது ரூ. 48 கட்டணமாக வசூலிக்கப்படும் என அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. அதனால் பயணிகள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

Sep 01, 2023

ஆதித்யா எல்-1 செயற்கைக்கோள் விண்ணில் பாயும் நேரம் அறிவிப்பு- இஸ்ரோ

இந்தியா சார்பில் நிலவின் தென் பகுதியை ஆராயக் கடந்த ஜூலை14 ஆம் தேதி விண்ணில் பாய்ந்த சந்திரயான்-3 நிலவின் ஈர்ப்பு விசைக்குள் செலுத்தப்பட்டு கடந்த23 ஆம் தேதி நிலவின் தென் துருவத்தில் இறங்கி சாதனை படைத்தது. இந்தியா முழுவதும் இந்த சாதனை கொண்டாடப்பட்டு வருகிறது.அதே சமயம் சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்1 என்ற விண்கலத்தை செப்டம்பர் மாதம்2 ஆம் தேதி காலை11.50 மணிக்கு இஸ்ரோ விண்ணுக்கு அனுப்ப உள்ளது. ஆந்திரா மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் ஆதித்யா எல் 1 விண்கலம் ஏவப்பட உள்ளது. பி.எஸ்.எல்.வி. சி 57 ராக்கெட் இந்த விண்கலத்தை சுமந்து செல்கிறது.அதே சமயம் சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல் 1 என்ற விண்கலத்தை செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி காலை11.50 மணிக்கு இஸ்ரோ விண்ணுக்கு அனுப்ப உள்ளது. ஆந்திரா மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் ஆதித்யா எல் 1 விண்கலம் ஏவப்பட உள்ளது. பி.எஸ்.எல்.வி. சி 57 ராக்கெட் இந்த விண்கலத்தை சுமந்து செல்கிறது. சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்1 விண்கலம் ஆயிரத்து475 கிலோ எடை கொண்டதாகும். பூமியில் இருந்து1.5 மில்லியன் கி.மீ. தூரம் கொண்ட சூரியனின் லெக்ராஞ்சியன் புள்ளி1 இல் நிலைநிறுத்தப்பட உள்ளது. மேலும் ஆதித்யா விண்கலத்தை நேரில் பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படும் எனஇஸ்ரோ தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டு இருந்தது.இந்நிலையில், விண்ணில் பாய தாயாராக இருக்கும் ஆதித்யா எல்1 விண்கலம்,இதனை சுமந்து செல்லும் பி.எஸ்.எல்.வி. சி57 ராக்கெட் ஆகியவற்றின் புகைப்படங்களை இஸ்ரோ எக்ஸ்(ட்விட்டர்) தளத்தில் பகிர்ந்துள்ளது. இந்த படங்கள் தற்போது சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.சூரியனைஆய்வுசெய்வதற்காகவிண்ணில்செலுத்தப்படுகிறதுஆதித்யாஎல்-1கிட்டவே நெருங்காத வல்லரசுகள்,தொட துணிந்த இந்தியாவின்ISRO- உலக விஞ்ஞானிகளை ஆட வைத்த அறிவிப்பு.ஆதித்யா எல்-1 செயற்கைக்கோள் விண்ணில் பாயும் நேரம் அறிவிப்பு- இஸ்ரோ. செப்டம்பர் இரண்டாம் தேதி காலை 11.50 மணிக்கு விண்ணில் செலுத்தப்படும் ஆதித்யா எல்-1- இஸ்ரோ."ஸ்ரீஹரிகோட்டாவில்இருந்து செப்டம்பர் 2ம்தேதி காலை 11.50 மணிக்குவிண்ணில் செலுத்தப்படுகிறது ஆதித்யா எல்-1".

Aug 24, 2023

ஆனந்தாஸ் திரு. M. B. ராதாகிருஷ்ணன் ராஜா அவர்களின் 59 வது பிறந்தநாள் விழா

ஆனந்தாஸ் திரு. M. B. ராதாகிருஷ்ணன் ராஜா அவர்களின் 59 வது  பிறந்த நாளை முன்னிட்டு ராஜபாளையம் நகைசுவை மன்றம் நடத்தும் சிறப்பு நகைசுவை விருந்து செப்டம்பர்  1 ஆம் தேதி மாலை 5.00 - 8.00 மணிக்குள்  ஆனந்தா கார்டனில் நடைபெறும். நிகழ்ச்சி அன்பாதரவு ஆனந்தாஸ் குழுமம் 

Aug 23, 2023

சந்திரயான்-3  கால்பதிக்கும் நிகழ்வின் நேரடி ஒளிபரப்பு  காட்சிகளை, அணுகக்கூடிய சில சேனல்கள். மாலை 5:20 மணிக்குத் தொடங்குகிறது

இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://isro.gov.in இல் பார்வையிடலாம்.இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ அதிகாரப்பூர்வ YouTube சேனல் https://youtube.com/watch?v=DLA_64yz8Ss ஐ பார்வையிடலாம். இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ அதிகாரப்பூர்வ Facebook பக்கமான https://facebook.com/ISRO இல் பார்க்கலாம். மற்றும், DD தேசிய தொலைக்காட்சியிலும் காணலாம்.

Aug 21, 2023

அதிகரித்து வரும் ரயில் பயணிகளிடம் டிக்கெட் முன்பதிவு தொடர்பான மோசடிகள்

 நாடு முழுவதும் அதிகளவு மக்கள் பயன்படுத்தும் போக்குவரத்து சேவையாக ரயில் சேவை உள்ளது. குறைந்த கட்டணத்தில் கிடைக்கும் பயணம் என்பதால் மக்கள் ரயில் போக்குவரத்தை அதிகம் விரும்பி வருகின்றனர். இந்நிலையில் சமீப காலமாக ரயில் டிக்கெட் முன்பதிவில் போலி செயலிகள் மூலம் அதிகளவு மோசடிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகள் ஐஆர்சிடிசி செயலி அல்லது அதன் வெப் சைட்டில் டிக்கெட்டுகளை புக் செய்வார்கள். இந்நிலையில் ஐஆர்சிடிசியில் தளத்தின் பெயரில் போலியாக எஸ்எம்எஸ்களில் சில ஃபிஷிங் இணைப்புகளை கொடுத்து பயணிகளிடம் பெருமளவில் பண மோசடி நடைபெறுவதாக இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது.இந்த மோசடிகளில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து தனது அதிகாரப்பூர்வ ரயில் கனெக்ட் மொபைல் செயலிகளை பயன்படுத்துமாறு வாடிக்கையாளர்களுக்கு ஐஆர்சிடிசி அறிவுறுத்தியுள்ளது. மேலும் ஐஆர்சிடிசியில் இருந்து அனுப்பப்படுவதாக வரும் போலி எஸ்எம்எஸ்களில் உள்ள லிங்குகளை க்ளிக் செய்ய வேண்டாம் என்றும் ஐஆர்சிடிசி கோரிக்கை விடுத்துள்ளது.போலி செயலிகளின் மூலம் பயணிகள் மோசடிக்கு ஆளானால் உடனடியாகCare@irctc.co.in என்ற இ மெயில் முகவரிக்கு உடனடியாக புகார் அளிக்குமாறும் இந்தியன் ரயில்வே அறிவுறுத்தியுள்ளது. மேலும் ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது செயலிகள் சரியானதுதானா என்று உறுதிப்படுத்திக்கொள்ளுமாறும் இந்தியன் ரயில்வே எச்சரித்துள்ளது.அதிகாரப்பூர்வ செயலிகளை தவிர மற்ற இணையத்தில் கிடைக்கும் செயலிகளை நம்ப வேண்டாம் என்றும் இந்திய ரயில்வே எச்சரித்துள்ளது. ஆன் லைன் பண மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில் ஐஆர்சிடிசி பெயரிலும் போலி புழக்கத்தில் இருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Aug 11, 2023

இராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கத்தின் 85-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம்

இராஜபாளையம் தொழில் வர்த்தக  சங்கத்தின் 85-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம்13.08.2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணிக்கு நமது நகர் தென்காசி சாலையில் உள்ள மாண்புமிகு P.S. குமாரசாமிராஜா நூற்றாண்டு ஞாபகார்த்த திருமண மண்டபத்தில் நமது சங்கத் தலைவர் உயர்திரு. P.R. வெங்கட்ராம ராஜா அவர்கள் (சேர்மன். ராம்கோ குழுமம்) தலைமையில் நடைபெறும். உயர்திரு.A.M.விக்கிரமராஜா அவர்கள்(மாநிலதலைவர் தமிழ்நாடு வணிகர்சங்கங்களின் பேரமைப்பு )முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுவார்கள்.தாங்கள் இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு வருகைதந்து சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். தங்கள் அன்புள்ள- M.C.வெங்கடேஸ்வர ராஜா, R.நாராயணசாமி (செயலாளர்கள் ),இராஜபாளையம்.குறிப்பு : தலைவர் அரிக்கும் இரவு விருந்தில் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.

Aug 08, 2023

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தாம்பரத்தில் தொடர்ந்து நின்று செல்லும்  தேஜஸ் விரைவு ரயில்.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தாம்பரத்தில் தொடர்ந்து நின்று செல்லும் , என தென்னக ரயில்வே அறிவிப்பு.சென்னை எழும்பூரில் இருந்து மதுரை செல்லும், தேஜஸ் விரைவு ரயில் இனி ,தாம்பரம் ரயில் நிலையத்திலும் நின்று செல்லும்.ஆகஸ்ட்26ஆம் தேதி வரை தாம்பரத்தில் நின்று செல்லும், என ஏற்கனவேஅறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தொடர்ந்து நின்று செல்லும் என அறிவிப்பு.

Jun 30, 2023

இந்தியா முழுவதும் பிரதமர் நரேந்திர மோடி. U. C. C. சீரான சிவில் கோட்.  சீரான சிவில் சட்டத்தை கொண்டு வர வேண்டும்

இந்தியா முழுவதும் பிரதமர் நரேந்திர மோடி. U. C. C. சீரான சிவில் கோட்.  சீரான சிவில் சட்டத்தை கொண்டு வர வேண்டும்.  இதற்கு அந்நாட்டு குடிமக்கள் தங்கள் கருத்தை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.  ஏற்கனவே இரண்டு நாட்களில் 04 கோடி முஸ்லிம்களும் 02 கோடி கிறிஸ்தவர்களும் UCC க்கு எதிராக வாக்களித்துள்ளனர்.  எனவே, இறுதித் தேதியான ஜூலை 6 ஆம் தேதிக்கு முன், நாட்டில் உள்ள அனைத்து இந்துக்களும் UCC க்கு ஆதரவாக வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  UCC ஐ ஆதரிக்கவும், நாட்டைக் காப்பாற்றவும் 9090902024 என்ற எண்ணிற்கு தவறவிட்ட அழைப்பை வழங்கவும்.  உங்கள் அழைப்பு UCC க்கு ஆதரவாகப் பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படும்.  இந்த தகவலை அனைத்து இந்துக்களுக்கும் பகிரவும்.  9090902024 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்த அனைவருக்கும் வணக்கம்.  ஜெய் பாரத் மாதா. 

1 2 ... 11 12 13 14 15 16 17 ... 20 21

AD's



More News