25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


சமையல் குறிப்பு

Jun 06, 2023

சமையல் மேடை பளிச்சென்று மின்ன.....

பருப்பை சேகரித்து வைத்திருக்கும் பாத்திரத்தில் நாலைந்து காய்ந்த மிளகாயைப் போட்டு வையுங்கள். பருப்பு நிறம் மாறவோ, பூஞ்சை பிடிக்காவோ செய்யாதுஅடுப்பு, சமையல் மேடை, அடுப்பின் பின்புறம் என எல்லா இடங்களிலும் எண்ணெய் பிசுக்கு ஒட்டி இருந்தால், டைல்ஸை சாதாரண துணியால் துடைத்த பின் வெதுவெதுப்பான நீரில் கொஞ்சம் சலவைச் சோடாவைக் கலந்து பிசுக்கு பிடித்த இடங்களில் பூசிவிட்டு, உலர்ந்த துணியால் துடைத்தால் பளிச்சென்று மின்னும்.உப்பு ஜாடியில் சிறிதளவு சோள மாவைப் போட்டுவைத்தால், உப்பு நீர்த்துப்போகாமல் இருக்கும்.மட்டன், சிக்கன் போன்ற இறைச்சி வகைகளை மிக்ஸியில் அரைத்து எடுத்ததும் உடனடியாக மிக்ஸி ஜானர் சுத்தம் செய்ய வேண்டும். ஜாரினுள் இரண்டு பிரட் துண்டுகளைப் போட்டு அரைத்தெடுத்தால், பிசுக்கும் வாடையும் இருக்காது

Jun 05, 2023

பூரி புஸ்சுன்னு குண்டாக வர ....

பூரி புஸ்சுன்னு குண்டாக வர வேண்டும் என்றால் நீங்கள் பிசைந்த மாவை குளிர் சாதன பெட்டியில் வைக்கவும். பின்னர் சமைப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்னதாக எடுத்து செய்யும் போது பூரி நன்றாக வரக்கூடும்.எண்ணெய் பலகாரங்கள் டப்பாவில் வைக்கும்போது உப்பைத் துணியில் முடிந்து வைத்தால் காரல் வாடை வராது.சீடை செய்யும்போது அது வெடிக்காமல் இருப்பதற்காக சீடையை ஊசியால் குத்தியபிறகு எண்ணெய்யில் போட்டால் வெடிக்காதுரவா உப்புமா மீந்துவிட்டால் அதில் சிறிதளவு  அரிசி மாவைக் கலந்து வடை போல் தட்டி எண்ணெயில் பொரித்து எடுத்தால் சுவையாகஇருக்கும்  ரவா மைதா உள்ள டப்பாவில் பூச்சி, புழுக்கள் வராமல் இருப்பதற்கு கொஞ்சம் வசம்பை தட்டிப் போட்டால் பூச்சி, புழுக்கள் வராது.

Jun 03, 2023

சப்பாத்தி பிசையும்போது.....

சப்பாத்தி மாவு பிசையும் போது சிறிதளவு அரிசி மாவையும் சேருங்கள். சப்பாத்தி அதிக மென்மையாக இருக்கும்.சப்பாத்தி பிசையும்போது அதில் எண்ணெய் சேர்ப்பதற்கு பதில், வெண்ணெய் சேருங்கள். சப்பாத்தி அதிக ருசி தரும்..துவையல் தேவைக்கு அதிகமாக இருந்தால், குறிப்பிட்ட அளவில் தோசை மாவை எடுத்து ,அதில் துவையலை கலக்கி தோசையாக சுட்டு விடுங்கள்.  தோசை வித்தியாசமான ருசி தான்தோசை ஊற்றும் போது சுண்டுவதாய்த் தெரிந்தால், கல்லில் சிறிதளவு எண்ணெயை ஊற்றி ஒரு சிட்டிகை உப்பையும் போட்டுக் கல்லைத் தேய்த்துவிட்டு பிறகு ஊற்றினால் தோசை சரியாக வரும்.பிளாஸ்டிக் சாமான்களில் வரும் நாற்றத்தைப் போக்க ,உப்பு கலந்த நீரினால் நன்றாகக் குலுக்கிக் கழுவினால் நாற்றம் தானாய்ப் போய்விடும்.

Jun 02, 2023

மீன் வறுப்பதற்கு மசால் தயாரிக்கும் போது

ஊறுகாய் செய்யும் போது உப்பை லேசாக வறுத்து போட்டால் ஊறுகாயின் மேல் வெண்மை நிறம் படியாது."முட்டையை வேக வைக்கும் போது தண்ணீருடன் 2 சொட்டு வினிகர் சேர்த்து வேக வைத்தால் முட்டை உடையாமல் இருக்கும். பாலில் தண்ணீர் சேர்த்திருக்கக் கூடாது. அப்படியானால்தான் கெட்டியான தயிர் கிடைக்கும். பாலில் தண்ணீர் சேர்க்கப்பட்டிருந்தால் லேசான தீயில் பாலை வைத்து வற்றச் செய்ய வேண்டும்.மீன் வறுப்பதற்கு மசால் தயாரிக்கும் போது அதில் சிறிதளவு புதினா, மல்லி இலை, கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு, சிறிய வெங்காயம் போன்றவைகளை அரைத்து சேருங்கள். அவைகளை மீனில் பூசி, ஒருமணி நேரம் வைத்துவிட்டு பின்பு வறுத்தால் மீனுக்கு அதிகசுவை கிடைக்கும்.சூடான எண்ணெயில் ஒரு தேக்கரண்டி மைதா சேர்த்து கிளறிவிட்டு பின்பு மீனை வறுங்கள். அவ்வாறு செய்தால் மீன் வாணலியில் ஒட்டிப் பிடிக்காது.

Jun 01, 2023

இட்லி உப்புமா வறண்டு போகாமல் இருக்க....

புதிய "ஜாம்" பாட்டிலை திறக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், பாட்டிலை தலைகீழாக சுடுநீரில் சிறிது நேரம் பிடியுங்கள் பின்பு எளிதாக திறந்து விடலாம்.முட்டையை வேக வைக்கும் பொழுது ஐந்து சொட்டுகள் கடலை எண்ணெய் சேர்த்து, கொஞ்சம் கல் உப்பு போட்டு வேக வைத்தால் முட்டையை வேகவைத்த பின் உரிக்கும் பொழுது கொஞ்சம் கூட ஒட்டாமல் பிரித்து விடலாம்.கறிவேப்பிலை அதிகமாக இருந்தால், அவைகளை கழுவி துடைத்து, வாழை இலையில் மூடிக்கெட்டி 'பிரிஜ்'ஜில் வைத்து விடுங்கள்.20 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.இட்லி அதிகமாக செய்து விட்டால் வீணாகாமல் இருக்க சிலர் உப்புமா செய்வது வழக்கம். அப்படி இட்லி உப்புமா செய்யும் பொழுது இட்லிகளை தண்ணீரில் இரண்டு நிமிடம் போட்டு, பின்னர் தண்ணீர், இல்லாமல் உதிர்த்துவைத்து தாளித்து உப்புமா செய்தால் உப்புமா வறண்டு போகாமல் மிருதுவாக இருக்கும்.

May 31, 2023

பாசிப்பருப்பு முள்ளு முறுக்கு

வீட்டில் இட்லி தோசைக்கு மாவு. அரைக்கும் பொழுது அடுத்த நாள் ஊற்ற நாம் கொஞ்சமாக உப்பு போட்டு கரைத்து வெளியே வைத்து விடுவோம். சில நேரங்களில் மாவு பொங் ஊற்றி நம் வேலையை இருமடங்காக்கி விடும். இனி அப்படியே ஆகாமல் இருக்க மாவை கரைத்து வைக்கும் போது, அதன் உள்ளே நல்ல ஒரு நீளமான டம்ளரை தலைகீழாக உள்ளே சொருகி ஒரு சுற்று சுற்றி விட்டு அப்படியே வைத்து விடுங்கள். இப்படி வைக்கும் போது மாவு புளித்து பொங்கிd ஊற்றாமல் இருக்கும்.பாசிப்பருப்பு ஒரு டம்ளர் எடுத்து தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக வைக்கவும். வெந்த பருப்பை நன்கு மசித்துக் கொண்டு, அதனுடன் நான்கு டம்ளர் அரிசி மாவு, உப்பு, காரப்பொடி, பெருங்காயத்தூள் சேர்த்துப் பிசைந்து, முள்ளு முறுக்கு செய்து  பாருங்கள். டால்டா, வெண்ணெய் சேர்க்காமலேயேமொறு மொறுவென்று வாயில் கரையும் இந்த  முறுக்கு..பூண்டினை சுலபமாகஉரிப்பதற்கு சிறிது நேரம் வெயிலில் எடுத்து வைத்த பிறகு உரித்தால் பூண்டு. தோலினை எளிமையாக உரிக்கலாம்.வெங்காயம் நறுக்குவதற்கு முன் கத்தியை சூடு செய்து விட்டால் கண்களில் எரிச்சல் இருக்காது.

May 30, 2023

வீடே மணக்கும் சாம்பார்

 துவரம் பருப்பு வேக வைக்கும் பொழுது ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, இஞ்சி பூண்டு சிறிதளவு தட்டிப் போட்டால் . பருப்பும் வேகமாக வெந்து விடும். சாம்பாரின் ருசியும் அலாதியாக இருக்கும். வீடே மணக்கும். முருங்கைக்கீரையில் நம் உடலுக்கு தேவையான எண்ணற்ற சத்துக்கள் உள்ளன. ஆனால் பெரும்பாலான வீடுகளில், முருங்கைக்கீரையில் உள்ள காம்பை எடுத்து சமைப்பதும் போதும், என ஆகிவிடும் என்று இதை சமைக்கமாட்டார்ககள் ஆனால் அது அவ்வளவு கஷ்டம் இல்லங்க நீங்கள் முருங்கை கீரையில் உள்ள பெரிய காம்புகளை மட்டும் நீக்கி விட்டு எடுத்து கொள்ளுங்கள். இதை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அந்த கீரை முழுகும் வரை தண்ணீர் சேர்த்து கொள்ளுங்கள் அதில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து அசி கொள்ளுங்கள்.இதை 5 நிமிடம் அந்த தண்ணீரிலே வைத்து விட்டு, பிறகு அதில் உள்ள கீரையில் உள்ள காம்பு   அடியில் தங்க ,கீரையை எடுத்து சமைக்கலாம்.சமையலறையில் குப்பைதொட்டியை வைக்கக் கூடாது.அந்தந்த நேரத்தில் சேகரிக்கும்சமையல் கழிவுகளைஉடனுக்குடன் அப்புறப்படுத்தி விட வேண்டும். சிலர் நாள் முழுக்க குப்பை தொட்டியில் கழிவுகளை போட்டுக் கொண்டே வருவார்கள். அதை மறுநாள் தான் குப்பைக்கு கொண்டு செல்வார்கள். இது போல ஒரு நாள் முழுவதும் சேகரிக்கும் குப்பை கழிவுகள் சமையல் அறையில் இருந்தால் அங்கு அன்னபூரணியின் வாசம் குறையும். இதனால் வறுமை உண்டாகும்.

May 29, 2023

வெல்லம் கெடாமல் இருக்க ....

சர்க்கரை, வெல்லம், நாட்டு சர்க்கரை, கருப்பட்டி போன்ற இனிப்பு பொருட்கள் வைத்திருக்கும் டப்பாவில் நான்கு கிராம்பு துண்டுகளை போட்டு வையுங்கள். இந்த வாசத்திற்கு ஒரு எறும்பு கூட பக்கத்தில் வராது.இட்லி அரிசியுடன் உளுந்துக்குப் பதில், வெந்தயம் சேர்த்து அரைத்து சிறிது நேரம் ஊறிய பின் தோசையாக ஊற்றி சாப்பிட்டால், சுவை கூடுவதுடன் உடலுக்கும் ஏற்றதாக அமையும்,தேங்காய் வைத்து துவையல் அரைக்கும் போது மிதமான தீயில் தேங்காயை வதக்கி விட்டு அரைத்தால் விரைவில் கெட்டு போகாது. காரல் வாசனை வராது.வெயில் காலத்தில் வதக்காமல் அரைத்தால் துவையல் 2 மணி நேரம் கூட நன்றாக இருக்காது. வதக்கி அரைக்கும் துவையல் ஃப்ரிட்ஜில் வைத்தால் வெயில் காலத்தில் 1 நாள் இருக்கும். வெளியில் வைத்தால் 5-6 மணி நேரம் நன்றாக இருக்கும்.

May 26, 2023

தோசை சரியாக வர.....

தோசை ஊற்றும்போது சுண்டுவதாய் தெரிந்தால் கல்லில் சிறிதளவு எண்ணையை ஊற்றி ஒரு சிட்டிகை உப்பையும் போட்டு கல்லை தேய்த்து விட்டு  தோசை ஊற்றினால், தோசை சரியாக வரும்.இஞ்சி,,மாதுளம்பழசாறு,தேன்கலந்து குடிக்க இருமல் தீரும்.மண்பானையில் உள்ள நீர் சரியான விகிதத்தில்,குளிர்ச்சியில் வைத்திருக்க உதவும்.இது தொண்டைக்கு இதமாகவும், மென்மையாகவும் இருக்கும்.இதனால் சளி இருமல் உள்ளவர்கள் கூட பயப்படாமல் மண்பானைத் தண்ணீரை அருந்தலாம்.பிரிட்ஜ் தண்ணீர் குடித்தால் ,ஏற்படுவது போல சளி, இருமல் ,தொல்லை எதுவும் இருக்காது.ஏலக்காய் மனதிற்கு தெளிவையும், இதயத்திற்கு அமைதியையும், சந்தோசத்தையும் தரும்.வயிற்றுபகுதியிலும்,நுரையீரலிலும் இருக்கும்,அதிகப்படியான  நீரை நீக்கும்.

May 24, 2023

சாதம் உதிரி உதிரியாய் இருக்க

தக்காளி, எலுமிச்சை, புளி சாதம் செய்கையில் சாதத்தை நல்லெண்ணெய் விட்டு கிளரி பின் செய்தால் சாதம் உதிரி உதிரியாய் இருக்கும்.தக்காளியை நறுக்கும் உடைந்து போகும் அவ்வாறு உடையாமல் இருக்க ஒரு மணி நேரம் தக்காளியை ஃப்ரீசரில் வைத்திருக்கவும் நன்றாக குளிர்ந்து விடும் பின்பு நறுக்கினால் உடையாமல் வட்ட வட்டமாக நறுக்கி எடுக்கலாம்.தோசை மாவிற்கு அரிசியுடன் ஜவ்வரிசி சேர்த்து ஊறவைத்தால் தோசை மொறுமொறுப்பாக இருக்கும். பூரி மாவில் தண்ணீருக்கு பதில் பால் சேர்த்து ஊறவைத்தால் சுவையாக இருக்கும்.உப்பு மஞ்சள் எலுமிச்சை சாறு வெள்ளம்சேர்த்து 30நிமிடம் ஊறவைத்தால் பாகற்காய் கசக்காது.வடை எண்ணை உறியாமல் இருக்க வெந்த உருளைக் கிழங்கு மசியலைசேர்க்கவும்.தண்ணீர் கலந்த மணலுக்குள் இஞ்சியை புதைத்து வைத்தால் அதிக நாட்கள் பிரஷ்ஷாக இருக்கும்.

1 2 ... 13 14 15 16 17 18 19 20 21 22

AD's



More News