எஸ்எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 95.14 சதவிகிதம் தேர்ச்சி பெற்று தமிழ்நாட்டில் ஆறாவது மாவட்டமாக நமது மாவட்டம் இடம் பெற்றுள்ளது
விருதுநகர் மாவட்டத்தில் ஏப்ரல் 2024ல் நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில், விருதுநகர் வருவாய் மாவட்டத்தில் 357 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 114 தேர்வு மையங்களில் 11,792 மாணவர்களும், 12,523 மாணவியர்களும் ஆக என மொத்தம் 24,315 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். அதில் 10,988 மாணவர்களும், 12,146 மாணவியர்களும் என மொத்தம் 23,134 மாணவர்கள் தேர்ச்சி பெற்று, தேர்ச்சி விழுக்காடு (95.14 சதவீதம்) பெற்று தேர்ச்சி சதவீதத்தில் தமிழ்நாட்டில் 6-ஆவது மாவட்டமாக இடம் பெற்றுள்ளது.
மேலும், அரசுப்பள்ளிகள்- 57, சமூக நலப்பள்ளிகள்-3 , உதவி பெறும் பள்ளிகள் - 28, பதின்மப் பள்ளிகள் -52 என மொத்தமாக 140 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
மாவட்ட அளவில் என்.கேசவப்பிரியா என்ற மாணவி 498/500 மதிப்பெண்களும் அதனைத் தொடர்ந்து வி.ஜன ஆனந்த் என்ற மாணவன் 497/500, எஸ்.சகானா பார்வதி என்ற மாணவி 497/500, எம்.யஷ்வந்த்தமன் என்ற மாணவன் 496/500 (சங்கரலிங்காபுரம், அரசு மேல்நிலைப்பள்ளி), ஜெயசூர்யா கார்த்திகேயன் என்ற மாணவன் 496/500, என்.திவாகரன் என்ற மாணவன் 496/500, எ.நந்தினி என்ற மாணவி 496/500, இ.செல்வராணி என்ற மாணவி 496/500, ஆர்.அக்ஷயா என்ற மாணவி 496/500, சி.வி.ரவீந்திரகுமார் என்ற மாணவன் 496/500, எம்.ஷாரு ப்ரீத்தி என்ற மாணவி 496/500 மதிப்பெண்கள் பெற்று இம்மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்கள்.
ஆங்கிலம் பாடத்தில் 6 மாணவர்கள், கணக்கு பாடத்தில் 687 மாணவர்கள், அறிவியல் பாடத்தில் 101 மாணவர்கள், சமூக அறிவியல் பாடத்தில் 82 மாணவர்களும் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்கள்.
0
Leave a Reply