விவசாயிகள் மற்றும் மண்பாண்டத் தொழிலாளர்கள் நீர்நிலைகளிலிருந்து கட்டணமில்லாமல் வண்டல் மண் / களிமண் எடுக்க இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்
விருதுநகர் மாவட்டத்தில் வத்திராயிருப்பு வட்டத்தில் 49 நீர்நிலைகளும், சிவகாசி வட்டத்தில் 11 நீர்நிலைகளும், இராஜபாளையம் வட்டத்தில் 44 நீர்நிலைகளும், காரியாபட்டி வட்டத்தில் 16 நீர்நிலைகளும், திருச்சுழி வட்டத்தில் 47 நீர்நிலைகளும், விருதுநகர் வட்டத்தில் 13 நீர்நிலைகளும், சாத்தூர் வட்டத்தில் 28 நீர்நிலைகளும், திருவில்லிபுத்தூர் வட்டத்தில் 46 நீர்நிலைகளும்;, அருப்புக்கோட்டை வட்டத்தில் 17 நீர்நிலைகளும், வெம்பக்கோட்டை வட்டத்தில் 12 நீர்நிலைகளும் என மொத்தம் 283 நீர் நிலைகள் தகுதி வாய்ந்த நீர் நிலைகளாக கண்டறியப்பட்டு விருதுநகர் மாவட்ட அரசிதழ் சிறப்பு வெளியீடு எண்.4, நாள்:29.06.2024 மற்றும்; மாவட்ட அரசிதழ் சிறப்பு வெளியீடு எண்.5, நாள்:01.07.2024-ன்படி அனுமதி அளித்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எனவே, விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் மேற்குறிப்பிட்டுள்ள அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள தகுதி வாய்ந்த நீர்நிலைகளிலிருந்து கட்டணமில்லாமல் வண்டல் மண் / களிமண் எடுக்க அனுமதி வேண்டி tnesevai.tn.gov.in என்ற இணையதள முகவரியில் தங்களது விண்ணப்பத்தினை பதிவு செய்து சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் அளவிலேயே இணைய வழியில் அனுமதி பெற்று பயன்பெறலாம் என மவாட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply