25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


சமையல் குறிப்பு

May 23, 2023

புதினா, மல்லி மற்றும் கறிவேப்பிலை ஃப்ரெஷ்ஷாக இருக்க

ஒரு டீஸ்பூன் மோர் கலந்த தண்ணீரில் கத்திரிக்காய் மற்றும் வாழைக்காய்களை வெட்டி வைத்தால் நிறம் அப்படியே மாறாமல் இருக்கும். தண்ணீரில் வெங்காயத்தை இரண்டாக வெட்டி ஊற வைத்து பின்னர் வெட்டினால் வெங்காயத்தில் இருக்கும் காரம் நீங்கி கண்களில் கண்ணீர் வராமல் இருக்கும்.சமையலில் தாளிக்க கடுகு சேர்க்கும் பொழுது, கடுகு போட்ட பின் ஒரு சிட்டிகை அளவிற்குமஞ்சள் தூள் சேர்த்தால்,கடுகு வெடித்து, மேலே எழுந்து சிதறாது. மஞ்சள் தூளின் பச்சை வாசமும் எண்ணெயில் போய்விடும்.வெஜ் பிரியாணி, தேங்காய் பால் சாதம் போன்றவற்றை சமைக்கும் பொழுது இஞ்சி பூண்டு கூடவே சேர்த்து பச்சை மிளகாய் மற்றும் புதினா இலைகளையும் அரைத்து வைத்துக் கொண்டால்  சாப்பிடும் பொழுது இடையிடையே புதினா தட்டுப்படாமல் இருக்கும், மேலும் புதினாவின் முழு சத்தும் நமக்கு கிடைக்கும். உணவின் சுவையும் அதிகரிக்கும்.புதினா, மல்லி மற்றும் கறிவேப்பிலைகளை எப்பொழுதும் தண்டுடன் அப்படியே வைக்கக்கூடாது. கழுவி நன்கு ஃபேன் காற்றில் காய வைத்த பின் ,இலைகளை மட்டும் கிள்ளி ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் ஸ்டோர் செய்து வைத்தால் போதும், ஒரு வாரம் வரை அப்படியே ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.

May 22, 2023

மீன் குழம்பு மணமாகவும், ருசியாகவும் இருக்க

மீன் குழம்பை அடுப்பில் இருந்து இறக்கும் முன் இரண்டு சிறிய வெங்காயத்தை தோலுடன் தட்டி குழம்பில் சேர்த்து இறக்கினால் நல்ல மணமாகவும், ருசியாகவும் இருக்கும்.மீன் குழம்பு செய்யும் போது வெந்தயம், பெருங்காயம் இரண்டையும் வறுத்து பொடி செய்து, கால் டீஸ்பூன் போட்டு இறக்கினால் நல்ல மணமாகவும், ருசியாகவும் இருக்கும்.இறாலை உரித்துக் கழுவியதும் சிறிது நேரம் மோரில் ஊறவிட்டால், வாடை குறைந்து விடும். சுவையும் கூடுதலாக இருக்கும்.இறால் நாலு நிமிடம் வெந்தால் போதும். அதற்கு மேல் வெந்தால், ரப்பரைப் போல் அழுத்தமாகி விடும். இறால் சமைக்கும் போது, இஞ்சியும் பூண்டும் அதிகம் சேர்க்க வேண்டும். மீனை எடுத்து அதன் கண்களை பார்க்க வேண்டும். மீன்களின் கண்கள் சற்று பிரகாசமாக இருந்தால் அது புதிய மீன். அப்படி இல்லாமல் அந்த மீனின்  கண்ணில் வெள்ளை நிற அடுக்கு ஒன்று இருக்கும் இப்படி இருந்தால் இது பிடித்து வந்து பல நாள் ஆன மீன் என்பதை  புரிந்து பார்த்து வாங்க வேண்டும்.

May 22, 2023

எண்ணெய் பாட்டில் சுத்தமாக இருக்க

 எண்ணெய் பாட்டில் வைக்கும் இடத்தில் எண்ணெய் பிசுக்குகள்இருக்கும் . இதற்கு எண்ணெய் பாட்டில் மூடும் இடத்திற்கு அருகில் ஒரு டிஷ்யூ பேப்பரை சுற்றி ரப்பர் பேண்ட் போட்டு விடுங்கள். அதேபோல் அடிப்புரத்தில் வீட்டில்இருக்கும் பழைய சாக்கை போட்டு வைத்து விடுங்கள். இந்த முறையில் கண்ணாடி சில்வர் பாட்டிலை பயன்படுத்தும் போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதனால் பாட்டில் எடுக்கும் போது கை வழிக்கி கீழே விழாது. சமையல் மேடையில் ஒருசொட்டு எண்ணெய் கூட வடிந்து  கிச்சன் மேடை அழுக்கு ஆகாது.

May 20, 2023

மிக்ஸி ,கிரைண்டர் சுத்தம் செய்ய

எண்ணெய் பாட்டிலை கையாளும் பொழுது திடீரென கை தவறி எண்ணெய் கீழே சிந்திவிட்டால் உடனே யோசிக்காமல் அதன் மீது கோலப் பொடியை தூவி விடுங்கள். பிறகு துடைத்துப் பாருங்கள், கொஞ்சம் கூட எண்ணெய் பசை இல்லாமல் அழகாக வந்து விடும். மிக்ஸி ,கிரைண்டர் போன்ற உபகரணங்களை சுத்தம் செய்யும் பொழுது பழைய டூத் பிரஷில், டூத் பேஸ்ட் கொஞ்சமாக வைத்து தேய்த்து கழுவி பாருங்கள், புதியது போல பளிச்சென இருக்கும்.துணி காயப் போட நைலான் கயிறை வாங்குகிறீர்கள் என்றால் நீங்கள் வாங்கியவுடன் முதலில் கொஞ்சம் சோப்பு நீரில் ஊறவைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு அலசி  பயன்படுத்திப்பாருங்கள். நீண்ட நாட்கள் அறுந்து போகாமல் இருக்கும்  உரிக்க வேண்டிய பூண்டு எல்லாம் ஒரு துணியில் போட்டு மூட்டை மாதிரி கட்டி எடுத்து கொள்ளுங்கள். நாம் காய் சீவும் சீவலில் இந்த பூண்டு ,மூட்டையை லேசா தேய்தால் போதும் உள்ள இருக்கும் பூண்டு எல்லாம் தோல் உரித்து வந்து விடும். இந்த முறையில் எவ்வளவு பூண்டு இருந்தாலும் இனி அசால்டா உரிச்சி எடுத்துடலாம்.பச்சைக்கொத்துமல்லித் தழையைப் பச்சையாகவே துவையல் அரைக்கும் போது புளி. போடுவதற்குப் பதிலாக ஒரு துண்டு மாங்காயைப் போட்டு அரைத்தால் சுவையும் மணமும், அதிகமாகும்.

May 19, 2023

அசைவ உணவுப் பொருட்கள் ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்யகூடாது

பிசைந்து வைத்த மைதா மாவு, கோதுமை மாவை அதிக நாட்கள் பிரிட்ஜில் வைக்கக் கூடாது.கோழி, ஆட்டுக்கறி போன்ற அசைவ உணவுப் பொருட்கள் சமைத்தஉணவுகளை ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்யகூடாது.சூடாக சமைத்த உணவுகளை அப்படியே பிரிட்ஜில் வைத்து விடக் கூடாது. அதே போல் ஃபிரிட்ஜில் வைத்திருக்கும் உணவினை எடுத்து சூடுபடுத்தி சாப்பிட்டு விட்டு,மறுபடியும் அதனை ஃப்ரிட்ஜில் வைப்பதால் அந்த உணவு விஷமாக மாறிவிடும்.முட்டையை ப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவதுஆரோக்கியமற்றது.அன்னாசி, கிவி பழம்,  முலாம்பழம், பூசணிக்காய், பூண்டு. வெங்காயம்,வாழைப்பழம், தேன், உருளை, இஞ்சி,மாங்காய் போன்றவற்றையும் பிரிட்ஜில் வைக்கக்கூடாது.

May 18, 2023

குக்கர் சாதம் உதிரி உதிரியாக வர...

முள்ளங்கி, காலிபிளவர் போன்ற காய்கறிகளை வாங்கும் போது நிறைய இலைகள் உள்ளதாகப் பார்த்து வாங்க வேண்டும்.நிறைய இலைகள் இருந்தால் அதில் நிறையப் புரதச் சத்து இருக்கும்.பாகற்காயை நீளவாட்டில் துண்டு போட்டு வைத்தால் விதைகள் முழுவதும் கொட்டிவிடும். பின்னர் துண்டுகளாக நறுக்கி சமையல் செய்யலாம்.கிர்ணி, வெள்ளரிப் பழங்களை மிதமான வெந்நீரில் இரண்டு நிமிடங்கள் போட்டு வைத்து பின்னர் எடுத்து உரித்தால் தோல் சுலபமாக வந்துவிடும்.உருளைக்கிழங்கு,சேனைக்கிழங்கு. வாழைக்காய், பாகற்க்காய் ஆகியவற்றை சிப்ஸ் கட்டரில் சீவி விட்டு மோரில் உப்புப் போட்டு சேர்த்து பிறகு நன்றாக பிழிந்து காய்ந்த எண்ணெயில் பொரித்தால் மொறுமொறு என்று இருக்கும்.குக்கரில் சாதம் வைக்கும் போது உதிரி உதிரியாக வருவதற்கு அரிசி ஊற வைக்கும் போது சில ஐஸ் கட்டிகளை சேர்த்து ஊற வைத்து சமைத்தால் சாதம் வெள்ளையாகவும் உதிரி உதிரியாகவும் வரும்.

May 17, 2023

வித்தியாசமான சுவையில் வெஜிடபிள் போளி

போளி செய்யும்போது வழக்கமாக தேங்காய் பூரணம் அல்லது கடலைப் பருப்பு பூரணம் உள்ளே வைப்போம் அதற்கு பதிலாக துருவிய கேரட்டுடன் வெல்லம், ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை சேர்த்து பூரணமாக்கி போளி செய்தால் வித்தியாசமான சுவையில் வெஜிடபிள் போளி ரெடி.உருளைக்கிழங்கு வறுவல் செய்யும்போது புளிப்பு தயிர் அரைக்கரண்டி ஊற்றி செய்தால் மிகவும் சு வையாக இருக்கும்.பச்சை பட்டாணிகளை வேக வைக்கும் போது சிறிதளவு வினிகர் சேர்த்தால் நிறம் மாறாமல் இருக்கும். காய்கறிகள்சமைக்கும்போது பார்லி பவுடரைசிறிதளவு சேர்த்தால் சுவையாக இருக்கும். ஆப்பத்திற்கு மாவு அரைக்கும்போதுஅதில் சிறிதளவு குளிர்ந்த பால் சேர்த்தால் ஆப்பம் அதிக மென்மையாக இருக்கும்

May 17, 2023

சாம்பாரின் சுவையை கூட்ட

சாம்பாருக்கு பருப்பு வேகவைக்கும் பொழுது ஒரு பிடிபாசிப்பருப்பையும் வேகவிட்டால்ருசி தனி தான்.சாம்பாரில் முள்ளங்கியை அப்படியே போடாமல் சிறிதளவு எண்ணெய் விட்டு வதக்கி போட்டால் சுவை கூடுதலாக இருக்கும்.வெங்காய சாம்பாருக்கு, சின்ன வெங்காயம் எட்டு வதக்கி சாம்பாருக்குஅரைக்கும் பொருட்களுடன் அரைத்தசம்பாரில் கொட்டவும். மணம் வீட்டைத்  தூக்கும்.சிறிதளவு பொரிகடலை, புழுங்கல் அரிசி இரண்டையும் வறுத்துப் பொடித்து,சாம்பார் பொடியுடன் சேர்த்தால் சாம்பார் சூப்பராக இருக்கும்.சாம்பாரில் காய்களுடன் ஒரு பெரிய நெல்லிக்காயையும் கட்பண்ணிப் போட்டு சமைத்துப் பாருங்கள். கல்யாண சாம்பாரையும் மிஞ்சிவிடும் சுவையும், சத்தும் தான்,  

May 16, 2023

நூடுல்ஸ் வேக வைக்கும் போது

நூடுல்ஸ் வேக வைக்க பயன்படுத்தும் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி சமையல் எண்ணெய் கலந்து கொதிக்க வையுங்கள். பின்பு நூடுல்ஸ் வேகவைத்தால், நூடுல்ஸ் உதிரியாக இருக்கும். உருளைக்கிழங்குகளை அதிக நாட்கள் வைத்திருந்தால் முளைவிட்டு விடும். உருளைக்கிழங்கோடு ஒரு ஆப்பிளை போட்டு வைத்தால், அப்படி முளை விடாது.கோதுமைக்குள் மாங்காயை வைத்தால், விரைவாக பழுத்து விடும்.கெட்டித் தயிர் வேண்டுமானால், பால் உறை ஊற்றி வைக்கும் போது அதில் ஒரு தேக்கரண்டி பால் பவுடர் சேருங்கள்.ரொட்டி மிகவும் காய்ந்து மொறமொறப்பாகி விட்டால், இட்லித் தட்டில் வைத்து சிறிது நேரம் ஆவியில் வைத்து எடுத்தால் ரொட்டி மிருதுவாக இருக்கும்.       

May 15, 2023

மொறுமொறு தக்காளி தோசை

தக்காளி தோசையை ஒரு முறை இப்படி சமைத்து பார்க்கலாம்.பெரிய அளவு பழுத்த தக்காளி – 1,சிறிய துண்டு – இஞ்சி,சீரகம் – 1/4 ஸ்பூன்,சோம்பு – 1/4 ஸ்பூன்,பெருங்காயப் பொடி – 2 சிட்டிகை,மிளகாய் பொடி – 1 ஸ்பூன், இவையனைத்தையும் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு தண்ணீர் விடாமல் அரைத்துக் கொள்ளவும். ஒரு சிறிய பாத்திரத்தை எடுத்து அதில் தேவையான அளவு தோசை மாவை சேர்த்துக்கொள்ளவும். பின்னர் முன்பு அரைத்துள்ள பேஸ்ட்டை அதில் சேர்த்துக் கொள்ளவும்.பிறகு இந்த மாவுக்கலவையுடன்,2 சிட்டிகை உப்பு,1 டேபிள்ஸ்பூன் கடலை மாவு ,சேர்த்து மீண்டும் நன்கு மிக்ஸ் செய்து கொள்ளவும்.இப்போது இந்த மாவுக் கலவையை5 நிமிடங்களுக்கு ஒரு மூடியால் மூடி வைத்துக்கொள்ளவும். இதற்கிடையில், தோசைக்கல்லுக்கு மிதமான சூடு சேர்த்து தோசை ஊற்ற தயார் செய்துகொள்ளவும்.பிறகு அதில் மாவை ஊற்றி அவை ஓரளவு வெந்து வரும் போது நெய் அல்லது எண்ணெய் விட்டு மொறுமொறுவென இருக்கும் தோசையை எடுக்கவும்.

1 2 ... 13 14 15 16 17 18 19 20 21 22

AD's



More News