வாழை இலையின் நன்மைகள்!
புற்றுநோய் - வாழை இலையில் பாபினால்ஸ் சுரப்பி உள்ளதால் இலையில் சாப்பிடும்போது உணவில் கலந்து புற்றுநோயைத் தடுக்க உதவுகிறது.
கிருமிநாசினி - வாழை இலையில் இருக்கும் பச்சையம் நச்சுக்கிருமிகளை அழித்து நமக்கு ஆரோக்கியமான உணவைத் தருகிறது.
வயிற்றுப் புண்கள் வாழை இலையில் இருக்கிற குளோரோஃபில் எனும் வேதிப்பொருள், நாம் சாப்பிடும் உணவை நன்கு செரிமானம் செய்ய உதவுகிறது. மேலும், வயிறு மற்றும் குடல் பகுதிகளில் இருக்கிற புண்களையும் ஆற்றுகிறது.
உணவுச் சத்துகள் வாழை இலையில் தினமும் உணவைக் கட்டி எடுத்துச் சென்று சாப்பிடுபவர்களுக்கு உணவின் சத்துகள் குறையாமல் முழுவதுமாகக் கிடைக்க வழிவகை செய்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தி - மனிதர்களின் உடலில் வாதம், பித்தம்,கபம் என்கிற முக்குணங்கள் இருக்கின்றன. இதில் ஏதேனும் ஒன்று சமநிலை மாறும் பட்சத்தில் உடல் நோய்கள் ஏற்படுகின்றன. வாழை இலையில் சாப்பிடுவதால் இந்த 3 குணங்களின் சமநிலை சீராகக் காக்கப்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்..
0
Leave a Reply