தேனில் இஞ்சியை ஊறவைத்து சாப்பிட…
இயல்பாகவே இஞ்சில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன.. வைட்டமின் C, B1, B2 போன்ற அத்தியாவசியமான அமினோ அமிலங்கள் இஞ்சியில் நிறைந்திருக்கின்றன. இதனால், இதயத்துக்கு ரத்தத்தை எடுத்து செல்லும் ரத்தநாளங்களில் அடைப்பு உண்டாவதை தடுக்கும் குணத்தை இஞ்சி பெற்றிருக்கிறது.
எனவேதான், தேனில் இஞ்சியை ஊறவைத்து சாப்பிட சொல்கிறார்கள். இதனால், கூடுதல் பலன் கிடைக்கிறது.. குறிப்பாக, வயிறு உப்புசம், வயிறு வலி, வயிறு கோளாறு போன்ற வயிறு உபாதைகள் நீங்குகின்றன. தேனில் ஊறவைத்த இஞ்சியில், தினமும் ஒரு துண்டு, வெறும் வயிற்றில் சாப்பிட்டு வரும்போது, தொப்பை மெல்ல கரைய துவங்குமாம்.
சமீபத்தில் நடந்த ஒரு ஆய்வில், இஞ்சி புற்றுநோயைத் தடுப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் செல்களை அழித்து, புற்றுநோய் உடல் முழுவதும் பரவுவதை இஞ்சி தடுக்கின்றன. ஆஸ்துமா, மூட்டுவலி, சளி, இருமல் தொந்தரவு உள்ளவர்கள் அனைவருக்குமே தேனில் ஊற வைத்த இஞ்சி மிகவும் நல்லது. உடலுக்கு கெடுதலை தரும் ப்ரீ-ராடிக்கல்களினால் ஏற்படும் அபாயத்தை இஞ்சி தடுப்பதுடன், டிஎன்ஏ பாதிப்பையும் தடுத்துநிறுத்தி, முதுமை தோற்றத்தையும் அண்டவிடாமல் செய்கிறது. நீண்ட நாட்கள் இளமையுடன் இருக்க விரும்புவர்கள் தேனில் ஊற வைத்த ஒரு இஞ்சியை தினமும் சாப்பிட்டாலே போதும் என்கிறார்கள்
0
Leave a Reply