வாய்ப்புண் வருவது சாதாரண விஷயம் என்றாலும், அப்படியே விட்டுவிட்டால் பல உடல் உபாதைகளை கொண்டுவந்து விட்டுவிடும்
வாய்ப்புண்கள் என்பது, எந்த வயனதிருக்கு வேண்டுமானாலும் வரலாம்..சாப்பாடு, மருந்துகளில் அலர்ஜி இருந்தால் வாய்ப்புண்கள் வரும்.. உடலில் ஊட்டச்சத்து குறைபாடு இருப்பவர்களுக்கு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கும் வாய்ப்புண் வரலாம். வெற்றிலை, புகையிலை, பான்மசாலா, சிகரெட், மதுபானம் போன்றவற்றை பயன்படுத்துபவர்களுக்கும் வாய்ப்புண் வரலாம்.. இரைப்பையில் புண் இருந்தாலும்,சத்தான உணவை சாப்பிடாதவர்கள்,மனஅழுத்தம் உள்ளவர்கள், எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் போன்றோருக்கும் வாய்ப்புண் வரலாம்..சூடாக காபி, டீ குடித்தாலும்,பெண்களுக்கு மாதவிடாய் நேரத்திலும், கருத்தடை மாத்திரைகளாலும்கூட,வாய்ப்புண் வரலாம்.: இந்த வாய்ப்புண்கள் நம்மை அண்டாமல் இருக்க வேண்டுமானால்,முதலில் சத்தான உணவை சாப்பிட வேண்டும்.. வாய் சுகாதாரம் பேண வேண்டும்..சிகரெட், வெற்றிலை, புகையிலை,பான்மசாலா, மதுபானம் போன்றவற்றை நிறுத்த வேண்டும்..
சத்தான காய்கறிகளையும், முளை கட்டிய பயிறுகளையும், கொண்டை கடலை, பச்சை பட்டாணி,கோதுமை, ராகி, சோயாபீன்ஸ்,பால், தயிர், மோர், முட்டை, ஈரல், நண்டு, கீரை, வெல்லம், தேன், பேரீச்சம்பழம் போன்றவற்றை அதிகமாக உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.வாய்ப்புண்களுக்கு கோவைக்காய் மிகவும் நல்லது.. முடிந்தால் பச்சையாகவே கோவைக்காயை மென்று துப்பினாலே,புண்கள் ஆறுமாம்.. அல்லது கோவைக்காயை மோருடன் அரைத்து குடித்தாலும் வாய்ப்புண்கள் அகலும். மீன், மாமிசங்களை சாப்பிடும்போது,உடலில் அமில தன்மையை அதிகரிக்க செய்துவிடும் என்பதால், புண்கள் ஆறும்வரை இவைகளை தவிர்க்க வேண்டும். வாய்ப்புண்ணுக்கு வைட்டமின்C குறைவுதான் காரணம் என்பதால்,ஆரஞ்சு பழம் சாப்பிடலாம்..அல்லது காய்ச்சாத குளிர்ந்த பாலை, வாய்ப்புண்களின் மீது அடிக்கடி வைத்தாலும் தீர்வு கிடைக்கும்..
தேன் அல்லது வெண்ணெய்யை, வாய்ப்புண்ணில் தடவி வந்தால், விரைவில் குணமாகும். பாலில் தேனை கலந்து குடித்து வந்தாலும், வாய்ப்புண் குணமாகும். தேங்காய் எண்ணெயுடன் தேனை கலந்து புண்களில் தடவினாலும் நிவாரணம் கிடைக்கும். தேங்காய் பாலுக்கு புண்களை ஆற்றும் சக்தி உள்ளதால், தேங்காய் பாலை குடிக்கலாம். இந்த லிஸ்ட்டில் இளநீரையும் சேர்த்து கொள்ளலாம். உடலில் நீர்ச்சத்து எப்போதும் இருப்பதுபோல பார்த்து கொள்ள வேண்டும்.ஒருசில மூலிகைகளும் வாய்ப்புண்ணுக்கு மருந்தாகிறது.. புதினா இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து, அதன் சாற்றை மட்டும் எடுத்து, புண்களின்மீது தடவினால் எரிச்சல் நீங்கி, குணமாகும்.
துளசி இலைகளை நான்கைந்து கழுவி வாயில் போட்டு மென்று சாப்பிட்டாலும்,வாய்ப்புண்கள் ஆறும். மணத்தக்காளியின் ஐந்தாறு இலைகளை எடுத்து, கழுவி அப்படியே மென்று அதன் சாற்றை விழுங்கினாலும் புண்கள் ஆறும்..இந்த மணத்தக்காளி, கொய்யா இலைகளும்கூட வாய்ப்புண்களை ஆற்றக்கூடியவைதான்.. இலைகளை கழுவி சுத்தம் செய்து,நெய்யில் வதக்கி துவையல் போல அரைத்து சாப்பிடுவதால் வாய்ப்புண்கள் மெல்ல ஆறும்.. குடல் ஆரோக்கியம் காக்கப்பட வேண்டும்.வயிறு சுத்தமாக இருந்தாலே வாயில் புண்கள் ஏற்படாது.,
வாயில் புண் கடினமாகிவிட்டால் அதிக வலி ஏற்படும்.. சாப்பிட முடியாது, தூங்கவும் முடியாது.. உதடுகளும் வீங்கிவிடும்.. பல் டாக்டரை வருடம்2 முறையாவது சந்தித்து வாயை முறையாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இவையெல்லாம் தற்காலிக தீர்வு தான் என்றாலும்,வெகு நாட்களாக வாய்ப்புண்கள் இந்தால், உடனே டாக்டரிடம் செல்ல வேண்டும். ஏனென்றால்,இதுவே, நாளடைவில் வாய் கேன்சருக்கான அறிகுறியாக இருக்கலாம். எனவே, வாய்ப்புண்2 நாட்களில் ஆறாவிட்டால், உடனடியாக அதற்கான காரணத்தை அறிந்து முறையானசிகிச்சையைமருத்துவர்களிடம் பெற வேண்டியது கட்டாயமாகும்.
0
Leave a Reply