ஹெல்மெட் அணிவது ஒரு உறுதியான பாதுகாப்பு, ஆனால் ஒரு பெரிய தவறு உயிருக்கே ஆபத்தாக முடியும். காலாவதியான ஹெல்மெட்டை அணியாதீர்கள்! அதன் உள்ளே இருக்கும் முக்கியமான EPS Foam, 3 முதல் 5 ஆண்டுகளுக்குள் மிகவும் கடினமாகிவிடும். அதன்பிறகு, அது அதிர்வுகளைத் தாங்கும் திறனை இழந்துவிடும். பழைய ஹெல்மெட்டை அணிவது என்பது, உங்கள் தலையில் ஒரு பலவீனமான பிளாஸ்டிக் பெட்டியை அணிவதைப் போன்றது!
தமிழ்நாடு பொது சேவை ஆணையம் அதிரடி அறிவிப்பு 2026!ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வு (நேர்காணல் இல்லாத பதவிகள்)நேர்முகத் தேர்வு இல்லை! நேரடி நியமனம்!விளம்பர எண் 734,அறிவிப்பு எண் 04/2026,தேதி 20.05.2026ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வு (நேர்காணல் இல்லாத பதவிகள்)பணிகளுக்கு நேரடி ஆட் சேர்புக்கான ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.www.tnpsc.gov.inஆன்லைனில் விண்ணப்பிக்கவும்முக்கிய தேதிகள்அறிவிப்பு வெளியான தேதி -20.05.2026விண்ணப்பிக்க தொடங்கும் தேதி - 27.05.2026விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் நேரம் - 25.06.2026, 11.59pmவிண்ணப்ப திருத்தம் செய்யும் காலம்- 29.06.2026,12.01AM முதல் 01.07.2026, 11.59 PM வரை
60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் இந்த எண்ணைத் தொடர்பு கொண்டு பேசினால் பல்வேறு உதவிகளை மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து வழங்குகின்றன. காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை.பிள்ளைகள் கவனிக்க வில்லை என்பது முதல், வங்கியில் பென்சன் பணம் வரவில்லை என்பது வரை எல்லா உதவிகளையும் கேட்கலாம். உங்களிடம் விவரங்கள் வாங்கிய பிறகு, அந்தந்த துறைகளை அவர்களே தொடர்பு கொண்டு எல்லாப் பிரச்சனைகளையும் சரி செய்ய உதவி செய்வார்கள். நகரங்களில் வழி தெரியாமல் இருந்தால் கூடத் தயங்காமல் தொடர்பு கொண்டு உதவி கேட்கலாம். ஒரு நண்பனைப் போல உதவிகளையும் ஆலோசனைகளும் வழங்குவார்கள். எப்போதும் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டிய எண்: 14567. உங்களுக்குத் தெரிந்த அனைத்து பெரியவர்களுக்கும் அனுப்புங்கள்.
ஸ்ரீ ராவ்பகதூர் A.K.D.தர்மராஜா கல்வி தர்ம ஸ்தாபனம், இராஜபாளையம்.ஹண்டாய் & ஐஐடி மெட்ராஸ் கார்க்கினோஸ் ஹெல்த்கேர் இணைந்து நடத்தும்,தலைசிறந்த மருத்துவ குழுவினர் பங்குபெறும் மாபெரும் இலவச புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை முகாம்.நாள் : 23.05.2026 முதல் 25.05.2026 வரை நேரம் : தினமும் காலை 9.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை. இடம் : ஸ்ரீராவ்பகதூர் ஏ.கே.டி. தர்மராஜா பெண்கள் மேல்நிலைப்பள்ளிஇரயில்வே பீடர் ரோடு, இராஜபாளையம்.முகாமின் சிறப்பம்சங்கள்வாய்வழி புற்றுநோய்,மார்பகப் புற்றுநோய்,பெருங்குடல் புற்றுநோய்,கருப்பை வாய் புற்றுநோய்,ஆகியவற்றிற்கான மருத்துவ பரிசோதனைகள் செய்து மருத்துவ ஆலோசனைகள் இலவசமாக வழங்கப்படும்.
மாநில வாரியாக ஆதார் துறையில் ஆப்ரேட்டர்,சூப்பர்வைசர் உள்ளிட்டமொத்தம் 252 காலியிடங்கள்அறிவிக்கப்பட்டுள்ளன. 10வது, 12வது, ஐடிஐ அல்லது டிப்ளமோ கல்வித் தகுதி பெற்றவர்கள் ஆன்லைன் மூலம் 20.05.2026 வரை விண்ணப்பிக்கலாம்.
தமிழக சாலைகளில் இனி விபத்துகளே இருக்கக்கூடாது என்பதில் நமது புதிய அரசு உறுதியாக உள்ளது.அதன் ஒரு பகுதியாக, 18 வயதுக்குட்பட்டவர்கள் வாகனம் ஒட்டினால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்:₹25,000 அபராதம்:மைனர்கள் வண்டி ஓட்டினால் வாகன உரிமையாளருக்கு (பெற்றோருக்கு) உடனடியாக ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும்.18 வயதுக்குட்பட்டவர்கள் வாகனம் ஓட்டுவது கண்டிப்பாகத் தடைசெய்யப்பட்டுள்ளது.3 ஆண்டு சிறை:விதியை மீறும் பெற்றோர்களுக்கு ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.RC ரத்து:அந்த வாகனத்தின் பதிவு சான்றிதழ் (RC Book) ரத்து செய்யப்படும்.25 வயது வரை தடை:சட்டத்தை மீறிய அந்த சிறுவர் சிறுமிக்கு 21 வயது ஆகும் வரை, டிரைவிங் லைசென்ஸ் வழங்கப்படாது. மக்களுக்கு ஒரு வேண்டுகோள்:தம் பிள்ளைகளின் கையில் பைக் சாவியைத் தருவது, அவர்களின் உயிர்க்கே ஆபத்தாக முடியலாம். சட்டத்தை மதிப்போம், உயிர்களைக் காப்போம்!"பாதுகாப்பான பயணம் - பாதுகாப்பான எதிர்காலம்.,விதிகளை மீறாதீர்கள் ,உயிரை காப்பற்றுங்கள்.
படைப்பாற்றல் கொண்டாட்டத்துடன் சங்கமிக்கும் இடம்பாளையக் கலைஉணவு திருவிழா மற்றும் கைவினை பொருட்களுக்கான நிகழ்ச்சிமே 15, 16, 17, நிகழ்ச்சி நடைபெறும் இடம்விஆர் கொண்டாட்ட அரங்கம்1/1,ஞானசம்பந்தர் தெரு, போஸ் பூங்கா எதிரில், முடங்கியார் சாலை, ராஜபாளையம் 626117. தொடர்பு கொள்ளவும்7358945753.
12 ஆம் வகுப்பு தேர்வில் 85% [Maths Physics Chemistry] மதிப்பெண் பெற்ற எந்த மாணவரும் பாண்டிச்சேரியில் உள்ள அரியூர் வெங்கடேஸ்வரா கல்லூரியில் பொறியியல் படிப்பை இலவசமாகப் படிக்கலாம். தயவு செய்து பகிரவும். ஏழை மாணவர்கள் யாருக்கு வேண்டுமானாலும் இது உதவலாம். மேலும் விவரங்களுக்கு ஸ்ரீ தேவநாராயணன், உதவிப் பதிவாளர் (ஓய்வு), பாண்டிச்சேரி பல்கலைக்கழகம். கைபேசி எண் : +91 *70105 53544* யாருக்காவது உபயோகமாக இருக்கும் என்பதால் அனைவருக்கும் பகிரவும்.
தமிழகம் உட்பட 5 மாநில வாக்கு எண்ணிக்கை முடிவுகளை தேர்தல் ஆணையத்தின் results.eci.gov.இந் என்ற இணையதளத்திலும் ‘ECINET' என்ற போன் செயலியிலும் தெரிந்துகொள்ளலாம் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு.
பழையபாளையம் ராஜூக்கள் மகுமை பொதுபண்டு இராஜபாளையம்,அருள்மிகு ஸ்ரீ முத்தாலம்மன் பொங்கல் திருவிழா ,நிகழும் மங்களகரமான 1201-ம் ஆண்டு பராபவ வருஷம் சித்திரை மாதம் 15-ம் தேதி (28.04.2026) செவ்வாய்க்கிழமை இரவு 6-00 மணி அளவில் மின் விளக்குகளால்அலங்கரிக்கப்பட்ட தட்டுச்சப்பரத்தில் அம்மன் எழுந்தருளியாகி, அருள் ஜோதிவடிவமாய் அமர்ந்து, நாதஸ்வரம், மேளவாத்தியங்கள், கிளாரினெட் கச்சேரி, வான வேடிக்கைகளுடன் புறப்பட்டு அருள்மிகு ஸ்ரீ முத்தாலம்மன் சுவாமி முக்கியவீதிவழியாக அருள் ஜோதி சொரூபசக்தியாய் மக்களுக்கு காட்சி கொடுத்து நகர்வலம்வந்து பழையபாளையம் (முனிசிபல் குடிநீர் தண்ணீர் தொட்டி) வடபக்கம்அமைந்துள்ள பழையபாளையம் ராஜூக்களுக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ முத்தாலம்மன்கோவிலுக்கு வழக்கம் போல் வந்தடையும். அவ்வமயம் பக்தகோடிகள் அனைவரும் தவறாதுபொங்கல் விழா வைபவங்களில் கலந்து கொண்டு சிறப்புவித்து அம்மன் அருள்பெற வேண்டுகிறோம்.அன்று இரவு 7 மணி முதல் இரவு 12 மணி வரை மம்சாபுரம் S. தனலட்சுமி வில்லிசை குழுவினரின் ''வில்லிசைக் கச்சேரி" அருள்மிகு ஸ்ரீ முத்தாலம்மன் கோவில் மைதானத்தில் வைத்து நடைபெறும். இப்படிக்கு,தலைவர்.பழையபாளையம் ராஜூக்கள் மகுமை பொது பண்டுஅருள்மிகு ஸ்ரீ முத்தாலம்மன் கோவில் திருவிழாக் கமிட்டியார்.