25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >>


சேமிப்பையும், சிக்கனத்தையும்   வலியுறுத்தி  (30.10.2026)  அன்று  உலக  சிக்கன  நாள் விழா  கொண்டாடப்படுகிறது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சேமிப்பையும், சிக்கனத்தையும் வலியுறுத்தி (30.10.2026) அன்று உலக சிக்கன நாள் விழா கொண்டாடப்படுகிறது.

சேமிப்பையும்,  சிக்கனத்தையும்   வலியுறுத்தி (30.10.2026) அன்று உலக சிக்கன  நாள் விழா கொண்டாடப்படுகிறது.  இந்தியாவில் 1985-ஆம் வருடம் முதல் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 30-ஆம் நாள்   உலக  சிக்கன  நாளாக  கொண்டாடப்பட்டு  வருகிறது. தேவையற்ற  செலவுகளைத் தவிர்த்து  சிக்கன  நடவடிக்கையை  நாட்டு  மக்கள் கடைபிடித்து,  சிக்கனமாக  வாழ்ந்து,  வீட்டிற்கும்,  நாட்டிற்கும்  பெருமை  சேர்ப்பதையே  இந்த உலக சிக்கன நாள் வலியுறுத்துகிறது. "சிக்கனம் வீட்டைக் காக்கும், சேமிப்பு நாட்டைக் காக்கும்" என்ற  முது மொழிக்கேற்ப   ஒவ்வொரு   மனிதனும்   தனது   உழைப்பால்   ஈட்டிய    செல்வத்தை  தன் குடும்பத்திற்கும்,  நாட்டிற்கும்    பயன்படும்    வகையில் சேமிக்க   வேண்டியது  மிகவும் அவசியமாகும்.  எதிர் காலத்   தேவைகளைக்   கருத்தில்   கொண்டு   மக்கள் சிக்கனமாக  வாழ்ந்து, தங்கள்   வருமானத்தின்      ஒரு    பகுதியை   சேமிக்கும்   பழக்கத்தினை   வளர்த்துக்   கொள்ளவேண்டும்.

 எதிர்கால   வாழ்க்கை   ஒளியமயமாக  திகழ்ந்திட  பெற்றோர்கள்   தங்கள் பிள்ளைகளுக்கு சிறு  வயதிலிருந்தே, சேமிப்பின்  அவசியம்   குறித்து   எடுத்துரைத்து, சேமிக்கும்     பழக்கத்தை   ஊக்குவிக்க   வேண்டும். "சிறுதுளி  பெருவெள்ளம்" என்பதற்கேற்ப  மக்கள்  தாங்கள்   ஈட்டிய பணத்தை, அஞ்சலகச்  சிறுசேமிப்புத்  திட்டங்களில் முதலீடு   செய்வதன்  மூலம்,  சிறுகச் சிறுக சேமிக்கப்படும்.  அத்தொகை  பன்மடங்காகப்   பெருகி, எதிர்கால  வாழ்க்கைக்கு  பாதுகாப்பை அளிக்கும்.  சேமிப்பு   முதல் செலவாக  இருக்கட்டும்.        அது   எதிர்காலத்    தேவைக்கான முதலீடாகும். இந்த  உலக  சிக்கன  நாளில்,      மக்கள்  அனைவரும்     தங்கள்    வாழ்வு வளம்பெற, அஞ்சலகங்களில்   செயல்படுத்தப்பட்டு  வரும்     சிறுசேமிப்புத்       திட்டங்களில்     சேர்ந்து பயன்பெற்றிட    வேண்டும்    என்று  மண்டல  உதவி  இயக்குநர்  (சிறுசேமிப்பு)  அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News