25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


முக்கிய அறிவிப்பு

Mar 30, 2026

கலெக்டர் சுக புத்ரா செய்திக்குறிப்பு -நீச்சல் பயிற்சிகளில் பங்கேற்க அழைப்பு.

ஏப். 1 முதல் ஜூன் 14 வரையிலான விடுமுறைக் காலத்தில் நீந்தக் கற்றுக்கொள்' பயிற்சி வகுப்பு மாவட்டவிளையாட்டு அரங்கத்தில் உள்ள நீச்சல் குளத்தில் நடத்தப்பட உள்ளது.நீச்சல் கற்றல் பயிற்சிக்கான காலை நேர வகுப்புகள் காலை 6:30 மணி முதல் 7:30 மணி வரையிலும், காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரையிலும், காலை 8:30 மணி முதல் 9:30 மணி வரையிலும் மாலை நேர வகுப்புகள் மதியம் 3:30 மணி முதல் 4:30 வரையிலும், மாலை 4:30 மணி முதல் 5:30 மணி வரையிலும், மாலை 5:30 மணி முதல் 6:30 மணி வரையிலும் நடக்க உள்ளது. பயிற்சிக் கட்டணம் ரூ.1770. சேர விரும்புவார்கால  அட்டவணை படி பங்கேற்கலாம். விவரங்களுக்கு 9751393412 என்ற அலைபேசி எண்ணிற்கு அழைக்கலாம், என்றார்.

Mar 29, 2026

ஸ்ரீ சிருங்கேரி ஸ்ரீ சாரதாம்பாலய வாருஷீக ப்ரதிஷ்டாதின அழைப்பிதழ்.

தக்ஷிணாம்னாய சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடாதீச்வர அனந்த ஸ்ரீ விபூஷித ஜகத்குரு ஸ்ரீ சங்கராசார்யஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பாரதீர்த்த மஹாஸ்வாமிகள் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் பரிபூர்ண ஆசிகளுடன்நிகழும் மங்களகரமான1200ம் ஆண்டு விஸ்வாவஸுவருஷம் பங்குனி16ம் தேதி(30.03.2026) திங்கள்கிழமையும் திரயோதசி திதியும் மகம் நக்ஷத்திரமும் கூடிய சுபதினத்தில்ஸ்ரீ  ராஜகணபதி, ஸ்ரீ ஆதிசங்கரபகவத்பாதாசார்யர், ஸ்ரீசாரதாம்பாளுக்கு ஸம்வத்ஸராபிஷேகம் நிகழ்ச்சி நிரல்படி நடைபெற உள்ளது.ஆஸ்தீக மஹாஜனங்கள் திரளாக வந்துகொண்டு இறையருளுக்கு பாத்திரர்களாகுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.நிகழ்ச்சி நிரல் காலை 7.15 மணி - குருவந்தனம், கணபதி பூஜை, அனுக்ஞை புண்யாஹவாசனம், மஹாஸங்கல்பம் காலை 7.50 மணி - ஸ்ரீராஜகணபதிக்கு அதர்வஷீர்ஷ பாராயணத்துடன் அபிஷேகம் காலை 8.15 மணி - ஸ்ரீஆதிசங்கரபகவத்பாதாசார்யர்க்கு ஸ்ரீ ருத்ர பாராயண அபிஷேகம் காலை 8.45 மணி - ஸ்ரீ சாரதாம்பாளுக்கு ஸ்ரீதுர்கா, ஸ்ரீ சூக்த பாராயண அபிஷேகம் காலை 9.15 மணி- ஸஹஸ்ரநாம அர்ச்சனை காலை 10.00 மணி -தீபாராதனை, ப்ரசாதம் மாலை 6.30 மணி -ஸஹஸ்ரநாம, த்ரிஷதீ அர்ச்சனைகள் மாலை 7.15 மணி - ரதோற்சவம்இப்படிக்கு - "குருபக்தமணி" ஸ்ரீ பி.ஆர்.வெங்கட்ராம ராஜா தலைவர் - ஸ்ரீ சாரதா சமிதி,

Mar 27, 2026

*திருக்குறள் முற்றோதல்*

உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம்,மற்றும் ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்,இணைந்து நடத்தும், *திருக்குறள் முற்றோதல்*5 வயது UKG மாணவன் ர. ஆதித்யா - வின் ,உலக சாதனை நிகழ்வு.நாள்: 29.03.2026 ஞாயிற்றுக்கிழமை .இடம்: அரசு பெண்கள் சிறார் நூலகம், இராஜபாளையம்.அன்பு ஆதித்யா செல்வத்துக்கு அன்பு வாழ்த்துகள்.ஆதித்யாவின் அண்ணன் அகிலேஷ் ஏற்கனவே 1330 குறள் சொல்லி பரிசு பெற்றவர்.

Mar 21, 2026

இராஜபாளையம் கம்பன் கழக அறக்கட்டளை 46-ஆம் ஆண்டுக் கம்பன் விழா.

இராஜபாளையம் கம்பன் கழக அறக்கட்டளை 46-ஆம் ஆண்டுக் கம்பன் விழா,நாள் : 2026 மார்ச் 22. ஞாயிறு இடம்:ஆனந்தா கார்டன், இராஜபாளையம் பட்டிமண்டபத் தலைப்பு :வியக்க வைக்கும் வல்லமை மிக்கவர்கள் கம்பன் பேசியவர்களா? கம்பனைப் பேசியவர்களா?நடுவர் : சொல்வேந்தர் திரு.சுகி.சிவம் அவர்கள்,அனுமதி இலவசம்.பார்வையாளர்களுக்கு மதிய உணவு, இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

Mar 20, 2026

ஸ்ரீ P.S. குமாரசாமி ராஜா ஞாபகார்த்த கருத்தரங்கம்.

ஸ்ரீ P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு டிரஸ்ட் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் தர்மாபுரம் காந்திஜி வாசகசாலை,இணைந்து நடத்தும்,சென்னை மாகாண முன்னாள் முதல்வரும், ஒடிசா மாநில ஆளுநருமான தியாகச்செம்மல்ஸ்ரீ P.S. குமாரசாமி ராஜா ஞாபகார்த்த கருத்தரங்கம்நாள் : 21.03.2026 சனிக்கிழமை, மாலை 6.30 மணி நேரம் : N.R.K. மண்டபம்,பழையபாளையம். ஊர்வலம் : மாலை சரியாக 5:30 மணிக்கு காந்திஜி வாசக சாலையிலிருந்து புறப்பட்டு N.R.K. மண்டபம் வந்தடைதல். 

Mar 19, 2026

குழந்தை நேய செயலகம், தமிழ் நாடு மற்றும் புதுவை குழந்தை நேய தேர்தல் அறிக்கை 2026 Child Protection Manifesto – 2026

"குழந்தை நேய செயலகம்" என்பது தமிழகம் மற்றும் புதுவை மாநிலங்களில் பல ஆண்டுகளாக குழந்தைகள் பாதுகாப்பு,குழந்தைகள் உரிமைகள் மற்றும் குழந்தைகள் நலன் குறித்து தொடர்ந்து செயல்பட்டு வரும் சமூக அமைப்புகள், தன்னார்வலர்கள்மற்றும் குழந்தை பாதுகாப்பு செயற்பாட்டாளர்களின் கூட்டமைப்பாகும். இந்த அமைப்பு எந்த அரசியல் கட்சியையும்சார்ந்ததல்ல. இது முழுமையாக அரசியல் சார்பற்ற, சமூக நலன் நோக்குடைய, "குழந்தை பாதுகாப்பு" என்ற ஒற்றை குரலில்இணைந்த சமூக செயற்பாட்டு கூட்டமைப்பாகும். குழந்தைகள் மீது நடைபெறும் வன்முறை, பாலியல் குற்றங்கள், புறக்கணிப்பு,சுரண்டல் மற்றும் ஆபத்துகளைத் தடுக்கும் நோக்கில் சமூக விழிப்புணர்வு, பயிற்சி, ஆலோசனை மற்றும் பாதுகாப்புநடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது."குழந்தை நேய செயலகம்" சார்பாக வரும் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகம் மற்றும் புதுவைமாநிலங்களில் உள்ள அரசியல் கட்சி தலைமைகளுக்கு “குழந்தை நேய தேர்தல் அறிக்கை 2026”கோரிக்கையாக கொடுக்கபட்டுள்ளது. மேலும் வேட்பாளர்களை சந்தித்து கோரிக்கைவைக்கபட இருக்கின்றோம்.நடைபெறவுள்ள 2026 சட்டமன்ற தேர்தலில் அரசியல் கட்சியினர் தங்களது தேர்தல் அறிக்கையில் கீழ்க்காணும்செயல்பாடுகளை உள்ளடக்கி முன்மாதிரியான குழந்தை பாதுகாப்பு மாநிலமாக உறுதிசெய்யவேண்டுகிறோம். 1. குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்தை உறுதிசெய்யும் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைத்துறைஎன்ற பெயரில் குழந்தைகளுக்கென்றே தனிஅமைச்சகம் / தனிதுறை ஏற்படுத்தப்படும்.2. குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைத்துறையின் கீழ் ஒழுக்கம் உறுதி செய்யப்பட்ட தரமான கல்வி கிடைக்கஆவண செய்யப்படும்.3. குழந்தைகளின் பள்ளி பருவத்தில் மதநல்லிணக்க வகுப்பறைகளாக செயல்பட உறுதி செய்யப்படும். இதைவலுப்படுத்த பெற்றோர், ஆசிரியர் மற்றும் தன்னார்வ அமைப்புகள் இணையபெற்ற குழுக்களுக்கு அங்கீகாரம்வழங்கப்படும்.4. மாநிலத்தின் தேர்தல் சம்பந்தமாக குழந்தைகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ ஈடுபடுத்த எந்த அரசியல்கட்சிக்கும் அனுமதி இல்லை என்ற சட்டவரைவு கொண்டுவரப்படும்.5. குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தை உரிமைகள் மற்றும் நலன் ஆகியவற்றை உறுதி செய்யமாநில அளவிலான ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புக் கொள்கை உருவாக்கப்படும்.6. மாநிலத்தின் தேர்தல் ஆணையம் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் நலனுக்கான ஒழுங்கு முறைகளை வகுத்துவெளிப்படையான விழிப்புணர்வு கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விழிப்புணர்வுதிட்டம்தன்னார்வஅமைப்புகள்மூலம்செயல்படுத்தப்படும்.7. குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளை முழுவதும் கட்டுப்படுத்தக்கூடிய விரைவு நடவடிக்கைகள்மேற்கொள்ளப்படும். குழந்தைகள் மீதான வன்முறை குற்றவாளிகளை மக்களின் பார்வைக்கு கொண்டுவந்துகடுமையான தண்டனைவழங்கியதற்கான வெளிப்படைத்தன்மை உறுதிசெய்யப்படும்.8. குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைத்துறை மூலம் உருவாக்கப்படும் அனைத்து செயல்பாட்டு குழுக்களிலும்தன்னார்வ அமைப்புகள் ஈடுபடுத்தப்படும் என்று உறுதி செய்யப்படும்.9. மாவட்ட அளவில் பள்ளி கல்வித்துறை, குழந்தை திருமண தடுப்பு அதிகாரி, தன்னார்வ அமைப்புகள்இணைக்கப்பட்டு தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகள் உறுதிசெய்யப்படும்.10. பள்ளி வாளாகத்தில் இருந்து நூறு மீட்டர் தூரம் வரை எந்த விதமான புகையிலை பொருட்கள் விற்பனை செய்யமுழுமையான தடை விதிக்கப்படும். அனைத்து வகையான போதை பொருட்களின் நடமாட்டம் முற்றிலுமாக தடுத்துநிறுத்தப்படும்.11. இணையம் மற்றும் சமூக ஊடகங்களில் குழந்தைகள் மீது நடைபெறும் Online Child SexualExploitation & Abuse (OCSEA) குற்றங்களை தடுக்கும் சிறப்பு நடவடிக்கைகள் மேற் கொள்ளபடும்.இவை குழந்தைகள் பாதுகாப்பாக வாழ்ந்திட ஒரு தகுதியான சமூகத்தை உருவாக்கும் சிறந்த நலன் முன்வைத்துஎழுப்பப்பட்டுள்ள எங்களின் கோரிக்கைகள் இவற்றை அரசியல் கட்சிகளாகிய நீங்கள் தேர்தல் கோரிக்கையில்சேர்க்கவும் தேர்தல் களத்தில் பரப்புரையில் பயன்படுத்தவும் மேலும் நீங்கள் ஆட்சிக்கு வந்த பின்பு மேற்கூறியகோரிக்கைகளை நிறைவேற்ற கேட்டுக் கொள்கிறோம்.நம் மாநிலத்தை ஒரு குழந்தை நேய மாநிலமாக உருவாக்குவோம்iகுழந்தை நேய செயலகம்,மாநில அமைப்பாளர், தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி Mobile: 999 475 2121குழந்தைகள் பாதுகாப்பு – அனைவரின் பொறுப்புகுழந்தைகள் நேய செயலகம் – சமூகத்தின் உறுதி

Mar 19, 2026

கலசலிங்கம் குரூப் கல்வி நிறுவன தலைவர் டாக்டர் கே. ஸ்ரீதரன் நினைவு இலவச“மெகா மருத்துவ முகாம்”  .

கலசலிங்கம் குரூப் கல்வி நிறுவன தலைவர் டாக்டர் கே. ஸ்ரீதரன் நினைவு இலவச“மெகா மருத்துவ முகாம்”  (7 நாட்கள்) - 20-03-2026 வெள்ளி முதல் 26-03-2026 வியாழன் வரை காலை 9.00 மணி முதல் இரவு 7.00 மணி வரைஇடம் : கலசலிங்கம் மருத்துவமனை, கிருஷ்ணன்கோவில்உயர்தர சிகிச்சை, அறுவை சிகிச்சை,பரிசோதனைகள், மருந்து, மாத்திரைகள், தங்குமிடம், உணவு வசதிமுற்றிலும் இலவசம் தொடர்புக்கு : 99404 33929, 94437 28907, 99446 96381, 94423 94350

Mar 19, 2026

தியாகச்செம்மல் ஸ்ரீ P.S.K ஞாபகார்த்த ஊர்வலம் & கருத்தரங்கம் .

தியாகச்செம்மல் ஸ்ரீ P.S.K ஞாபகார்த்த ஊர்வலம் & கருத்தரங்கம் ஏற்பாட்டிற்கான கூட்டம்:-நாள் : நாளை, வெள்ளிக்கிழமை நேரம் : மாலை 5 pm to 6 pm.இடம் :  NRK மண்டபம், பழையபாளையம்.விழா ஏற்பாட்டாளர்கள், அமைப்பாளர்கள்(Program Organizers) தன்னார்வ தொண்டர்கள்(RewaVolunteer) இந்த விழா ஏற்பாடுகளில் உதவ விரும்பும் மற்ற அங்கத்தினர்களும் கலந்துகொள்ளலாம். தேசபக்தியை வளர்க்கவும், தியாகத்தை போற்றவும்,நமது41வது நிகழ்ச்சியில் நமது உறுப்பினர்கள் அனைவரும்REWA அடையாள அட்டை அணிந்து ,குடும்பத்தினர்களுடன், நண்பர்கள், சுற்றத்தார்கள், உற்றார் உறவினர்கள், இளைஞர்கள், மாணவர்கள், மாணவிகளுடன்  ,ஊர்வலம் மற்றும் கருத்தரங்கில் கலந்து  கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.செயலாளர்.

Mar 06, 2026

A.K.D.DHARMA RAJA WOMEN'S COLLEGE ,RAJAPALAIYAM. 35th COLLEGE DAY.

A.K.D.DHARMA RAJA WOMEN'S COLLEGE (Affiliated to Madurai Kamaraj University),RAJAPALAIYAMCOLLEGE DAY -  35 th College Dayon Saturday 7th March, 2026 at 5.00 p.mVenue: Sri. A.K.D. Dharma Raja - Smt. A.K.D. Sakkaniamma - auditorium PROGRAMMEPrayer Song : College StudentsWelcome Address: Shri. A.K.D. KRISHNAMA RAJU, B.E... CorrespondentAnnual Report : Dr. M. LAKSHMI PrincipalIntroduction of : Mrs. M. JENIFERChief Guest       :   HOD of PhysicsChief Guest's Address: Thiru. K. PANDIARAJAN, B.E.(Hons), Μ.Β.Α. Former Minister for School Education, Youth & Sports DepartmentGovernment of TamilnaduPrize & Certificate DistributionCultural ProgrammesVote of Thanks : Ms. P. UMA MAHESWARI , III. B.A English. National Anthem. 

Mar 06, 2026

A.K.D.DHARMA RAJA WOMEN'S COLLEGE ,RAJAPALAIYAM. GRADUATION DAY

A.K.D.DHARMA RAJA WOMEN'S COLLEGE ,RAJAPALAIYAM. GRADUATION DAY2022-2025 ,on Saturday, 7th March 2026 at 10.00 amVenue: Sri. A.K.D. Dharma Raja - Smt. A.K.D. Sakkaniamma - Auditorium. CHIEF GUEST :Dr. P. KANNADASANDean(i/c), Associate Professor & Head College Development Council & Department of Management Studies, Madurai Kamaraj  university.  PROGRAMMEAcademic ProcessionTamil Thai vazhthu Opening of Graduation CeremonySecretaryWelcome Address and Report- PrincipalGraduation Day Address - Chief GuestPresenting the Candidates - HODSDistribution of Degree CertificatesChief GuestAdministering the Pledge - PrincipalDissolving the Graduation CeremonyPrincipalNational AnthemProcession

1 2 3 4 5 6 7 8 9 10 ... 27 28

AD's



More News