சர்க்கரை வள்ளிக்கிழங்கு அடை.
தேவையான பொருட்கள்
சர்க்கரைவள்ளிக்கிழங்கு (துருவியது) – ஒன்றரை கப்
இட்லி அரிசி அல்லது பச்சரிசி - 1 கப்
கடலைப்பருப்பு - 3/4 கப்
துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, உளுத்தம் பருப்பு - தலா 2 டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 6 முதல் 8
சோம்பு அல்லது சீரகம் - 1 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
முருங்கைக்கீரை – சிறிதளவு (தேவைப்பட்டால்)
பெருங்காயத்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - அடை சுடத் தேவையான அளவு
செய்முறை
அரிசி மற்றும் பருப்பு வகைகளை ஒன்றாக சேர்த்து 3 மணி நேரம்
தண்ணீரில் ஊற வைக்கவும்.
ஊறிய பருப்புடன் காய்ந்த மிளகாய், உப்பு மற்றும் பெருங்காயம் சேர்த்து
கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த மாவில் துருவிய சர்க்கரைவள்ளிக்கிழங்கு, நறுக்கிய
வெங்காயம் மற்றும் முருங்கைக்கீரை சேர்த்து நன்றாக கலக்க
வேண்டும்.
தோசைக் கல்லை சூடானதும், மாவை ஊற்றி அடைகளாக வார்த்து
எடுக்கவும்.
நல்லெண்ணெய் அல்லது நெய் விட்டு இருபுறமும் பொன்னிறமாக
பொரிந்து வரும் வரை வேகவைத்து எடுக்கவும்.
சர்க்கரை வள்ளிக்கிழங்கு அடை தயார்.இது மிகவும் சத்தான மற்றும்
சுவையான ஒரு சிற்றுண்டி.
0
Leave a Reply