இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் 30.10.2025 அன்று நடைபெறவுள்ள தேவர் ஜெயந்தி விழாவிற்கு விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அன்னதானங்கள் வழங்கப்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எனவே, அவ்வாறு அமைக்கப்படவுள்ள தற்காலிக அன்னதானங்களின் பொறுப்பாளர்கள் உணவு பாதுகாப்பு உரிமம் பெற வேண்டும் மற்றும் பின்வரும் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் முக்கிய நெறிமுறைகளைத் தவறாது பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகின்றது.அன்னதானங்கள் மற்றும் தற்காலிக உணவுக் கடைகள் உள்ளிட்ட அனைத்து வகையான உணவு வணிகர்களும் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன் கீழ் https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் தங்களது வணிகத்தினைப் பதிவு செய்துகொள்ள வேண்டும்.அதுபோல், அன்னதானத்தில் சமைப்பவர்கள்/கேட்டரிங்க் ஏஜென்ஸி ஆகியோரும், மேற்கூறிய இணையதளத்தில் விண்ணப்பித்து உணவு பாதுகாப்பு பதிவுச் சான்றிதழ்/உரிமம் பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு, உணவு பாதுகாப்பு பதிவுச் சான்றிதழ்/உரிமம் பெற்ற கேட்டரிங்க்/சமையல் குழுவினருக்கு மட்டுமே அன்னதானத்தில் உணவு சமைக்க அன்னதானம் ஏற்பாடு செய்பவர்கள் பணி உத்தரவு வழங்க வேண்டும்.இந்தப் பதிவுச் சான்றிதழ் போக, புதிய மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தின் முதல் தளத்தின் அறை எண்: 116 மற்றும் 118-ல் உள்ள நியமன அலுவலர் அலுவலகத்தில், பின்வரும் விபரங்களுடன் அனுமதி கோரி கடிதம் ஒன்றினை, அன்னதானம் ஏற்பாடு செய்பவர்கள் அன்னதானம் நடப்பதற்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும்.அன்னதானம் ஏற்பாடு செய்பவர்களின் தொடர்பு முகவரி மற்றும் அலைபேசி, அன்னதானம் நடைபெறும் இடத்தின் முழு முகவரி, அன்னதானத்தில் ஈடுபடவுள்ள சமைப்பவர் குழு/கேட்டரிங்க் குழுவின் விபரம், அன்னதானத்தில் உணவு சமைக்கவும், நுகர்வோர் அருந்தவும் பயன்படுத்தவுள்ள குடிநீரின் ஆதார நிலை, பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீராக இருந்தால், விநியோகஸ்தர் / உற்பத்தியாளர் விபரம் உள்ளிட்டவைகளை சமர்ப்பிக்க வேண்டும்.கிணறு அல்லது ஆழ்துளைக் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்து சமைக்கவும், குடிக்கவும் பயன்படுத்துவதாக இருந்தால், சம்பந்தப்பட்ட உள்ளாட்சியின் அனுமதி மற்றும் தண்ணீர் பகுப்பாய்வறிக்கை, ஊராட்சி/நகராட்சி/மாநகராட்சி போன்ற உள்ளாட்சியின் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீரைப் பயன்படுத்துவதாக இருந்தால், அதுகுறித்தான அன்னதானம் ஏற்பாடு செய்பவரின் உறுதிமொழி மட்டும் போதுமானது.சமைப்பவர் குழு/கேட்டரிங்க் குழுவினர் தொற்றுநோய் தாக்கமற்றவர்கள் என்பதிற்கான மருத்துவச்சான்று, உணவு சமைக்கத் தேவைப்படும் பொட்டலமிடப்பட்ட மூல உணவுப் பொருட்களை முழுமையான லேபிள் விபரங்கள் உள்ளதாக கொள்முதல் செய்யவும், அனைத்து மூல உணவுப் பொருட்களையும் உணவு பாதுகாப்பு பதிவுச் சான்றிதழ்ஃஉரிமம் பெற்ற வணிகரிடத்தில் மட்டும் கொள்முதல் செய்யவும் சுய உறுதிமொழிச் சான்று சமர்ப்பிக்க வேண்டும்.உணவு தயாரித்த 2 ½ மணி நேரத்திற்குள் பரிமாறிவிட வேண்டும். மீதமான உணவைப் பரிமாறாமல் அப்புறப்படுத்திடல் வேண்டும்.பால், மீன், இறைச்சி ஆகியவற்றைப் பயன்படுத்துவதாக இருந்தால், அதனை முறையான வெப்பநிலையில் பராமரித்திடல் வேண்டும்.அனைத்து வகையான சமைத்த உணவிலிருந்தும் சராசரியாக 250 கிராம் உணவு மாதிரி எடுத்து, தூய்மையான பாட்டிலில் அடைத்து, குளிர்சாதனப்பெட்டியில் 48 மணி நேரத்திற்குப் பாதுகாத்திடல் வேண்டும்.அன்னதானம் வழங்குவோர், தாம் சமையலுக்குப் பயன்படுத்தும் தண்ணீர் மற்றும் நுகர்வோர்களுக்குக் குடிக்க வழங்கும் தண்ணீர் ஆகியவற்றை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் அல்லது பொது சுகாதாரத் துறை பகுப்பாய்வுக் கூடங்களில் பகுப்பாய்வு செய்து பகுப்பாய்வறிக்கை வைத்திருக்க வேண்டும். மேலும், முன் அனுமதி இல்லாமல் தனியார் இடங்களில் உள்ள ஆழ்துளை கிணறு போன்ற நீராதாரங்களில் தண்ணீர் எடுத்து சமையலுக்கும், குடிப்பதற்கும் பயன்படுத்தக்கூடாது.சாப்பாடு, வடை, பஜ்ஜி போன்ற உடனே உண்ணக்கூடிய உணவுப் பொருட்களை சமைத்து விற்பவர்கள் அல்லது உணவுப் பொருட்களை விற்பனை மட்டும் செய்பவர்கள், உணவு பாதுகாப்பு உரிமம் பெற்ற தரமான மூலப்பொருட்களைக் கொண்டு, ஈக்கள் மற்றும் அசுத்தம் இல்லாத சுகாதரமான சூழலில் அவற்றை தயாரித்து, பாதுகாப்பாக விற்பனை செய்ய வேண்டும்.அனுமதிக்கப்படாத செயற்கை நிறமிகளை உணவுப் பொருட்களில் சேர்க்கக்கூடாது. சமையல் எண்ணெயை ஒருமுறை மட்டுமே பயன்படுத்திடல் வேண்டும். பயன்படுத்தி மீதமான ஆறிய நிலையில் உள்ள எண்ணெயை மீண்டும் பயன்படுத்தக்கூடாது. பொட்டலமிடப்பட்ட உணவுப் பொருட்களில் அதன் தயாரிப்பு நாள், காலாவதி நாள், உணவு பாதுகாப்பு உரிமம் எண் உள்ளிட்ட அனைத்து லேபிள் விபரங்களை அவசியம் அச்சிட்டிருக்க வேண்டும்.உணவு தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபடும் அனைத்துப் பணியாளர்களும் டைபாய்டு மற்றும் மஞ்சள்காமாலைக்கு எதிராகத் தடுப்பூசி போட்டுக்கொண்டு, “தொற்றுநோய்த் தாக்கமற்றவர்களாக” இருக்க வேண்டும் என்பதுடன், அவர்கள் கையுறை, முடிக் கவசம் போன்ற பாதுகாப்பு கவசங்களை அணிந்திருக்க வேண்டும்.காலாவதியான பிஸ்கட், குளிர்பானங்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட் எந்தவகை பொட்டலமிடப்பட்ட உணவுப் பொருட்களையும் விற்பனை செய்யக்கூடாது. மேலும், கெட்டுப்போன அல்லது பழைய உணவுகளை விற்பனை செய்யக்கூடாது. டைனிங் டேபிள் மற்றும் வளாகத்தினை சுத்தம் செய்யும் நபர்கள் சாப்பாடு பரிமாறக்கூடாது. நீயூஸ் பேப்பர் போன்ற அச்சிட்ட செய்தித்தாள் தடைசெய்யப்பட்ட ப்ளாஸ்டிக் ஆகியவற்றில் உணவுப் பொருட்களை பொட்டலமிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
இன்று 11-10-25, 4ம் சனிக்கிழமையை முன்னிட்டு வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் கருட சேவையை பிரகாஷ் ராஜா மற்றும் சுதர்சனா குடும்பத்தினர் சார்பாக ஏற்பாடு ஆகி உள்ளது.நிகழ்வு மாலை 4.00 PM to 5.30 PM.அனைவரும் கலந்து கொண்டு வெங்கடேச பெருமாள் அருள் பெற அழைக்கிறோம்!!!ஓம் நமோ நாராயணாய!!!
மின்சாரம் தொடர்பான ராஜபாளையம் தாலுகா மக்களின் நீண்ட காலமாக தீர்க்கப்படாத பிரச்சனைகள், இதர குறைகளை தீர்க்கும் வகையில், விருதுநகர் மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் லதா, ராஜபாளையம் பொன்னகரம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் அக். 7 காலை 11:00 மணி முதல் குறைகளை கேட்டறிய இருப்பதால், மின் நுகர்வோர்கள் தங்கள் மின்வாரிய சம்பந்தப்பட்ட குறைகளை நேரில் தெரிவித்து பயனடையலாம், என்றார் ராஜபாளையம்மின் கோட்ட செயற்பொறியாளர் முத்துராஜ்.
விருதுநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட 450 கிராம ஊராட்சிகளில் 02.10.2025 காந்தி ஜெயந்தி அன்று நடைபெறவிருந்த கிராம சபைக்கூட்டமானது நிர்வாகக் காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது. மேற்படி ஒத்திவைக்கப்பட்ட கிராம சபைக்கூட்டம் 11.10.2025 அன்று நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கீழ்க்காணும் கூட்டப்பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. கிராம மக்களின் 3 அத்தியாவசியமான தேவைகளை தேர்வு செய்து கிராமசபை ஒப்புதல் பெறுதல், சாதிப்பெயர்கள் கொண்ட குக்கிராமங்கள், சாலைகள் மற்றும் தெருக்களின் பெயரை மாற்றுதல் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல் (01.04.2025 முதல் 30.09.2025 முடிய), கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், சபாசார் செயலி செயல்பாடுகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-II, தூய்மை பாரத இயக்க (ஊரக) திட்டம், தொழிலாளர் துறை, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் – தீன்தயாள் உபாத்யாய கிராமப்புறத் திறன் பயிற்சித் திட்டம், இதர பொருட்கள் தொடர்பான கூட்டம் நடைபெற உள்ளது. எனவே, 11.10.2025 அன்று நடைபெறவுள்ள கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் F.L-1, F.L-2, F.L-3 மற்றும் F.L-11 ஆகிய மதுபான உரிம ஸ்தலங்களை, 2003-ம் ஆண்டைய தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் விதி 12 துணை விதி (1) The Tamil Nadu Liquor (Licence and Permit) Rules, 1981-ன்படி, காந்தி ஜெயந்தி தினமான 02.10.2025 ( வியாழன் ) அன்று ஒரு நாள் மட்டும் தற்காலிகமாக மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர் அவர்களால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேற்படி உத்தரவினை மீறி செயல்படும் F.L-1, F.L-2, F.L-3 மற்றும் F.L-11 மதுபான ஸ்தலங்களின் உரிமதாரர்களின் மீது The Tamil Nadu Liquor (Licence and Permit) Rules, 1981- நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர்மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S,. அவர்கள் தெரிவித்துள்ளார்.
இராஜபாளையம் நகைச்சுவை மன்றம் பெருமையுடன் வழங்கும் (23வது நிகழ்ச்சி)தீபாவளி சிறப்பு நகைச்சுவைப் பாட்டுப் பட்டிமன்றம்நாள் : 27.09.2025 சனிக்கிழமை நேரம் : மாலை 5.00 to 8.00 மணிஇடம் : ஆனந்தா கார்டன் திருமண மண்டபம், தென்காசி ரோடு, இராஜபாளையம். தலைப்பு: திரையிசையில் தடம் பதித்த கவிஞர் யார்?மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமா?கவியரசர் கண்ணதாசனா? வாலிபக் கவிஞர் வாலியா?நடுவர் “இசைக்கலைமணி”இராஜபாளையம் உமாசங்கர் ,செயலாளர், இராஜபாளையம் கம்பன் கழகம் அவர்கள் பட்டுக்கோட்டையே ...! என வாதிடுபவர்"நகைச்சுவை நாவரசி"திருமதி. மலர்விழி,நாகர்கோவில் கண்ணதாசனே...! என வாதிடுபவர்"இசைக்குயில்"திருமதி. இந்திரா விஜயலட்சுமி ,மதுரைகவிஞர் வாலியே...!என வாதிடுபவர் "சிரிப்பு மத்தாப்பூ திருமதி. அன்னலட்சுமி -திருச்சி. அனுமதி இலவசம் - அனைவரும் வருக!
105வது இலவச பல் மருத்துவ முகாம்Dr.ஜெ.தினேஷ்பாபு BDS.,நாள் :14.09.2025 ஞாயிறு,நேரம் : 10 மணி முதல் மதியம் 2 மணி வரைஇடம் - ஸ்ரீ ராஜ்குமார் பல் & இம்ப்ளாண்ட் மருத்துவமனை488- தென்காசி ரோடு, சுபம் ஸ்வீட்ஸ் எதிரில், ராம்கோ & சித்ரா மருத்துவமனை அருகில், இராஜபாளையம்.இந்த முகாமில் இலவசமாக பல் எடுக்கப்படும். இலவச பல் மருத்துவ ஆலோசனை வழங்கப்படும்.மாதந்தோறும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை இம்மருத்துவ முகாம் நடைபெறும்.ஸ்ரீ ராஜ்குமார் பல் மருத்துவமனைசெல்: 94864 26199, 04653-223199
ஆதன மீதில் அரசு சிவலிங்கம் போதும் இரண்டினில் ஒன்றைத்தா பித்து மேதகு சந்நிதி மேவுத் தரம்பூர்வங் காதலிற்சோடசங் காணுப சாரமே- திருமூலர்நிகழும் மங்களகரமான விஸ்வாவஸு நாம ஸம்வத்ஸர ஆவணி மாதம் 13ம் தேதி (29.08.2025) வெள்ளிக்கிழமை சஷ்டி திதி நன்னாளில் காலை 9.00 மணிக்கு மேல்ஸ்ரீலஸ்ரீ சாந்தானந்த சுவாமிகளின் 36வது குருபூஜை விழா இராஜபாளையம் சிரஞ்சீவி மலைச்சாரலில் அமைந்துள்ள அவரது நினைவாலயத்தில் நடைபெற உள்ளது.திரு S.விஸ்வநாதன் அவர்கள் தர்மாதிகாரி ஸ்ரீ சிருங்கேரி மடம், மேல்மங்களம்.கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்கள். ஆன்மீக அன்பர்களும் சீடர்களும் கலந்து கொண்டு ஸ்ரீ சுவாமிகளின் குருவருள் பெற்றுய்ய வேண்டுகிறோம்.இப்படிக்கு ஸ்ரீ P.R.வெங்கட்ராம ராஜா தலைவர், ஸ்ரீ சாந்தானந்த சுவாமிகள் அறக்கட்டளை, இராஜபாளையம்.
தரம் சேல் , தரமான சேல் ! 50% தள்ளுபடி விலையில் உலக தரம் வாய்ந்தபெட் ஷீட்கள் , இதர படுக்கை விரிப்புகள், தலையணை, தலையணை உறைகள்Bed Sheets, Comforters, Quilts , Pillows , Pillowcoversபுதுவித டிசைன்கள் அட்டகாசமான வண்ணங்கள்இடம் - காந்தி கலை மன்றம், இராஜபாளையம்.நாள் - 08.08.2025 முதல் 10.08.2025 வரைநேரம் - காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரைமேலும் தொடர்புக்கு +91 99444 41608.
இராஜபாளையம் ஆனந்தாஸ் M.B.ராதாகிருஷ்ணன் அவர்கள் நினைவாகநகைச்சுவை மன்றம் நடத்தும் சிறப்பு நகைச்சுவை நிகழ்ச்சிநாள் : 03.08.2025 ஞாயிற்றுக்கிழமை, நேரம் : மாலை 5.00 மணிஇடம் : ஆனந்தா கார்டன், தென்காசி ரோடு, இராஜபாளையம்.சிறப்புரைமுனைவர் சிவ. சதீஸ்குமார்,சொற்பொழிவாளர். சென்னை.அவர்கள்அனைவரும் வருக! வருகவென்றுஆனந்தாஸ் குடும்பத்தார்அன்புடன் அழைக்கின்றோம்.