25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >>


வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் மற்றும் திருத்தம் செய்தல் பணிகளுக்கான சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் மற்றும் திருத்தம் செய்தல் பணிகளுக்கான சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, 01.01.2027-ஐ தகுதி நாளாகக் கொண்டு நடைபெறவுள்ள வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்தம் 2027-ன் ஒரு பகுதியாக, விருதுநகர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளும் பணிகளுக்கான சிறப்பு முகாம்கள் அனைத்து வாக்குச்சாவடிகளிலும், 21.11.2026, 22.11.2026 மற்றும் 28.11.2026, 29.11.2026 ஆகிய நாட்களில்  நடைபெற உள்ளது. 

எனவே விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட 18 வயது பூர்த்தியடைந்த இளம் வாக்காளர்கள்/முதல் முறை வாக்காளர்கள் மற்றும் வாக்காளர்களாக பதிவு செய்ய விடுபட்டவர்கள் (Left Out Voters) பெயர் சேர்க்க விண்ணப்பங்கள் அளித்து பயன் பெறலாம்.
 ஏற்கனவே வாக்காளர்களாக பதிவு செய்தோர் விண்ணப்பங்கள் அளித்து முகவரி மாற்றம், புகைப்பட மாற்றம் செய்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News