25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


முக்கிய அறிவிப்பு

Aug 08, 2026

2026-ல் முழு சூரிய கிரகணம்! 📅 தேதி: 12 ஆகஸ்ட் 2026

2026-ம் ஆண்டின் முக்கிய சூரிய கிரகணம் ஆகஸ்ட் 12-ம் தேதி நிகழ உள்ளது.குறிப்பு: இந்த சூரிய கிரகணத்தை இந்தியாவில் இருந்து நேரடியாகப் பார்க்க முடியாது.ஐரோப்பாவின் சில பகுதிகள், கிரீன்லாந்து, ஐஸ்லாந்து உள்ளிட்ட பகுதிகளில் இந்த கிரகணத்தை காண முடியும்.

Aug 01, 2026

மிக கனமழை எச்சரிக்கை.

கேரளா மற்றும் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்கள்கன்னியாகுமரிதிருநெல்வேலிதென்காசிதேனிகோயம்புத்தூர்நீலகிரிஅதிக கனமழை பெய்யக்கூடிய தாலுகாக்கள்அம்பாசமுத்திரம்நாங்குநேரிதென்காசிசெங்கோட்டைகடையநல்லூர்உத்தமபாளையம்வால்பாறைமாஞ்சோலை, கோதையாறு உள்ளிட்ட மலைப்பகுதிகளில் மிக கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.பிற தென் மாவட்டங்களில் சாரல் மழைதூத்துக்குடிதிருநெல்வேலி (சமவெளி பகுதிகள்)விருதுநகர்மதுரைகுற்றாலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் காட்டாற்று வெள்ள அபாயம் இருப்பதால், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Jul 25, 2026

பன்மொழி புலவர் மு.கு.ஜகந்நாதராஜா அவர்கள் 93வது பிறந்தநாள் விழா.

ஜகந்நாதராஜா இலக்கிய தத்துவ ஆய்வு மற்றும் மொழிபெயர்ப்பு நிறுவன அறக்கட்டளை நடத்தும் பன்மொழி புலவர் மு.கு.ஜகந்நாதராஜா பிறந்தநாள் விழாதலைமை - மருத்துவர்.கு. கணேசன் அவர்கள் பொதுநல மருத்துவர், கணேஷ் மருத்துவமனை மற்றும் மருத்துவ எழுத்தாளர்முன்னிலை - கவிஞர். இரா.ஆனந்தி அவர்கள், அமைப்பாளர் நாற்று இலக்கிய அமைப்பு. இராஜபாளையம்திரு.பி.லோகநாதராஜா அவர்கள், ஸ்ரீ ரமணாலயம் டிரஸ்ட் இராஜபாளையம்.26 ஜூலை 2026, ஞயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் 12.30 மணி வரை,இடம்: முதுனூர் தாயாதியார் மண்டபம், சக்கராஜா கோட்டை இராஜபாளையம். அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.பன்மொழி புலவர் மு.கு.ஜகந்நாதராஜா நூலகம், JRLR டிரஸ்ட் நிர்வாகிகள்.

Jul 18, 2026

இராஜபாளையம் ஜவுளி வர்த்தகர்கள் சங்கம் மற்றும்ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவமனை, இராஜபாளையம் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச முழு மருத்துவ பரிசோதனை முகாம்  ( Free Master Health Checkup )

நாள் : 19-07-2026 ஞாயிற்றுக்கிழமை, காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரைஇடம்: இராஜபாளையம் தொழில் வர்த்தகசங்கம், இராஜபாளையம்.மதுரைக்கு நிகரான மருத்துவ வசதிகள் கொண்ட நம் நகர் ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவமனையின் தலைசிறந்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவ குழுவினர்கள் Dr.P.K. இராமசுப்பிரமணியன் M.S.அறுவை சிகிச்சை நிபுணர், அவர்கள் தலைமையில் இந்த முகாமை நடத்தவுள்ளார்கள்.பங்கேற்கும் மருத்துவர்கள்:Dr.K. இராஜதுரை M.B.B.S.D.C.H. குழந்தைகள் நல மருத்துவர். Dr. N.V. விவேக், M. D. D. M . இருதய நோய் சிறப்பு நிபுணர்.  Dr.M. திருமுருகன் M.S.(ORTHO) எலும்பு, மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர்.  Dr.K. புதியராஜ் M.B.B.S.RCD.(Diab.) சர்க்கரை நோய் மருத்துவ நிபுணர். Dr. E. கவி அரசன் M. D .இருதய மற்றும் பொது நல மருத்துவர். , Dr. R. மகாலட்சுமி,  பொது மற்றும் மகளிர் நல மருத்துவர்.பரிசோதனைகள்உடல் எடை, உயரம்எக்கோ கார்டியோ கிராம்இரத்த அழுத்தம்ஈசிஜிBMI பரிசோதனைஎக்ஸ்-ரேஇரத்தத்தில் சர்க்கரையின் அளவுஹீமோகுளோபின் அளவுதேவைப்படுவோருக்கு மருத்துவரின் பரிந்துரைப்படி பரிசோதனை செய்யப்படும்.உடல் சம்மந்தப்பட்ட எல்லா நோய்களுக்கும் பரிசோதனை செய்து மருத்துவரின் பரிந்துரைப்படி தேவைப்படுவோருக்கு இலவசமாக மருந்து, டானிக், மாத்திரைகள் வழங்கப்படும்.குழந்தைகள், மகளிர், பெரியவர்கள், மூத்தோர் ஆகிய அனைவரும் பயன்படும் வகையில் முதன்முறையாக நமது நகரில் பிரத்யேகமாக நடத்தப்படும் இந்த சிறப்பு வாய்ந்தமருத்துவ முகாமில் அனைவரும் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.முதலில் வரும் 150 பேருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.மருத்துவ முகாமிற்கு வருபவர்கள் ஆதார் கார்டு கொண்டு வரவும்.

Jul 17, 2026

தமிழக அரசு லஞ்சம் கேட்டால் 9498180936 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் பொதுமக்கள் புகார் அளிக்கலாம்.

தமிழக அரசுலஞ்சம் கேட்குறாங்களா?பயப்படாதீங்க!புகார் அளியுங்கள் - ஊழலை ஒழிப்போம்!தமிழக அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் வாட்ஸ்அப் மூலம் பொதுமக்கள் புகார் அளிக்கலாம்.94981 80936WhatsApp மூலம் புகார் அளிக்கலாம்.லஞ்சம் தொடர்பான புகார்களை DVACக்கு கீழ்கண்ட வழிகளிலும் புகார் அளிக்கலாம்.dvac@nic.in044-22321090இதற்கான சுற்றிக்கையை தலைமை செயலாளர் சாய்குமார் வெளியிட்டுள்ளார்.ஊழலை ஒழிப்பது நம் கடமை.நேர்மையான தமிழகம் நம்மால் சாத்தியம்.புகார் அளிப்போம்.ஊழலை ஒழிப்போம்.நேர்மையை நிலை நிறுத்துவோம்.

Jul 16, 2026

இலவச திருப்பதி பாலாஜி தரிசனத் திட்டம்.

ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் மாண்புமிகு திரு.நாரா சந்திரபாபு நாயுடு அவர்கள், முதியோர்களுக்காக இலவச திருப்பதி பாலாஜி தரிசனத் திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளார்.பயனாளிகள்: 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியவர்கள்.இலவச தரிசன நேரங்கள் : காலை 10:00 மணி - பிற்பகல் 3:00 மணி நுழைவு முறை: நீங்கள் உங்கள் புகைப்பட அடையாள அட்டை மற்றும்வயதுச் சான்றை கவுண்டர் S-1-இல் காட்டினால் மட்டும் போதும்.கோயிலுக்குச்செல்லும்வழிகள்:கோயிலின்வலதுசுவரையொட்டி, பாலத்தின்கீழுள்ளமண்டபத்தின்வழியாகச்செல்லவும். படிக்கட்டுகளில் ஏறத் தேவையில்லை.விசாலமான இடம் உள்ளது.வசதிகள்:1.இலவச உணவு:தரிசனத்திற்குப் பிறகு, உங்களுக்கு இலவசமாக சூடான சாம்பார் சாதம், தயிர் சாதம் மற்றும் சூடான பால் வழங்கப்படும்.2.பேட்டரி கார்கள்:வசதிக்காக, பேட்டரிர் கார்களும் கிடைக்கின்றன. அவை உங்களை வாகனநிறுத்துமிடத்திலிருந்து கவுண்டருக்கும் அங்கிருந்து வெளியேறும் வாயிலுக்கும் அழைத்துச் செல்லும்.முக்கிய குறிப்பு:எந்தவிதமான வற்புறுத்தலோ அல்லது அழுத்தமோ இல்லை- தரிசனம் முதியவர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.நீங்கள் தரிசன வரிசையில் சேர்ந்தவுடன் உங்கள் தரிசனத்தை முடித்து, வெறும் 30 நிமிடங்களில் வெளியே வரலாம்.உதவிக்கு தொடர்பு கொள்ள:திருமலை திருப்பதி தேவஸ்தானம் உதவி மைய எண்: 87722 77777சிறப்பு வேண்டுகோள்: தயவுசெய்து இந்தத் தகவலை உங்கள் மற்ற குழுக்களில் உள்ள அனைவருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்..!!

Jul 08, 2026

அன்பிற்குரிய பொது மக்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நடைபெறும் முறைகேடுகள்.சட்டவிரோதமாக பணம் பெறுதல், திருக்கோயில்களின் திருப்பணிகள் மற்றும் திருக்கோயில்களின் வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு லஞ்சம் பெறுதல் போன்ற குற்றங்களை பற்றி கீழே வழங்கப்பட்டுள்ள எனது தனிப்பட்ட இ-மெயில் முகவரிக்கு தகுந்த விளக்கம் மற்றும் ஆதாரங்களுடன் புகார்களை அளியுங்கள்.நானும் எனது அலுவலகமும் நேரடியாக இந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான வழிவகைகளை செய்வோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.E- Mail : minister_hrce@tn.gov.inஅன்புடன்.S.ரமேஷ் - இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்.

Jul 06, 2026

தியாகச் செம்மல் பி.எஸ். குமாரசாமி ராஜா அவர்களின் 128 ஆவது பிறந்தநாள் விழா.

தியாகச் செம்மல்பி.எஸ். குமாரசாமி ராஜா அவர்களின்128 ஆவது பிறந்தநாள் விழா ஸ்ரீமதி.பி.எஸ்.கே. ருக்மணி அம்மாள் அரங்கத்தில் 8-7-2026 புதன்கிழமை சிறப்பாக நடைபெற உள்ளது. 8-7-2026 புதன்கிழமைகாலை 9.00 மணிக்குஅமரர் பி.எஸ்.குமாரசாமி ராஜா அவர்கள் நினைவாலயத்தில்ஸ்ரீ பி.ஏ.சி .ராமசாமி ராஜா இசைப்பள்ளி குழுவினரின் கீர்த்தனாஞ்சலியுடன் புஷ்பாஞ்சலி நடைபெற உள்ளது. நிகழ்ச்சி நிரல் 8-7-2026 மாலைபுதன்கிழமை 6.00 மணிகாந்தி கலை மன்றம்,ஸ்ரீமதி.பி.எஸ்.கே.ருக்மணி அம்மாள் அரங்கம்விழாத்தலைவர்ராம்கோ குரூப் சேர்மன்திரு. P.R. வெங்கட்ராம ராஜா அவர்கள்(மேனேஜிங் டிரஸ்டி, காந்தி கலை மன்றம் )வரவேற்புரை :திரு. P.J. ராம்குமார் ராஜா அவர்கள் (டிரஸ்டி, காந்தி கலை மன்றம்)"தேச- தெய்வ சிந்தனை” கீர்த்தனைகளுடன் கர்நாடக இசை நிகழ்ச்சி நிகழ்த்துபவர்'செல்வி' M.S. ஷண்முகப்ரியா Ph.D அவர்கள்(ஸ்ரீமதி பாலாமணி ஈஸ்வர் AIR & Dr. K. ருக்மணி அவர்களின் சிஷ்யை, ஸ்ரீமதி ரெங்கநாயகி அவர்களின் மகள்) விருந்தினர்களை கௌரவித்தல்திரு. N.K. ஸ்ரீகண்டன் ராஜா அவர்கள்திரு. P.R. குமாரசாமி ராஜா அவர்கள்

Jul 06, 2026

ராஜபாளையம் மின் நுகர்வோர் குறைதீர் முகாம்.

 ராஜபாளையம் மின் கோட்ட செயற்பொறியாளர் முத்துராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:ராஜபாளையம் தாலுகா மக்களின் மின்சாரம் தொடர்பான நீண்டகாலமாக தீர்க்கப்படாத பிரச்சினைகள் மற்றும் இதர குறைகளுக்கு தீர்வுகாணும் வகையில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.விருதுநகர் மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் பாலசுப்ரமணியம் முன்னிலையில் குறைகள் கேட்டறியப்படும்.ஜூலை 7, காலை 11:00 மணி.ராஜபாளையம் பொன்னகரம் செயற்பொறியாளர் அலுவலகம்.எனவே, மின் நுகர்வோர்கள் தங்கள் மின்வாரியம் சம்பந்தப்பட்ட குறைகளை இந்த முகாமில் நேரில் தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Jul 03, 2026

ஸ்ரீ பி.ஆர். ராமசுப்பிரமணிய ராஜா ஸ்ரீதர்மரக்ஷகர் -ராம்கோ குரூப் அவர்களின் 91-வது பிறந்தநாள் விழா அன்று  04.07.2026 சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு கர்நாடக இசை நிகழ்ச்சி.

ஸ்ரீ பி.ஆர். ராமசுப்பிரமணிய ராஜா,ஸ்ரீதர்மரக்ஷகர் -ராம்கோ குரூப் அவர்களின் 91-வது பிறந்தநாள் விழா அன்று  04.07.2026 சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு கர்நாடக இசை நிகழ்ச்சிஇராஜபாளையம், திருமலை திருப்பதி தேவஸ்தானம் கல்யாண மண்டபம் A/C ஸ்ரீ பி.ஏ.சி.ராமசாமி ராஜா அரங்கத்தில் "கலைமாமணி"ஸ்ரீ உண்ணி கிருஷ்ணன் & செல்வி உத்ரா உண்ணி கிருஷ்ணன்அவர்களின் கர்நாடக இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.அனைவரும் கேட்டு மகிழ வருக !  

1 2 3 4 5 6 7 8 9 10 ... 27 28

AD's



More News