DRIVING WITHOUT LICENCE - ₹5,000. DRIVING WITHOUT REGISTRATIOR (RC) - ₹3,000 - 5,000. WITHOUT INSURANCE - ₹2000 (FIRST) ₹4000 (REPEAT). WITHOUT HELMET - ₹1,000 + LICENCE SUSPENSION. SEAT BELT NOT WEARING - ₹1,000. TRIPLE RIDING (BIKE) - ₹1,000 + DL SUSPENSION. OVER SPEEDING CAR/LMV: ₹1,000 - 2,000. OVER SPEEDING HEAVY VEHICLES: ₹2,000-4,000. DRUNK AND DRIVE - ₹10,000 + JAIL..
புதுப்பாளையம் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில் , நிகழும் மங்களகரமான 1201-ம் ஆண்டு ஸ்ரீபராபவ நாம வருஷம் சித்திரை மாதம் 8-ம் தேதி 21.04.2026 செவ்வாய்க்கிழமை அன்று சதுர்த்தி திதியும், மிருகசீரிஷ நட்சத்திரமும், அமிர்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் அன்று காலை 6.15 மணிக்கு மேல் 7.15 மணிக்குள் மேஷ லக்கினத்தில் உத்ஸவ த்வஜாரோகணம் (கொடியேற்றும் வைபவம்) நடைபெறும். மேற்படி திருவிழா நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அம்மன் அருளைப்பெறும்படி வேண்டிக்கொள்கிறோம்.நிர்வாக அறங்காவலர் குழுதிரு.K.K. உதயகுமார் ராஜாதிரு.S.V. கார்த்திக் ராஜாதிரு.P.P. சசிகுமார் ராஜாதிரு.S.R. வெங்கடேஷ் ராஜாஇப்படிக்குதிரு. S.S.B. வெங்கட்ட ராஜா நிர்வாக அறங்காவலர் குழுத்தலைவர்புதுப்பாளையம் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில்,இராஜபாளையம்.
ஸ்ரீமதி லிங்கம்மாள் ராமராஜு சாஸ்திர பிரதிஷ்டா டிரஸ்ட் இராஜபாளையம்.75 ஆண்டுகள்சின்மயா அம்ரித் மஹோத்சவ்,சின்மயா மிஷன் தொடங்கப்பட்டு 75ம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டுஆன்மீக சிறப்புச் சொற்பொழிவுநிகழ்த்துபவர்பரமபூஜ்ய ஸ்வாமி ஸ்ரீமத் அனுகூலானந்தாஜீநாள் : 15-04-2026, புதன்கிழமைநேரம் : மாலை 06.30 மணிக்குஇடம் : ஸ்ரீமதி ருக்மணியம்மாள் அரங்கம், இராஜபாளையம்.அனைவரும் வருக !இப்படிக்கு "குருபக்தமணி" பி.ஆர். வெங்கட்ராம ராஜா. டிரஸ்டி.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே கடந்த பல ஆண்டுகளாக உரிமம் இன்றி செயல்பட்டு வந்ததாக கூறப்படும் பட்டாசு தொழிற்சாலையில் இன்று ஏற்பட்ட மிகப்பெரிய வெடி விபத்து, மாவட்ட மக்களையும் சமூக ஆர்வலர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.விருதுநகர் மாவட்டம் ஆண்டுதோறும் குறைந்தது 15க்கும் மேற்பட்ட பட்டாசு விபத்துகளை சந்தித்து வருகிறது. இவ்விபத்துகளால் ஆண்டுக்கு சராசரியாக 60 முதல் 80 பேர் வரை உயிரிழப்பது மிகுந்த கவலைக்குரிய விடயமாகும். இருந்தபோதிலும், விபத்துகள் நடைபெறும் ஒவ்வொரு முறையும் அரசு நிவாரணம் வழங்குவதில் மட்டுமே கவனம் செலுத்துகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.விபத்துகளை முற்றிலும் தடுக்கும் வகையில் நீண்டகால திட்டமிடல் மற்றும் கடுமையான கண்காணிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பது பொதுமக்களின் கருத்தாக உள்ளது.இந்த சம்பவம் குறித்து சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான திரு. பி. ராஜகோபால் அவர்கள் கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில்,“விபத்து நடந்த பிறகு நடவடிக்கை எடுப்பது போதுமானதல்ல. விபத்து நடைபெறாமல் தடுப்பதற்கான திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு முறைகள் பலவீனமாக உள்ளன. அதிகாரிகள் தங்களது கடமைகளை முறையாக செய்திருந்தால் இவ்வாறான விபத்துகளை தவிர்க்க முடிந்திருக்குமே” எனக் குறிப்பிட்டுள்ளார்.மேலும், இந்த விபத்திற்கான முழு பொறுப்பும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனக்குறைவுக்கும், கடமையின்மைக்கும் உட்பட்டது என அவர் வலியுறுத்தினார். இதுகுறித்து முழுமையான விசாரணை நடத்தி, பொறுப்பான அதிகாரிகள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.பட்டாசு தொழிற்சாலைகளில் பாதுகாப்பற்ற சூழல், பயிற்சியற்ற மற்றும் தகுதியற்ற தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவது போன்றவை விபத்துகளுக்கு முக்கிய காரணமாக உள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக, குழந்தைத் தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்களா, தொழிலாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுகிறதா, பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதனை அரசு மற்றும் சம்பந்தப்பட்ட துறைகள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாத தொழிற்சாலைகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால்தான் எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகளைத் தடுக்க முடியும் என்றும், உயிரிழப்புகளை குறைக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.இந்த துயர சம்பவம் மீண்டும் ஒருமுறை, பட்டாசு தொழில்துறையில் பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை மீதான கேள்விகளை எழுப்பியுள்ளது. நிரந்தர தீர்வுக்கான நடவடிக்கைகளை உடனடியாக அரசு எடுக்க வேண்டியது காலத்தின்தேவை என வலியுறுத்துகின்றார்.P. Raja Gopal, Secretary General,Child Alert Alliance (CAA)Tamilnadu & Puducherry.
MEGA CAREER GUIDANCE FOR RAJAPALAIYAM EDUCATIONAL INSTITUTIONS & STUDENTS.We are Happy to Invite you to theIIT For ALL PROGRAMMEA Great Opportunity for School Management & TeachersDATE: 06.04.2026, Monday,Time: 9.30 a.m. - 12.30p.m.VENUE: A.K.D. DHARMA RAJA WOMEN'S COLLEGE, RAJAPALAIYAM.
FIRST TIME IN RAJAPALAIYAMCAREER GUIDANCE PROGRAMME FOR +2 STUDENTSDATE: 04.04.2026, SaturdayTIME: 9.00 AM - 5.00 PMVENUE: A.K.D. DHARMA RAJA WOMEN'S COLLEGE, RAJAPALAIYAM.An Initiative bySri. A.K.D. Krishnama Raju, Managing Trustee,Sri Rao Bahadur A.K.D.Dharmaraja Education Charity Trust, Rajapalaiyam.
ஏப். 1 முதல் ஜூன் 14 வரையிலான விடுமுறைக் காலத்தில் நீந்தக் கற்றுக்கொள்' பயிற்சி வகுப்பு மாவட்டவிளையாட்டு அரங்கத்தில் உள்ள நீச்சல் குளத்தில் நடத்தப்பட உள்ளது.நீச்சல் கற்றல் பயிற்சிக்கான காலை நேர வகுப்புகள் காலை 6:30 மணி முதல் 7:30 மணி வரையிலும், காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரையிலும், காலை 8:30 மணி முதல் 9:30 மணி வரையிலும் மாலை நேர வகுப்புகள் மதியம் 3:30 மணி முதல் 4:30 வரையிலும், மாலை 4:30 மணி முதல் 5:30 மணி வரையிலும், மாலை 5:30 மணி முதல் 6:30 மணி வரையிலும் நடக்க உள்ளது. பயிற்சிக் கட்டணம் ரூ.1770. சேர விரும்புவார்கால அட்டவணை படி பங்கேற்கலாம். விவரங்களுக்கு 9751393412 என்ற அலைபேசி எண்ணிற்கு அழைக்கலாம், என்றார்.
தக்ஷிணாம்னாய சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடாதீச்வர அனந்த ஸ்ரீ விபூஷித ஜகத்குரு ஸ்ரீ சங்கராசார்யஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பாரதீர்த்த மஹாஸ்வாமிகள் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் பரிபூர்ண ஆசிகளுடன்நிகழும் மங்களகரமான1200ம் ஆண்டு விஸ்வாவஸுவருஷம் பங்குனி16ம் தேதி(30.03.2026) திங்கள்கிழமையும் திரயோதசி திதியும் மகம் நக்ஷத்திரமும் கூடிய சுபதினத்தில்ஸ்ரீ ராஜகணபதி, ஸ்ரீ ஆதிசங்கரபகவத்பாதாசார்யர், ஸ்ரீசாரதாம்பாளுக்கு ஸம்வத்ஸராபிஷேகம் நிகழ்ச்சி நிரல்படி நடைபெற உள்ளது.ஆஸ்தீக மஹாஜனங்கள் திரளாக வந்துகொண்டு இறையருளுக்கு பாத்திரர்களாகுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.நிகழ்ச்சி நிரல் காலை 7.15 மணி - குருவந்தனம், கணபதி பூஜை, அனுக்ஞை புண்யாஹவாசனம், மஹாஸங்கல்பம் காலை 7.50 மணி - ஸ்ரீராஜகணபதிக்கு அதர்வஷீர்ஷ பாராயணத்துடன் அபிஷேகம் காலை 8.15 மணி - ஸ்ரீஆதிசங்கரபகவத்பாதாசார்யர்க்கு ஸ்ரீ ருத்ர பாராயண அபிஷேகம் காலை 8.45 மணி - ஸ்ரீ சாரதாம்பாளுக்கு ஸ்ரீதுர்கா, ஸ்ரீ சூக்த பாராயண அபிஷேகம் காலை 9.15 மணி- ஸஹஸ்ரநாம அர்ச்சனை காலை 10.00 மணி -தீபாராதனை, ப்ரசாதம் மாலை 6.30 மணி -ஸஹஸ்ரநாம, த்ரிஷதீ அர்ச்சனைகள் மாலை 7.15 மணி - ரதோற்சவம்இப்படிக்கு - "குருபக்தமணி" ஸ்ரீ பி.ஆர்.வெங்கட்ராம ராஜா தலைவர் - ஸ்ரீ சாரதா சமிதி,
உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம்,மற்றும் ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்,இணைந்து நடத்தும், *திருக்குறள் முற்றோதல்*5 வயது UKG மாணவன் ர. ஆதித்யா - வின் ,உலக சாதனை நிகழ்வு.நாள்: 29.03.2026 ஞாயிற்றுக்கிழமை .இடம்: அரசு பெண்கள் சிறார் நூலகம், இராஜபாளையம்.அன்பு ஆதித்யா செல்வத்துக்கு அன்பு வாழ்த்துகள்.ஆதித்யாவின் அண்ணன் அகிலேஷ் ஏற்கனவே 1330 குறள் சொல்லி பரிசு பெற்றவர்.
இராஜபாளையம் கம்பன் கழக அறக்கட்டளை 46-ஆம் ஆண்டுக் கம்பன் விழா,நாள் : 2026 மார்ச் 22. ஞாயிறு இடம்:ஆனந்தா கார்டன், இராஜபாளையம் பட்டிமண்டபத் தலைப்பு :வியக்க வைக்கும் வல்லமை மிக்கவர்கள் கம்பன் பேசியவர்களா? கம்பனைப் பேசியவர்களா?நடுவர் : சொல்வேந்தர் திரு.சுகி.சிவம் அவர்கள்,அனுமதி இலவசம்.பார்வையாளர்களுக்கு மதிய உணவு, இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.