வடகிழக்குப் பருவமழை பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை, பொதுமக்களுக்கு மின்வாரியம் அறிவுறுத்தல்.
வடகிழக்குப் பருவமழை பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்குமாறு பொதுமக்களுக்கு மின்வாரியம் அறிவுறுத்தல்
"மின்கம்பங்கள், மின்மாற்றிகள், மின்பகிர்மானப் பெட்டிகள் அருகில் செல்வதையும், அதன் அருகே தேங்கிய மழைநீரில் இறங்குவதையும் தவிர்க்க வேண்டும்"
தரையிலோ, சாலையிலோ அல்லது மழைநீரிலோ அறுந்து விழுந்த மின்கம்பிகளைத் தொடவோ, அப்புறப்படுத்தவோ கூடாது
'இடி, மின்னலின்போது திறந்தவெளி, தனித்த மரங்கள், மின்கம்பங்கள் மற்றும் மின்கம்பிகளின் கீழ் நிற்பதைத் தவிர்க்க வேண்டும்
மின்கம்பிகளில் விழுந்த மரக்கிளைகளை வெட்டவோ, இழுத்து அகற்றவோ கூடாது
மின்கம்பங்களில் கால்நடைகளைக் கட்டுதல், துணிகளை உலர்த்துதல், விளம்பரப் பலகைகள் அல்லது பந்தல்களுக்கு பயன்படுத்துதலை தவிர்க்க வேண்டும்"
வீடுகளில் மின்கசிவால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்க RCCB (RESIDUAL CURRENT CIRCUIT BREAKER)பொருத்த வேண்டும்.
மின்தடை, அறுந்த மின்கம்பிகள், மின்கசிவு தொடர்பான புகார்கள் மற்றும் அவசர உதவிக்கு மின்னகத்தை அணுகவும்
* 94987 94987 என்ற எண்ணை அழைத்தோ அல்லது வாட்ஸ்அப் வாயிலாகவே தொடர்புகொள்ளலாம்.
0
Leave a Reply