25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


முக்கிய அறிவிப்பு

Apr 23, 2026

ஓட்டு போட்டதும் உடனே வெளியே வராதீங்க..

ஓட்டு போட்டு முடித்த பிறகு, திரையில் உங்கள் ஓட்டு பதிவு செய்யப்பட்ட சின்னம் சில விநாடிகள் காட்டப்படும்.   நீங்கள் தேர்வு செய்த சின்னம்தானா என்று கவனமாக பார்த்து உறுதி செய்து கொண்டு வாருங்கள் . இது உங்கள் உரிமை மட்டுமல்ல... உங்கள் பொறுப்பும் கூட.. "ஒரு ஒட்டு... ஒரு எதிர்காலம்.

Apr 22, 2026

ராம்கோ தொழில் நிறுவனங்களின் ஸ்தாபகர் இராஜபாளையம் நகர் தொழில் தந்தை பெருந்தகை ஸ்ரீமான் பி.ஏ.சி.ராமசாமி ராஜா அவர்களின் 132 வது பிறந்தநாள் உத்சவம்.

ராம்கோ தொழில் நிறுவனங்களின் ஸ்தாபகர் இராஜபாளையம் நகர் தொழில் தந்தை,பெருந்தகை ஸ்ரீமான் பி.ஏ.சி.ராமசாமி ராஜா அவர்களின் 132 வது பிறந்தநாள் உத்சவம்.24.04.2026 வெள்ளிக்கிழமை காலை 6.30 மணிக்கு அன்னாரின் நினைவாலயத்தில் ஸ்ரீமான் பி.ஏ.சி. ராமசாமி ராஜா நினைவு இசைப்பள்ளி குழுவினரால் கீர்த்தனாஞ்சலியும், அதனைத் தொடர்ந்து புஷ்பாஞ்சலியும் நடைபெற உள்ளது.காலை 7.30 மணி அளவில் இராஜபாளையம் அருள்மிகு சொக்கர் கோவிலில் ஸ்தாபகர் அவர்களின் திருஉருவப்படத்திற்கும், ஜோதிக்கும் பூஜைகள் நடத்தப்பட்டு, பின்னர் ஜோதியினை ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, மத்தியசேனை, சங்கரலிங்காபுரம் வழியாக தொடர் ஓட்டத்தின் மூலம் ராமசாமி ராஜா நகருக்கு (துலுக்கப்பட்டி ) 'ராம்கோ சிமெண்ட்ஸ் ஊழியர்கள் எடுத்துச்செல்வார்கள்.காலை 7.45 மணிக்கு தென்காசி சாலையில் உள்ள அமரர் ஸ்ரீ பி.ஏ.சி. ராமசாமி ராஜா அவர்களின் திருஉருவச்சிலைக்கு பூஜைகள் நடத்தப்பட்டு அங்கு பொது மக்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். 24-04-2026 வெள்ளிக்கிழமை மாலை 6:30 மணிக்கு ஸ்ரீ ரித்விக் ராஜா அவர்களின் கர்நாடக இசை நிகழ்ச்சி,இடம் : திருமலை திருப்பதி தேவஸ்தானம் கல்யாண மண்டபம் A/C ஸ்ரீ P.A.C.ராமசாமி ராஜா அரங்கம், இராஜபாளையம். 

Apr 21, 2026

தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை.

தற்போது புதிய மோசடி தொடங்கியுள்ளது.யாரோ ஒருவர் தெரிந்தே உங்கள் கணக்கு அல்லது Google Pay- க்கு  பணத்தை அனுப்புகிறார், மேலும் உங்கள் கணக்கில் தவறுதலாக பணம் இருந்ததாக உங்களுக்குத் தெரிவிக்க உங்களை அழைக்கிறார். மேலும் பணத்தை அவர்களின் எண்ணுக்கு திருப்பி அனுப்புமாறு கோருகிறார். நீங்கள் பணத்தை திருப்பி அனுப்பினால், உங்கள் கணக்கு ஹேக் செய்யப்படும். எனவே, யாராவது உங்கள் கணக்கில் தவறாகப் பணம் பெற்றிருந்தால், அழைப்பாளரிடம் அடையாளச் சான்றுடன் அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு வந்து பணமாக எடுத்துக் கொள்ளச் சொல்லுங்கள். இந்த மோசடி இப்போதுதான் தொடங்கியுள்ளது. என்பதை கவனத்தில் கொள்ளவும்.

Apr 18, 2026

ஏப்ரல்1 முதல் மின்சாரக் கட்டணம் உயர்வு.

30 அலகுகளுக்குகீழ்,4.3 சதவீதத்தினாலும்,30 முதல் 60 அலகுகளுக்கு 6.9 சதவீதத்தினாலும்,61 முதல் 90 அலகுகளுக்கு 6.9 வீதத்தினாலும்,91 முதல் 180 அலகுகளுக்கு கீழ் 7.2 வீதத்தினாலும், 180 அலகுகளுக்கு மேல் 25 சதவீதத்தினாலும் மின்சார கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளது.

Apr 18, 2026

NEW TRAFFIC RULES WITH EFFECT FROM APRIL 2026!

DRIVING WITHOUT LICENCE - ₹5,000. DRIVING WITHOUT REGISTRATIOR (RC) - ₹3,000 - 5,000. WITHOUT INSURANCE - ₹2000 (FIRST) ₹4000 (REPEAT). WITHOUT HELMET - ₹1,000 + LICENCE SUSPENSION. SEAT BELT NOT WEARING - ₹1,000. TRIPLE RIDING (BIKE) - ₹1,000 + DL SUSPENSION. OVER SPEEDING CAR/LMV: ₹1,000 - 2,000. OVER SPEEDING HEAVY VEHICLES: ₹2,000-4,000. DRUNK AND DRIVE - ₹10,000 + JAIL..

Apr 18, 2026

புதுப்பாளையம் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில் கொடியேற்றும் வைபவம்.

புதுப்பாளையம் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில் , நிகழும் மங்களகரமான 1201-ம் ஆண்டு ஸ்ரீபராபவ நாம வருஷம் சித்திரை மாதம் 8-ம் தேதி 21.04.2026 செவ்வாய்க்கிழமை அன்று சதுர்த்தி திதியும், மிருகசீரிஷ நட்சத்திரமும், அமிர்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் அன்று காலை 6.15 மணிக்கு மேல் 7.15 மணிக்குள் மேஷ லக்கினத்தில் உத்ஸவ த்வஜாரோகணம் (கொடியேற்றும் வைபவம்) நடைபெறும். மேற்படி திருவிழா நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அம்மன் அருளைப்பெறும்படி வேண்டிக்கொள்கிறோம்.நிர்வாக அறங்காவலர் குழுதிரு.K.K. உதயகுமார் ராஜாதிரு.S.V. கார்த்திக் ராஜாதிரு.P.P. சசிகுமார் ராஜாதிரு.S.R. வெங்கடேஷ் ராஜாஇப்படிக்குதிரு. S.S.B. வெங்கட்ட ராஜா நிர்வாக அறங்காவலர் குழுத்தலைவர்புதுப்பாளையம் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில்,இராஜபாளையம்.

Apr 14, 2026

சின்மயா மிஷன் தொடங்கப்பட்டு 75ம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு ஆன்மீக சிறப்புச் சொற்பொழிவு

ஸ்ரீமதி லிங்கம்மாள் ராமராஜு சாஸ்திர பிரதிஷ்டா டிரஸ்ட் இராஜபாளையம்.75 ஆண்டுகள்சின்மயா அம்ரித் மஹோத்சவ்,சின்மயா மிஷன் தொடங்கப்பட்டு 75ம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டுஆன்மீக சிறப்புச் சொற்பொழிவுநிகழ்த்துபவர்பரமபூஜ்ய ஸ்வாமி ஸ்ரீமத் அனுகூலானந்தாஜீநாள் : 15-04-2026, புதன்கிழமைநேரம் : மாலை 06.30 மணிக்குஇடம் : ஸ்ரீமதி ருக்மணியம்மாள் அரங்கம், இராஜபாளையம்.அனைவரும் வருக !இப்படிக்கு "குருபக்தமணி" பி.ஆர். வெங்கட்ராம ராஜா.   டிரஸ்டி.

Apr 13, 2026

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்து – நிரந்தர தீர்வு எப்போது?

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே கடந்த பல ஆண்டுகளாக உரிமம் இன்றி செயல்பட்டு வந்ததாக கூறப்படும் பட்டாசு தொழிற்சாலையில் இன்று ஏற்பட்ட மிகப்பெரிய வெடி விபத்து, மாவட்ட மக்களையும் சமூக ஆர்வலர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.விருதுநகர் மாவட்டம் ஆண்டுதோறும் குறைந்தது 15க்கும் மேற்பட்ட பட்டாசு விபத்துகளை சந்தித்து வருகிறது. இவ்விபத்துகளால் ஆண்டுக்கு சராசரியாக 60 முதல் 80 பேர் வரை உயிரிழப்பது மிகுந்த கவலைக்குரிய விடயமாகும். இருந்தபோதிலும், விபத்துகள் நடைபெறும் ஒவ்வொரு முறையும் அரசு நிவாரணம் வழங்குவதில் மட்டுமே கவனம் செலுத்துகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.விபத்துகளை முற்றிலும் தடுக்கும் வகையில் நீண்டகால திட்டமிடல் மற்றும் கடுமையான கண்காணிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பது பொதுமக்களின் கருத்தாக உள்ளது.இந்த சம்பவம் குறித்து சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான திரு. பி. ராஜகோபால் அவர்கள் கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில்,“விபத்து நடந்த பிறகு நடவடிக்கை எடுப்பது போதுமானதல்ல. விபத்து நடைபெறாமல் தடுப்பதற்கான திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு முறைகள் பலவீனமாக உள்ளன. அதிகாரிகள் தங்களது கடமைகளை முறையாக செய்திருந்தால் இவ்வாறான விபத்துகளை தவிர்க்க முடிந்திருக்குமே” எனக் குறிப்பிட்டுள்ளார்.மேலும், இந்த விபத்திற்கான முழு பொறுப்பும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனக்குறைவுக்கும், கடமையின்மைக்கும் உட்பட்டது என அவர் வலியுறுத்தினார். இதுகுறித்து முழுமையான விசாரணை நடத்தி, பொறுப்பான அதிகாரிகள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.பட்டாசு தொழிற்சாலைகளில் பாதுகாப்பற்ற சூழல், பயிற்சியற்ற மற்றும் தகுதியற்ற தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவது போன்றவை விபத்துகளுக்கு முக்கிய காரணமாக உள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக, குழந்தைத் தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்களா, தொழிலாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுகிறதா, பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதனை அரசு மற்றும் சம்பந்தப்பட்ட துறைகள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாத தொழிற்சாலைகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால்தான் எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகளைத் தடுக்க முடியும் என்றும், உயிரிழப்புகளை குறைக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.இந்த துயர சம்பவம் மீண்டும் ஒருமுறை, பட்டாசு தொழில்துறையில் பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை மீதான கேள்விகளை எழுப்பியுள்ளது. நிரந்தர தீர்வுக்கான நடவடிக்கைகளை உடனடியாக அரசு எடுக்க வேண்டியது காலத்தின்தேவை என  வலியுறுத்துகின்றார்.P. Raja Gopal, Secretary General,Child Alert Alliance (CAA)Tamilnadu & Puducherry.

Apr 04, 2026

MEGA CAREER GUIDANCE FOR RAJAPALAIYAM EDUCATIONAL INSTITUTIONS & STUDENTS

MEGA CAREER GUIDANCE FOR RAJAPALAIYAM EDUCATIONAL INSTITUTIONS & STUDENTS.We are Happy to Invite you to theIIT For ALL PROGRAMMEA Great Opportunity for School Management & TeachersDATE: 06.04.2026, Monday,Time: 9.30 a.m. - 12.30p.m.VENUE: A.K.D. DHARMA RAJA WOMEN'S COLLEGE, RAJAPALAIYAM.

Apr 03, 2026

FIRST TIME IN RAJAPALAIYAM CAREER GUIDANCE PROGRAMME FOR +2 STUDENTS.

FIRST TIME IN RAJAPALAIYAMCAREER GUIDANCE PROGRAMME FOR +2 STUDENTSDATE: 04.04.2026, SaturdayTIME: 9.00 AM - 5.00 PMVENUE: A.K.D. DHARMA RAJA WOMEN'S COLLEGE, RAJAPALAIYAM.An Initiative bySri. A.K.D. Krishnama Raju, Managing Trustee,Sri Rao Bahadur A.K.D.Dharmaraja Education Charity Trust, Rajapalaiyam.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 27 28

AD's



More News