தேங்காய்ப்பால் குழம்பு
தேவையான பொருட்கள் - தேங்காய் 1, பீர்க்கங்காய் 1, மிளகாய் 4, கத்தரிக்காய் 4, உருளைக்கிழஞ்கு 300 கிராம், பூண்டு 1, மல்லி, சீரகம் 2 தேக்கரண்டி அரைக்கவும்.
செய்முறை - தேங்காயைத் துருவி முதல் பால் கெட்டியாக எடுக்க வேண்டும். இரண்டாவது பாலில் அரைத்த மிளகாய், மல்லி, சீரகம் கலக்கவும். காய்கறிகளை வெட்டி மசால் கலந்து தேங்காய்ப் பாலில் உப்பு சேர்த்து வேக வைக்கவும். வெந்தவுடன் கெட்டிபாலையும் சேர்த்து ஊற்றி மஞ்சள் போடவும். வாணலியில் இரண்டு கரண்டி எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலம்போட்டு தாளித்துக் கொட்டவும். எலுமிச்சம் பழம் பாதி மட்டும் பிழிந்து இறக்கவும்.
0
Leave a Reply