வேணுகோபால சுவாமி பக்த சபா, சங்கரா கண் மருத்துவமனை சார்பில் சேத்துார் சேனைத் தலை வர் சமுதாய மண்டபத் தில் இலவச கண் சிகிச்சை முகாம் ராஜபாளையம் அருகே நடந்தது.ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர் தலைமை வகித் தார். வி. எச். பி. தென் பாரத அமைப்பாளர் சரவண கார்த்தி முன்னிலை வகித்தார். முகாமில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு கண் ணில் குறைபாடு, நீர் வடி தல், மாறுகண், 24 கரு விழி பாதிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு இலவச பரிசோதனை, அறுவை சிகிச்சை ஏற்பாடு செய்யப் பட்டது. 100க்கும் மேற் பட்ட பயனாளிகள் பயனடைந்தனர்.
உலக பார்வை தின விழிப்புணர்வு ஏற்ப டுத்தும் விதமாக ராஜபாளையத்தில் 10 வயது மாணவிஅனுஷ்கா இரண்டு மணி நேரம் தொடர்ச்சியாக கண்களை இமைக்காமல் உலக சாதனை முயற்சி மேற்கொண்டார். ராஜபாளையம் தனியார் பள்ளி ஐந்தாம் வகுப்பு மாணவி அனிஷ்கா. உலக சாதனை புரிய வேண்டும் என யோகா பயிற்சியாளர் அய் யப்பனிடம் கண்களை இமைக்காமல் இருந்து பயிற்சி பெற்று வந்தார். கண் தானம், பார்வை இழப்பை தடுப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இரண்டு மணி நேரம் அனிஷ்கா இமைக்காமல் செய்த சாதனை, ஏசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்திற்கு வீடியோ மூலம் அனுப்பி வைக் கப்பட்டுள்ளது.
விருதுநகர் செங்கோட்டைமின்சார ரயில்கள் இயக்கம் விருதுநகரில் இருந்து செங்கோட்டை வரை 130 கிலோ மீட்டர் தூர அகல ரயில்பாதை மின்சார இன்ஜின்கள் பொருத்தப்பட்ட ரயில்களை இயக்குவதற்கு வசதியாக மின்மயமாக்கப்பட்டுள்ளது.இதற்காக இராஜபாளையம் அருகே சோழாபுரத்தில் துணை மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. வழித்தடத்தில் உள்ள ரயில்வே ஸ்டேஷன்களில் துணை செக்சன் பூஸ்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது. இது ரயில்கள் இயக்கத்திற்க தேவையான மின் தேவையை பூர்த்தி செய்யும்.மின்மயமாக்கல் பணிகள் முடிந்த நிலையில் மார்ச் 29ல் தெற்கு ரயில்வே அதிகாரிகள் அதிவேக ரயில் சோதனை நடத்தினர், ஆய்வுகள் முடிந்து பல மாதங்கள் ஆன நிலையில் அக்டோபர் 1 முதல் இவ்வழித்தடத்தில் மின்சார இன்ஜின்கள் பொருத்தப்பட்ட ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதுவரை இயக்கப்படவில்லை.விருதுநகர் செங்கோட்டைமின்சார ரயில்கள் இயக்கம் ரயில்வே பாதுகாப்பு ஆணைய அனுதிக்காக காத்திருக்கின்றனர்.. விவசாயிகளக்கு விழிப்புணர்வு கூட்டம்தாசில்தார் ராமச்சந்திரன் தலைமையில் இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளை புலிகள் சரணாலயத்துடன் அரசு இணைந்துள்ளது. இந்நிலையில் மலையை ஒட்டியுள்ள வடக்கு வெங்காநல்லூர் அயன் கொல்லங்கொண்டான் 2, திருச்சாலூர், சோமையாபுரம், மாலையாபுரம், சம்மந்தபுரம், மேலப்பாட்டக்கரிசல்குளம் பகுதிகள் உள்ளிட்ட வனத்துறை கிராமங்களில் உள்ள விவசாய பட்டா நிலங்களில் வன விலங்குகளை பாதுகாக்கும் பொருட்டு எந்த வித மரம் மற்றம் விறகுகளையும் வெட்டுவதற்கு அனுமதி கிடையாது,இராஜபாளையம் தாலுகா அலுவலத்தில் மலையை ஒட்டிய கிராமங்களின் பட்டா நிலங்களில் மரம் வெட்டுவதற்க முறையான அனுமதி பெறுவது குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது..
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் தமிழினத் தலைவர் Dr.கலைஞர் அவர்கள் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு பிரமாண்டமான முறையில் நடைபெற்ற தேசிய பெண்கள் கபடி போட்டியில் இந்திய மகளிர் சேவை நாயகன் R. சங்கர்கணேஷ் இராஜபாளையம் அவர்கள் கலந்து கொண்டு அனைத்து மாநில பெண்களுக்கு குடிநீர், தேநீர்,உணவு உட்பட அனைத்து வேலைகளையும் முகம் சுளிக்காமல், சுறுசுறுப்பாக பணி செய்து உள்ளார். இவரது சேவையை பார்த்த விழாக்குழுவினர்கள், போட்டிக்கு தலைமை ஏற்று வருகை தந்த உயர்திரு.K.R. பெரிய கருப்பன் அவர்கள் (தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர்) சால்வை அணிவித்து பாராட்டினார்கள். இவர் செய்யும் சேவைகளுக்கு வாழ்த்து தெரிவிக்க தொடர்பு கொள்ளவும் : 94424 79611
இராஜபாளையம் மேற்கு பகுதியில் முடங்கியார் ரோடு அய்யனார் கோவில் ஒட்டிய வனப்பகுதியில் ஆற்றில் நீராடவும் அய்யனார் கோயிலில் தரிசனத்திற்காகவும் மாவட்டத்தின் பல்ாேவறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வருகை தருகின்றனர்.இவ்வாறு வருபவர்கள் பாலிதீன் பொருட்களுடனும், மது பாட்டில்களுடன் ஆங்காங்கு மாமிச சமையலை ஆற்றோரங்களில் முடித்து செல்கின்றனர். இவர்கள் விட்டு செல்லும் பிளாஸ்டிக் கழிவுகள் பாட்டில்கள், உணவு பொருட்கள் வன விலங்குகளை பெருமளவு பாதிப்பிற்கு உள்ளாக்குகிறார்கள் நீர்த்தேக்ம் அருகிலேயே செக் போஸ்ட் அமைத்து கண்காணிப்பதன் மூலம் வனசூழலையும், விலங்குகளையும் காக்க முடியும் என வன உயிரின ஆர்வலர்கள் எதிர் பார்த்துள்ளனர். இராஜபாளையம் சுற்று வட்டார பகுதியில் தண்ணீர் தேங்கியதால் அவதி.நீண்ட நாட்களுக்கு பின் பெய்த அரை மணி நேர மழையில் மெயின் ரோடுகளில் தண்ணீர் தேங்கி பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். தண்ணீர் தேங்கிய பகுதிகளில் பாதசாரி, பொதுமக்கள் மேல் வாகனங்கள் தெரித்ததால் ஒதுங்கி செல்ல வேண்டிய நிலைக்கு மக்கள் உள்ளாகினர். நிர்வாகத்தை எதிர்பார்த்துள்ளனர். முறையான வடிகால் வசதி செய்து தர நகராட்சி.
இராஜபாளையம் நகரச் செய்திகள் வடக்கு மலையடிப்பட்டி சஞ்சீவிநாதர் சிவன் கோயிலில் சித்தர்கள் குருபூஜைஇராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி சஞ்சீவி நாதர் சிவன் கோயிலில் 18 சித்தர்கள் குருபூஜை விழா நடந்தது அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் பூஜைகள் நடந்தன.இராஜபாளையம் நகராட்சி தலைவர் பவித்ரா, தொழிலதிபர் ராம் சிங் ராஜா பங்கேற்று வேட்டி சேலை வழங்கினர் அன்னதானம் நடந்தது. பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர் ஏற்பாடுகளை சஞ்சீவிநாதர் திருக்கோயிலில் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர். இராஜபாளையம் விவசாய கமிட்டி சார்பில் மழை வேண்டி சிறப்பு யாக பூஜைகள்இராஜபாளையம் விவசாய கமிட்டி சார்பில் மழை வேண்டி சிறப்பு யாக பூஜைகள் நடந்தன. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் அய்யனார் கோயில் வளாகத்தில் வேத விற்பன்னர்கள் யாகம் வளர்த்து சிறப்பு பூஜை செய்தனர். அடுத்து ஆற்றிலும் பூஜை நடந்தன ராஜிக்கள் நான்குகோட்டை, தலைவர் சின்ன வெங்கட்ட ராஜா உள்ளிட்ட சாவடி தலைவர்கள், நகராட்சி தலைவர் பவித்ரா கலந்து கொண்டனர். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை விவசாய கமிட்டி தலைவர் முருகன் நிர்வாகிகள் விவேகானந்த ராஜா, வெங்கடேச ராஜா செய்திருந்தனர். இராஜபாளையத்தில் விவசாய கூலி ஆட்கள் பற்றாக்குறை இராஜபாளையம் சுற்று வட்டார பகுதிகளில் விவசாய கூலி ஆள் பற்றாக்குறையால் இயந்திரம் மூலம் நடவு பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். வேளாண் துறை முறையான ஒத்துழைப்புடன் விழிப்புணர்வு ஏற்படுத்த எதிர்பார்க்கின்றனர். ஆள் கிடைத்தாலும் பணிகளில் முழுத்திறனையும் பெற முடியாத நிலை ஏற்பட்டது. இதற்கு மாற்று ஏற்பாடாக இயந்திர நடவினை நாடி வருவதுடன், ஏக்கருக்கு ரூ.2500 வரை மீதம் ஆவதாகவும் தெரிவித்துள்ளனர். இயந்திரநடவை செய்தால் விதை நெல் முதல் நடவு கூலியாட்கள் வரை ஏக்கருக்கு ரூ2500 வரை மீதமாகிறது. இதுகுறித்து அரசு சார்பில் வேளாண்துறை அதிகாரிகள் விளக்கி கூறி தெளிவு படுத்தினால் விவசாயிகளுக்கு, விழிப்புணர்வு ஏற்படும்.
இராஜபாளையம். அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் நவராத்திரி உற்சவம் (15.10.2023-24.10.2023) புரட்டாசி மாதம் 28-ம் தேதி (15-10-2023) ஞாயிற்றுக்கிழமை முதல் ஐப்பசி மாதம் 07-ம் தேதி (24-10-2025) செவ்வாய்க்கிழமை வரை நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற உள்ளது.அனைவரும் மன அமைதியும் வளமும், நலமும் பெற்று இன்புற்றிருக்க நவராத்திரி நன்னாளில் வழிபட்டு அருள் பெற்றுய்ய அன்புடன் அழைக்கிறோம்.குறிப்பு: நவராத்திரியை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை ஸப்தஸதீ பாராயணம் நடைபெற உள்ளது. மாலை சிறப்பு பூஜையும் நடைபெற உள்ளது. ஸப்தஸதீ பாராயணத்திற்கும் சிறப்பு ஸங்கல்பத்திற்கும் நாளொன்றுக்கு ரூ 1000/-இத்திருக்கோவிலில் 22-10-2023 ஞாயிற்றுக்கிழமை துர்க்காஷ்டமி அன்று மாலை 6,00 மணிக்கு நடைபெறும் சிறப்பு திருவிளக்கு பூஜையில் பங்கு கொண்டு அனைத்து நலங்களும் பெற்றுய்ய கேட்டுக்கொள்கிறோம்.துர்க்காஷ்டமியன்று திருவிளக்குபூஜை செய்வது சிறந்த பலனைத்தரும். திருவிளக்கு பூஜை கட்டணம் ரூ 25/- நவராத்திரி பூஜை கட்டளைதாரராக விரும்புபவர்கள் ரூ 3000/- நன்கொடையளித்து திருக்கோவிலில் முன்பதிவு செய்து கொள்ளவும்.(மேலும் விவரங்களுக்கு திருக்கோவில் அர்ச்சகருடன் அல்லது 9003273690 & 9965035085 என்ற தொலைபேசியிலோ தொடர்பு கொள்ளவும்).
இராஜபாளையம்.அருள்மிகு ஸ்ரீஸ்ரீ பர்வதவர்த்தினீ ஸமேத ஸ்ரீ ராமலிங்கேஸ்வர ஸ்வாமி திருக்கோவில் சர்வ சமுத்ர அக்ரஹாரம், நவராத்திரி உற்சவம்(15.10.2023-24.10.2023) புரட்டாசி மாதம் 28-ம் தேதி (15-10-2023) ஞாயிற்றுக்கிழமை முதல் ஐப்பசி மாதம் 07-ம் தேதி (24-10-2023)செவ்வாய்க்கிழமை வரை நவராத்திரி விழா சிறப்பாக உள்ளது.நவராத்திரியை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை ஸப்தசதீ பாராயணமும், அம்பாளுக்கு அபிஸேகமும் மாலை 6.00 மணிக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெற உள்ளது.ஸப்தஸதீ பாராயணம் நாளொன்றுக்கு சிறப்பு ஸங்கல்பத்திற்கு ரூ 1000/-நவராத்திரி சிறப்பு பூஜைக்கு நாளொன்றுக்கு ரூ 2000/- மேலும் பக்தர்கள் மனமுவந்துஅளிக்கும்நன்கொடைகளும்பூஜாதிரவ்யங்களும்ஏற்றுக்கொள்ளப்படும்.(மேலும் விவரங்களுக்கு திருக்கோவில் அர்ச்சகருடன் அல்லது - 9003273690 & 9965035083 தொலைபேசியிலோ தொடர்பு கொள்ளவும்).இப்படிக்கு - பி.ஆர். வெங்கட்ராம ராஜா பரம்பரை அறங்காவலர்
இராஜபாளையம், அருள்மிகு ஸ்ரீ சாரதாம்பாள் திருக்கோவில் நவராத்ரி உற்சவம் ஸ்ரீ சாரதா சரண் நவராத்ரி உற்சவம் நமது நூதன திருக்கோவிலில் சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தின் ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ பாரதீதீர்த்த மஹாஸ்வாமிகள், ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ விதுசேகர பாரதீ ஸ்வாமிகள் ஆகியோர்களின் பரிபூர்ண அனுக்ரஹத்துடன் 14.10.2023 சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு மேல் ஸ்ரீ சாரதாம்பாள் மஹா அபிஷேகம். ஜெகத்ப்ரஸுதிகா அலங்காரம் 15.10.2023 ஞாயிற்றுக்கிழமை முதல் 24.10.2023 செவ்வாய்க்கிழமை வரை ஸ்ரீ சாரதா சரண் நவராத்ரி உற்சவம் கீழ்க்கண்டவாறு தினசரி நடைபெற உள்ளன.காலை 6.00 - 9.00 மணி - நித்ய பூஜைகள் (ஸ்ரீராஜகணபதி ஸ்ரீ நவாவரண,ஸ்ரீ ஆதிசங்கரபகவத்பாதாசாரியர் பூஜைகள்)காலை 9.00 - 12.00 மணி - ஸ்ரீ தேவீமஹாத்ம்ய பாராயணம்மாலை 5.00-7.00 மணி - நித்ய பூஜைகள் (அஷ்டோத்ர, த்ரிசதீ, ஸஹஸ்ரநாம பாராயணங்கள்)இரவு 7.45 மணி - ரதோற்சவம்23.10.2023 திங்கள்கிழமை காலை திருக்கோவிலில் வெளிப்பிரகாரத்தில் அமைந்துள்ள யாகசாலையில் மஹாகணபதி ஹோமமும் மஹாசண்டி ஹோமமும் சுமங்கலி, கன்யா பூஜைகளும் சிறப்பாக நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.ஸ்ரீ சாரதா சரண் நவராத்ரி ஒருநாள் பூஜைக்கு ரூ.3000/- நவராத்ரி பூஜைக்கு கட்டளைதாரராக விரும்பும் ஆஸ்தீக மஹாஜனங்கள் திருக்கோவில் அர்ச்சகர் மற்றும் ஊழியர்களை தொடர்பு கொள்ளவும்.24.10.2023 செவ்வாய்க்கிழமையன்று விஜயதசமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகளுடன் அக்ஷராப்யாசமும் நடைபெற உள்ளன.
இராஜபாளையம் இரயில் நிலைய கால அட்டவணை 01.08.2023 நிலவரப்படி