25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம், அகத்தியர் தமிழ் சங்கம்,கோதை நாச்சியார் தொண்டர் குழாம் சார்பில் நடந்த திருப்பாவை போட்டிகள் >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில்  ராம்கோ சமூக சேவை பிரிவு தலைவர் நிர்மலா ராஜா  சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இளம் தொழில் முனைவோர் சங்கம் சார்பில் இரண்டு நாள் கண்காட்சி நடந்தது. >> பூபதிராஜூ கூட்டுறவு நாணய வங்கி நுாற்றாண்டு விழா >> ராஜபாளையம் குடியிருப்பு பகுதியில் தொடர் திருட்டை தவிர்க்க நமக்கு நாமே திட்டத்தில் கண்காணிப்பு கேமரா. >> வைப்பாறு, வைகை ஆறுகள் புத்துயிர் பெற மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டும் >> இயந்திரம் மூலம் நெல் நடவு பணியை நாடும் விவசாயிகள். >> (நவ. 6) முதல் ராஜபாளையத்தில் புத்தக கண்காட்சி >> அய்யனார் கோவில் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை. ஒத்துழைக்காத பொதுமக்கள். யாருக்கு நஷ்டம்?. >> எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் துவக்க விழா >> 227 படுக்கைகளுடன் இராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரி  தரம் உயர்வு >>


நம் வீடு இந்திய நாடு என்றே சொல்லடா!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நம் வீடு இந்திய நாடு என்றே சொல்லடா!

தேசப்பற்று யாருக்குமே இல்லை, தேசப்பற்று இருந்தால் இப்படிச் செய்வானா ? இந்தியனுக்கு அந்த சிந்தனையே இருக்காதே ? என்று அங்கலாய்ப்பதை பல இடங்களில் சர்வ சாதாரணமாகக் கேட்கிறோம், பார்க்கிறோம். எங்காவது சண்டையா ? வீட்டிற்குள் ஒளிந்து கொள்கிறோம். கலவரமா ? வீட்டை விட்டே வெளியே வராமல் 'சே என்ன தேசம்' என்று நமக்கு நாமே மண்டையிலடித்துக் கொள்கிறோம். ஏன் ? . அந்தக் கலவரம் வராமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும் ? என்ற எண்ணம் லட்சத்தில் ஒருவருக்குத்தான் உண்டு. எல்லோருக்குமே வருவதில்லை.சரி, அரசியல் தலைவரை தேர்ந்தெடுக்கிறோம் நம்பிக்கையுடன், ஆனால் ஆட்சியோ சகிக்க முடியவில்லை .அநியாயமான அராஜக ஆட்சி. என்ன செய்வது? அடுத்த ஆட்சி வரை காத்திருப்போம் என்று பொறுமையுடன் ,சபித்துக் கொண்டே காத்திருக்கிறோம். ஏன் ? சரியில்லை என்றால் எல்லாரும் சேர்ந்து பொங்கி எழக்கூடாதா ? எல்லோரும் ஒன்று பட்டால், ஒரு அராஜக ஆட்சியை, ஒரே நாளில் கலைத்து விடலாம் அல்லவா ? ஏன் ? இந்த அவல நிலை..தேசம் உருப்படுமா ? என்ன அநியாயம்? என்று சொல்லாமல் தட்டிக் கேட்க ,நாம் வீரு கொண்டு எழலாம் அல்லவா?

ஒன்றுமே இல்லை. கிரிக்கெட் வேர்ல்ட் கப் மேட்ச் இந்தியாவுக்கும்,. இலங்கைக்கும் இடையே நடைபெற்றது. இந்தியா ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கோடிக்கணக்கான மக்கள் பூஜைகள், யாகங்கள், பிரார்த்தனைகள் என்று மெனக்கெட்டு செய்தனர். ஒவ்வொரு சின்ன விஷயத்திற்கு பலவித அபிப்ராயங்களைச் சொல்வார்கள். ஆனால் அதெல்லாம் இல்லாமல் வேறுபாடின்றி எல்லோரும் ஒரே மனதுடன், இந்தியா ஜெயிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தினார்கள்.. ஏன்? இந்தியா ஜெயித்தால் இவர்களுக்கு என்ன கிடைக்கப்போகிறது. ஒன்றுமே இல்லையே ! பின் ஏன் இந்த பூஜை புனஸ்காரங்கள். சிந்திக்க வைத்தது. எல்லோரையும் மும்பையில் நடந்த மேட்சில், இந்திய மக்கள் ஆயிரக்கணக்கில் வீட்டில் டி.வி.முன்னே ,கோடிக்கணக்கில் உட்கார்ந்து கொண்டு, ஒவ்வொரு ஓவருக்கும் திகிலுடன் காத்திருந்து ,பெருமூக்சு விட்டுக் கொண்டு, கிரிக்கெட் வீரர் அவுட் ஆனவுடன் பட, பட வென்று பதறினார்கள்.. 
ஐயோ, ஜெயிக்க மாட்டோமா ? என்று பெரிய பெரிய தலைவரிலிருந்து குட்டி பாப்பா வரைக்கும் வருத்தம். வருத்தம்னா லேசுப்பட்ட வருத்தம் கிடையாது. ஆனாலும் நம்பிக்கை இழக்கவில்லை. இந்திய வீரர்கள் ஆடும்பொழுது அவர்கள் அடிக்கும் 4-க்கும் சிக்ஸருக்கும் ஒரே ஆட்டம் பாட்டம் தான். ஏதோ தங்களுக்கு கிடைத்து விட்ட மாதிரி ஒன்று போல பாடி, ஒன்று போல கையசைத்து ,நம் இந்திய வீரர்களுக்கு உற்சாகம் கொடுத்தார்களே எதற்காக ? ஏன் ?

என் நாடு இந்திய நாடு, என் நாட்டு மக்கள் ஜெயிக்க வேண்டும் என்ற தேசப்பற்று மாத்திரம் அல்ல. வெறியையும் காண முடிந்தது. நம் மக்களுக்கு தேசப்பற்றே இல்லை என்று சொன்னால் சத்தியமாக நான் ஏற்றுக் கொள்ளவே மாட்டேன். மேட்சில் பார்த்தோமே என்ன ஒரு சந்தோஷம் நம் தேசம் ஜெயித்து விட்டது என்ற உற்சாகம். சந்தோஷம். அந்த அரசாங்கமே ஏன் இந்திய தேசமே சந்தோஷத்தில் முழ்கியது. அதைப் பார்த்த 90 வயது தாத்தாவிலிருந்து 9 மாதக் குழந்தை வரை கை தட்டி சந்தோஷத்தை வெளிப்படுத்தியது. சில தாத்தா, பாட்டிகள் டான்ஸே ஆடினார்கள்.அந்த ஒன்பது மாதக் குழந்தை எல்லோரும் ஏதோ சந்தோஷமாக இருக்கிறார்கள். என்று அதுவும் கைகொட்டி தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தியது. அட இப்படி இருக்கும் மக்கள் கிரிக்கெட்டில் மட்டும் நம் தேசம் ஜெயித்தால் போதுமா ? எல்லா விஷயங்களிலும் இதே மாதிரி ஒன்று பட்டு நற்செயல்களை உற்சாகப்படுத்தி, தீய செயல்களை அடியோடு அழிக்க வேண்டும் என்பதே. நம் தேசத்திற்காக கிரிக்கெட் மேட்சிற்கு அநியாயமாய் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய அவசியம், நம் தேசத்திற்காக பாடுபடும் பொழுது தேவையே இல்லை. மனம் மட்டும் இருந்தால் போதும், வைராக்கியமாக 'ஒன் மேன் பவர்' என்று இருந்த மஹாத்மா காந்தியடிகள் எவ்வளவு பெரிய சாதனைகள் செய்திருக்கிறார்.

பிரார்த்தளை, பூஜை செய்து கை கொட்டி கத்தி, ஆரவாரம் செய்த நமக்கு ஒரு பைசா கூட கிடைப்பதில்லை. ஏன் விளையாடும் கிரிக்கெட் ஆட்டக்காரருக்கு நம்மை யாரென்று கூட தெரியாது. ஆனாலும் அவர்கள் அடிக்கும் ஒவ்வொரு பேட்டிங்கிற்கும், 'கடவுளே' என்று பிரார்த்திருக்கிறோம். ஆட்டக்காரர்களுக்கு இந்திய அரசாங்கமும் மேல்தட்டு பெரிய ஜாம்பவான்களும் கோவில்களுக்கு காணிக்கை செலுத்துவது போல கோடி, கோடியாக வாரிக்கொடுக்கின்றனர். ஏன் ? இந்தியா வேர்ல்டு கப் வாங்கக் காரணமான ஆட்டக்காரர்கள் ,இந்தியாவை ஜெயிக்க வைத்தது அவ்வளவு ஆனந்தம். அனைவருக்குமே ஒவ்வொரு இந்திய மக்களும் தன் வீட்டுக் குழந்தைகள் ஆடிஜெயித்து, பரிசை அள்ளி விட்டதாக ஓர் உணர்வு. இதெல்லாம் தேசப்பற்று இல்லாமல் வராது. நம் தேசப் பற்றை தட்டி எழுப்புவது கிரிக்கெட் விளையாட்டு மட்டும் தானா ? மற்ற விஷயங்களிலும் இருக்க வேண்டாமா ?

இதே மாதிரி நம் தேச மக்கள் அனைவரும் இப்படி இருந்தால் எப்படி இருக்கும் நம் நாடு, 'ரோஜா' படத்தில் பாட்டு நம் வீடு இந்திய தேசம் என்றே சொல்லடா என்ற வரிகள் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு உத்வேகத்தை கொடுக்கிறதல்லா ? அந்த மாதிரி நம் நாட்டிற்காக அரசாங்கம் செய்கிறதோ இல்லையோ ? நாமும் நம் தேசத்தை பாதுகாக்க நம்பர் ஒன் ஆக வர நம்மால் முடிந்த அளவு செய்ய வேண்டும். அரசாங்கம் வெட்கப்பட்டுக் கொண்டு நமக்காக செய்ய முன் வர வேண்டும். அட என்ன நீங்க ! அரசியல் வாதிக்கு வெட்கமாவது ! ரோசமாவது ! கட்சிக்குள் நுழைந்தாலே இவ்விரண்டையும் விட்டுவிட்டு தானே வருவான் என்கிறீர்களா ! ஆனால் அடுத்த தலைமுறையினர் நிச்சயமாக ரோசங் கெட்ட தலைவனா தேர்ந்தெடுக்க மாட்டார்கள்.ஏனெனில் வரும் தலைமுறையினர் எல்லாம் விவரமாக தட்டி கேட்பார்கள். வெத்துப்பேச்சை நம்பவே மாட்டார்கள். அது வரை புண்ணாகியுள்ள நம் தேசம் புறையேறிவிடாமல் பாதுகாத்துக் கொடுக்க வேண்டும், என்பது நம் எல்லோருடைய கடமை. ஆக இன்றும் என்றும் “ நம் வீடு இந்திய நாடு" என்பதை மறக்காமல் இருக்க வேண்டும். அதுபோதும் நம் தேசத்தைக் காப்பாற்றி விடலாம். நம் வீடு இந்திய நாடு என்றே சொல்லடா!

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News