மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் இராஜபாளையம் அணி வெற்றி
இராஜபாளையம் சிட்டி பேஸ்கட்பால் கிளப் சார்பில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிகள் மூன்று நாட்கள் நடந்தன. இதில் திருநெல்வேலி, கோவை, தேனி மதுரை பல்வேறு பகுதிகளில் இருந்து 18 அணிகள் பங்கேற்றன. இராஜபாளையத்தில் நடந்த மாநில கூடைப்பந்து இறுதிப் போட்டியில் திருவேங்கடம் அணியை வென்று இராஜபாளையம் அணி முதலிடம் பெற்றது. திண்டுக்கல் உதவி ஊார்க்காவல் படை தளபதி அஜய் கார்த்திக் ராஜா, தென்காசி ஏரியா கமாண்டர் பிரதாப் வெற்றி பெற்ற அணிக்கு கோப்பை பரிசு தொகை வழங்கினார் ஏற்பாடுகளை இராஜபாளையம் சிட்டி பேஸ்கட் பால் கிளப் தலைவர் ராம்குமார் ராஜா, செயலாளர் பீமானந்த், பொருளாளர் ராம்சிங் ராஜா செய்திருந்தனர்
0
Leave a Reply