இராஜபாளையம் பச்சமடம் ஊருணியில் செத்து மிதந்த ஆமைகள்
இராஜபாளையம் நகராட்சி பச்சமடம் குடியிருப்பு பகுதியில் ஊருணி உள்ளது. இதில் மூன்று நாட்களுக்குள் 25-க்கும் மேற்பட்ட ஆமைகள் செத்து மிதந்ததால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பின்பகுதியில் அமைந்துள்ள இந்த ஊருணி குப்பை, கழிவுகள் கலக்காததாக உள்ளது. இதனால் மீன்கள், நீர்வாழ் உயிரினங்கள், ஆமைகள், நீர் பறவைகள் என இயற்கையான சூழல் நிலவியது. இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன் ஊருணியை ஆழப்படுத்தி, பாதுகாப்பு வேலி அமைத்து நடைப்பயிற்சி இடமாக மாற்ற ரூ.75 லட்சம் ஒதுக்கி பணிகள் தொடங்கின. பெரும்பாலான பணிகள்முடிந்து, தற்போது வரை பாதுகாப்பு வேலி அமைக்காததால் திறந்தவெளி பார், சூதாடும் இடமாக மாறி உள்ளது. ஆமைகள் உயிரிழப்புக்கான காரணம் தெரியவில்லை இரு நாட்களில் பாதுகாப்பு வேலி அமைக்கும் பணி துவங்கப்படும் என்றனர்!
0
Leave a Reply