25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


வெள்ளித்திரை

Mar 12, 2026

41 வயது சிவகார்த்திகேயனுக்கு அம்மாவாக நடிக்கும் 39 வயது நடிகை ரம்யா நம்பீசன்.

சிவகார்த்திகேயன் நடிக்கும் சேயோன் படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்கும் நிலையில் சிவகுமார் முருகேசன் இப்படத்தை இயக்குகிறார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்க உள்ளது சந்தோஷ் நாராயணன் படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் வெங்கட் பிரபு இயக்கவிருக்கும் சைன்ஸ் ஃபிக்ஷன் படத்தில் நடிக்க இருக்கிறார்.சிவகார்த்திகேயனுக்கு அம்மாவாக ரம்யா நம்பீசன் தி கோட்படத்தைத் தொடர்ந்து வெங்கட் பிரபு மீண்டும் ஒரு சைன்ஸ் ஃபிக்ஷன் படத்தை இயக்கவிருக்கிறார். இப்படம் சுமார் 180 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக இருக்கிறது. கோட் படத்தைப் போலவே தந்தை மகன் என சிவகார்த்திகேயன் இப்படத்தில் இரு வேடங்களில் நடிக்க இருக்கிறார். பிரபல ஹாலிவுட் நிறுவனமான லோலா வி.எஃப்.எக்ஸ் இந்த படத்திற்கான வி .எஃப்.எக்ஸ். பணிகளை மேற்கொள்ள இருக்கிறது. 

Mar 07, 2026

தமிழ்நாட்டில் மட்டும் சுமார் ரூ.25.30 கோடி வசூல் செய்த “தாய் கிழவி' படம்.

சிவக்குமார் முருகேசன் இயக்குனராக “தாய் கிழவி' படம் மூலம் அறிமுகமாகி. முதல் படம் என்றாலும் திறமையாக கையாளப்பட்டதாக பாராட்டப்படுகிறது. 'பவுனுத்தாயி' கதாபாத்திரம், ராதிகா சரத்குமார் நடித்தது ' அதிக கவனம் பெற்றுள்ளது. பெண்களின் சமத்துவம், குடும்பத்தில் பெண்களின் இடம் போன்ற சமூக கருத்துகளை பேசும் இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்புபெற்றுள்ளது. ரூ. 10 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் ரூ.25.30 கோடி வசூல் செய்துள்ளது.

Mar 05, 2026

“ கெணத்த காணோம்" வடிவேலு காமெடி டயலாக்கில் யோகிபாபு படத் தலைப்பு .

 சுரேஷ் சங்கையா 'ஒரு கிடாயின் கருணை மனு, சத்திய சோதனை, ஆகிய படங்களை இயக்கிகவனம்பெற்றவர்.  யோகிபாபு 2024ல் மறைந்த இவரது இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்தார். அந்த படம் தற்போது வெளியீட்டிற்கு தயாராகிறது. படத்திற்கு "கெணத்த காணோம்" என பெயரிட்டுள்ளனர்

Mar 05, 2026

சமுத்திரக்கனி மீண்டும் இயக்கும் படம்.

இயக்குனராக வந்த சமுத்திரக்கனி தொடர்ந்து, நடித்து வந்த இவர் மீண்டும், ஒரு சிறிய பட்ஜெட் படமொன்றை இயக்குகிறார் . கடைசியாக தமிழில் 2021ல் 'வினோதய சித்தம்' படத்தை இயக்கி வரவேற்பை பெற்றது. அதில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தலைப்பு, மற்ற நடிகர்கள் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் வெளியாகிறது.

Mar 05, 2026

யுடியூப்பில் வெளியான 'லிட்டில் விங்ஸ்' தேசிய விருது பெற்றது.

தமிழ் குறும்படம் தேசிய விருது பெற்ற 'லிட்டில் விங்ஸ்'. நவீன் இயக்க, மணிமேகலை, காளிதாஸ் நடித்துள்ளனர். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தனது யுடியூப் தளத்தில் இந்த குறும் படத்தை 27 பிப்ரவரி  மாலை 5:00 மணியளவில் வெளியிட்டது. நவீன் கூறுகையில்,  ஒரு சேவலை சாப்பிட ஆசைப்படும்"கதை யின் நாயகன் .அவரது ஆசை நிறைவேறியதா என்பது கதை" என்றார்.

Mar 05, 2026

'வாரணாசி' படப்பிடிப்பு ஜார்ஜியாவில்…

மகேஷ்பாபு, பிரியங்காசோப்ரா, பிருத்விராஜ்நடிப்பில்,ராஜமவுலி இயக்கத்தில்,உருவாகிவரும்தெலுங்குப்படம் 'வாரணாசி'. முதற்கட்ட படப் பிடிப்பு ஐதராபாத், ஒரிசாவிலும் அடுத் தக்கட்ட படப் பிடிப்பு கென்யா நாட்டிலும் நடந்தது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு பனி படர்ந்த ஜார்ஜியா நாட்டில் நடக்கிறது.இதற்காக மகேஷ்பாபு உள்ளிட்ட படக்குழுவினர் அங்கு சென்றுள்ளனர். 

Mar 05, 2026

'துரந்தர்” 2ம் பாகம், 'டாக்சிக்'  ஒரே நாளில் இரண்டு நீளமான (3 மணிநேரம் 40 நிமிடங்கள்) படங்கள் ரிலீஸ்.

ஹிந்தியில் ஆதித்யாதார் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடித்த 'துரந்தர் படம். இதன் 2ம் பாகம் மார்ச் ல் ரிலீசாகிறது. இப்படத்தின் ரன்னிங் டைம் 3 மணிநேரம் 40 நிமிடங்கள் என்கின்றனர். அதேநாளில் ரிலீசாகும் யஷ் நடித்துள்ள, கீது மோகன்தாஸ் இயக்கத்தில் 'டாக்சிக்' படமும் 3 மணிநேரம் 25 நிமிடங் கள் ஓடுமாம். இந்த இரண்டு படங்களும் தமிழ், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் இந்தியா முழுதும் ரிலீசாகிறது.

Mar 05, 2026

பள்ளி பொதுத் தேர்வு, தியேட்டர்களுக்கு மக்கள் வருகை குறைந்த போதிலும் பட வெளியீடு குறைந்த பாடில்லை.

இந்த வாரம் மார்ச்-6ல் "99/66, காதல் ரீசெட் ரிபீட், முஸ்தபா முஸ்தபா, மூரி, ஓ பட்டர்பிளை, செல்லமடா நீ எனக்கு, வடம், வசூல் மன்னன், யார்ரா அந்த பையன் நான்தான் அந்த பையன்” ஆகிய 9 படங்கள் ரிலீஸாகின்றன. சிபி, நிவேதிதா சதீஷ்,நாசர், லட்சுமி பிரியா உள்ளிட்டோர் நடிப்பில் விஜய் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாகி  உள்ளபடம்' ஓ பட்டர்பிளை'. மாறுபட்ட திரில்லருடன் ஒரு பெண் 2  ஆண்களுக்கு இருக்கக் கூடிய உறவு சிக்கல்களைபடம் விவரிக்கிறது. ஒரு மலை  வாழ் பகுதிக்கு செல்லும் 3 பேரை சுற்றி நகரும் கதை. படம் ரிலீஸிற்கு தயாராகி, மார்ச் 6ல் ரிலீஸ் என அறிவித்துள்ளனர்

Mar 05, 2026

திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ஒட்டி, தெலுங்கானா, அச்சம்பேட்டையைச் சேர்ந்த 44 அரசுப் பள்ளிகளில் சிறந்து விளங்கும் மாணவர்களின் படிப்பிற்கு ஸ்காலர்ஷிப் தருவதாக விஜய் தேவரகொண்டா அறிவித்துள்ளார்.

கடந்தவாரம் விஜய் தேவர கொண்டா, ராஷ் மிகா திருமணம்  நடந்தது.நேற்றுஹைதராபாத்தில் வரவேற்புநடந்தது.  திருமணத்திற்கு முன் நடந்த சங்கீத் நிகழ்ச்சி போட்டோக்களை ராஷ்மிகா வெளியிட்டு, "விஜயும் நானும் ஒன்றாக நடனமாடிய அந்த இரவு, எங்கள் குடும்பங்கள், நண்பர்களின் அன்பால் சூழப்பட்டது" என தெரிவித்துள்ளார். ஆட்டம், பாட்டு, கொண்டாட்டம் என கலை நிகழ்ச்சி போல் இது நடந்தது. இதனிடையே தெலுங்கானா, அச்சம்பேட்டையைச் சேர்ந்த 44 அரசுப் பள்ளி களில் சிறந்து விளங்கும் மாணவர்களின் படிப்பிற்கு ஸ்காலர்ஷிப் தருவதாக விஜய் தேவரகொண்டா அறிவித்துள்ளார். 

Feb 26, 2026

விக்னேஷ் வடிவேலு இயக்கும் 'ராவடி'.

 விக்னேஷ் வடிவேலு இயக்கும் ,சிறை படத்திற்கு பின் அக்ஷய் குமார் நடிக்கும் படத்திற்கு 'ராவடி'என பெயரிட்டு, அறிமுக வீடியோவை வெளியிட்டுள்ளனர். இதில் முக்கிய வேடத்தில் மலையாள நடிகர் பசில் ஜோசப்பும் நடிக்கிறார். பராசக்தி படத்தில் இவர் சிறப்பு ரோலில் நடித்திருந்தார். கல்லுாரி மாணவர்கள், விடுதி பின்னணியில் இப் படம் உருவாகிறது.

1 2 ... 14 15 16 17 18 19 20 ... 85 86

AD's



More News