25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >>


உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கும் முகாம் நடைபெறவுள்ளது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கும் முகாம் நடைபெறவுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கல்லூரி மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்புகளை மேம்படுத்தும் நோக்கில், 28.10.2026 அன்று காலை 10.00 மணிக்கு, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நான்காம் தளத்தில் கல்விக் கடன் முகாம் நடைபெற உள்ளது.
நடப்பு நிதியாண்டில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 3,000 மாணவர்களுக்கு மொத்தம் ரூ.75 கோடி கல்விக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் கொண்டு வர வேண்டிய ஆவணங்கள் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், கல்லூரி சேர்க்கை ஆணை மற்றும் கலந்தாய்வு ஒதுக்கீட்டு ஆணை (பொருந்துமிடத்து), கல்லூரியில் பெற்ற சான்றிதழ்களின் உண்மைத்தன்மைச் சான்று (தேவைப்படின்), கல்லூரிக் கல்விக் கட்டண விவரம், மாணவரின் ஆதார் அட்டை மற்றும் பான் கார்டு (இருந்தால்), மாணவரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்.

மாணவர்கள் கொண்டு வர வேண்டிய பெற்றோர்களின் விவரங்கள் ஆதார் அட்டை மற்றும் பான் கார்டு (இருந்தால்), வருமானச் சான்றிதழ், கடந்த ஆறு மாதங்களுக்கான வங்கிக் கணக்கு விவர அறிக்கை, குடும்ப அட்டை (ரேஷன் கார்டு), சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்.

மேலும் விவரங்களுக்கு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் நான்காம் தளத்தில் செயல்பட்டு வரும் கல்வி உதவி மையக் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம்.எனவே, கல்விக் கடன் தேவைப்படும் கல்லூரி மாணவர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News