25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >>


ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: 'ஹாட்ரிக்' கோப்பையைக் கைப்பற்றுமா இந்திய அணி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: 'ஹாட்ரிக்' கோப்பையைக் கைப்பற்றுமா இந்திய அணி.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில், 9-வது சீசன் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் இன்று தொடங்குகிறது. இத்தொடரில் நடப்பு சாம்பியனான இந்தியா, சீனா, வங்கதேசம், ஜப்பான், மலேசியா மற்றும் தென்கொரியா ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன. பாகிஸ்தான் அணி இத்தொடரில் இருந்து விலகியதால், அதற்குப் பதிலாக வங்கதேச அணி வாய்ப்பு பெற்றுள்ளது.

இத்தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் ஜலந்தரில் உள்ள சுர்ஜித் ஹாக்கி மைதானத்திலும், 'நாக்-அவுட்' சுற்றுப் போட்டிகள் மொகாலியில் உள்ள சர்வதேச ஹாக்கி மைதானத்திலும் நடைபெறவுள்ளன. போட்டியில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோதும்.

லீக் சுற்றுகளின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் நவம்பர் 4-ஆம் தேதி நடைபெறும் அரையிறுதிக்குத் தகுதி பெறும். இதில் வெற்றிபெறும் அணிகள் நவம்பர் 5-ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் மோதும்.

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி வரலாற்றில் இதுவரை இந்திய அணி அதிகபட்சமாக 5 முறை (2011, 2016, 2018, 2023, 2024) சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News