25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


வெள்ளித்திரை

Jan 01, 2026

விஜய் தேவரகொண்டா, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'ரவுடி ஜனார்தனா'

விஜய் தேவரகொண்டா, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ,ரவி கிரண் கோலா இயக்கத்தில் படத்திற்கு 'ரவுடி ஜனார்தனா' என பெயரிட்டுள்ளனர். ஆக்ஷன் கதையில்ரவுடிவேடத்தில்விஜய்தேவரகொண்டாநடித்துள்ளார்.  தெலுங்கு, தமிழ்உள்ளிட்ட5 மொழிகளில் வெளியாகும் இப்படத் தின் அறிமுக வீடியோ வெளி யிடப்பட்டுள்ளது. அடுத்தாண்டு படம் வெளியாகிறது. 

Jan 01, 2026

மீனாட்சி சவுத்ரி,டைகர் ஷெராப்க்கு  ஜோடியாக நடிக்கிறார்.

மீனாட்சி சவுத்ரி தமிழ், தெலுங்கில் நடித்த இவர், அடுத்து பாலிவுட்டிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். ஹிந்தியில் தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ ஒரு படம் எடுக்கிறார். ஆக்ஷன் கதையில் உருவாகும் ,இதில் நாயகனாக டைகர் ஷெராப் நடிக்க ஜோடியாக மீனாட்சி நடிக்கிறார்.

Jan 01, 2026

. '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' என்ற படம் மூலம் மீண்டும் கன்னடத்தில் நடிக்கிறார். பிரியங்கா மோகன் .

'666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' என்ற படம் மூலம் மீண்டும் கன்னடத்தில் நடிக்கிறார் கன்னட சினிமாவில் அறிமுகமாகி பின்னர் தமிழ், தெலுங்கில் நடித்து வந்த நடிகை பிரியங்கா மோகன். ஹேமந்த் ராவ் இயக்கும் இந்த படத்தில் நாயகனாக சிவராஜ்குமார் நடிக்கிறார்.  பர்ஸ்ட்லுக் படத்தை படக்குழு ரெட்ரோ ஸ்டைலில் இருக்கும் பிரியங்கா மோகனின் தோற்றத்தை வெளியிட்டுள்ளது.

Jan 01, 2026

வயலின் கலைஞர் கணேஷ் ராஜ கோபாலன், கிராமி விருது பெற்றார்.

கிராமி விருது பெற்ற வயலின் கலைஞர் கணேஷ் ராஜ கோபாலன், 'திரி பின்னா' என்ற இந்திய சிம்பொனி இசை ஆல்பத்தை உருவாக்கியுள்ளார். இதை வெளியிட்டு பேசிய இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான், "இன்றைய காலகட்டத்தில் ஏஐ மூலம் யார் வேண்டுமானாலும் வயலின் இசைக்கலாம். ஆனால், கையில் வாசிக்கும் அனுபவமே சிறந்தது. அதில் தான் மனித உணர்ச்சிகளை கடத்த முடியும்.  பலருக்கும் உத்வேகம் தரும் இந்த வயலின் சிம்பொனி” என்றார்

Jan 01, 2026

2026 முதல் வாரத்திலேயே 6 படங்கள் ரிலீஸ்.

2025 ல் 280க்கும் மேற்பட்ட படங்கள்  தமிழில் ,எந்தாண்டும் இல்லாத அளவுக்கு வெளியாகின. 2026ம் ஆண்டு பிறக்கிறது. ஆண்டின் முதல் வாரத்திலேயே "அனலி, டியர் ரதி, ஜஸ்டிஸ் பார் ஜெனி, காக்கா, மாமகுடம், தி பெட்" ஆகிய 6 படங்கள் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளன.

Jan 01, 2026

சீனியர்களிடமிருந்து தான் அனைத்தையும் கற்கிறோம். அவர்களுக்குப் பின்னால் தான் நாம்" என்றார் பிரபாஸ்.

தமிழில் விஜயின் 'ஜனநாயகன்', சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' படங்கள் ரிலீஸை வைத்து வலைதளங்களில் சண்டை நடக்கும் சூழலில் பிரபாஸின் பெருந்தன்மையை ரசிகர்கள் சுட்டிக்  காட்டுகின்றனர். 2026 பொங்கலுக்கு தெலுங்கில் பிரபாஸின் 'தி ராஜா சாப்' படம் போட்டி ரிலீஸ் வெளியாகிறது. இவற்றுடன்  சிரஞ்சீவி, ரவி தேஜா, சர்வானந்த் உள்ளிட்டோரின்  படங்களும் ரிலீஸாகின்றன. ராஜா சாப் பட விழாவில் பேசிய பிரபாஸ், "சங்கராந்திக்கு வெளியாகும் 5 படங்களுமே வெற்றி பெறணும். அதனுடன் எனது படமும் வெற்றி பெற்றால் மகிழ்ச்சி. சீனியர்களிடமிருந்து தான் அனைத்தையும் கற்கிறோம். அவர்களுக்குப் பின்னால் தான் நாம்" என்றார். 

Jan 01, 2026

வேறு எந்த ஹீரோயினும் செய்யாத, வயதான ரோலில் ராதிகா “தாய்கிழவி “படத்தில்…

 ராதிகா வயதான ரோலில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சிவக்குமார் இயக்கி இருக்கும் “தாய்கிழவி “படத்தில்  நடித்து இருக்கிறார் .சிவகார்த்திகேயன் தற்போது படத்தின் டீசரை  வெளியிட்டு இருக்கிறார் அடையாளம் தெரியாத அளவுக்கு ராதிகா மாறி இருக்கிறார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். வேறு எந்த ஹீரோயினும் இதை செய்ததில்லை.தாய் கிழவி மேக்கப்பை ஃபோட்டோ எடுத்து கமலுக்கு அனுப்பியதும் அவர் த்ரில் ஆகிவிட்டர். வேறு எந்த ஹீரோயினும் இதை செய்தது இல்லை. நீ செய்துவிட்டாய் சூப்பர் என பாராட்டினார். அப்போது நான் டெங்குவால் பாதிக்கப்பட்டுமருத்துவமனையில் இருந்தேன். படத்தின் ட்ரெய்லரை பார்த்துவிட்டு ப்ரியவுக்கு ஃபோன் செய்து, 'இந்த மாதிரி ஒரு நடிகை பிறந்துதான் வரணும். “ஷீ இஸ் பெஸ்ட் ”என்றும் கூறியிருக்கிறார். அப்போது நான் வானத்தில் பறந்தேன்  என்றார் நடிகை ராதிகா.

Dec 25, 2025

'டாடா' இயக்குனர் கணேஷ் கே பாபுவும் தயாரிப்பாளர் ஆனார்.

 'டாடா' படத்தை இயக்கிய கணேஷ் கே பாபுவும் ,இயக்குனர்கள் நெல்சன், லோகேஷ் கனகராஜ், அட்லி, சினிஷ் உட்பட பலர் தயாரிப்பாளர்களாக இணைந்துள்ளார் .கவுதம் ராம் கார்த்திக் (நடிகர் கார்த்திக் மகன்) நாயகனாகவும், அஞ்சனா நேத்ரன் நாய கியாகவும் நடிக்கும் பெயரிடப்படாத படத்தை தயாரிக்கிறார். இயக்குனர் ராஜூமுருகன் உதவியாளர் தினா ராகவன் இயக்குகிறார். ரவி மோகன் நடிக்கும் 'கராத்தே பாபு' படத்தை கணேஷ் கே பாபு, தற்போது இயக்கி வருகிறார்.

Dec 25, 2025

பொங்கலை முன்னிட்டு விஜய்யின் கடைசி படமாக 'ஜனநாயகன்'.

பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ம் தேதி வெளியாக உள்ள படம் 'ஜனநாயகன்'. விஜய்யின் கடைசி படமாக ,வினோத் இயக்கி உள்ளார். பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு உள்ளிட்டோர் நடிக்க, இறுதிக்கட்ட பணிகள் நடக்கின்றன. இப்படம் 3 மணி நேரம் 6 நிமிடம் ஓட உள்ளது. டிச., 27 ல் படத்தின் இசை வெளியீடு மலேசியாவில் நடைபெற உள்ளது. நாளை படத்தின் 2வது பாடல் வெளியாகிறது.

Dec 25, 2025

டூரிஸ்ட் பேமிலி' பறந்து போ, படங்களுக்கு விருது.

 18 தமிழ் படங்கள் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் போட்டியிட்டன. இதில் ராமின் 'பறந்து போ' சிறந்த படமாகவும், இரண்டவதாக 'டூரிஸ்ட் பேமிலி'யும் தேர்வானது. சிறந்த நடிகராக சசிகுமார், நடிகையாக லிஜோ மோல் ஜோஸ் தேர்வானார்.  'மெட்ராஸ் மேட்னி' படத்திற்கு நடுவர் குழுவின் சிறப்பு  விருது வழங்கப்பட்டது

1 2 ... 17 18 19 20 21 22 23 ... 80 81

AD's



More News