27 TH NOV விளையாட்டு செய்திகள்
சம்மர் யூத் ஒலிம்பிக்: 17 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு!
செனகல் நாட்டில் வரும் அக்டோபர் 31 முதல் நவம்பர் 13 வரை 'சம்மர் யூத் ஒலிம்பிக்' போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் சின்ட்ரேலா தாஸ் (டேபிள் டென்னிஸ்), தினிதி தேசிங்கு (நீச்சல்), தான்வி பத்ரி (பேட்மிண்டன்) உள்ளிட்ட 17 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்கிறது.
தேவாங்க் தலால் ரூ. 21.20 லட்சத்துக்குத் தக்கவைப்பு:
கபடி சாம்பியன்ஸ் லீக் 2-வது சீசனுக்கான 'பிவானி புல்ஸ்' அணியில், இந்திய வீரர் தேவாங்க் தலால் ரூ. 21.20 லட்சத்திற்குத் தக்கவைக்கப்பட்டுள்ளார். இவர் சமீபத்தில் நடைபெற்ற ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் 'சோலா செஸ் ஓபன்':
சென்னையில் வரும் அக்டோபர் 30-ஆம் தேதி முதல்முறையாக 'சோலா செஸ் ஓபன்' தொடர் தொடங்குகிறது. மொத்தம் 8 நாட்கள் நடைபெறும் இத்தொடரில் இந்தியாவின் சூர்ய சேகர் கங்குலி, லியோன் லூக் மென்டோன்கா உள்ளிட்ட 32 கிராண்ட்மாஸ்டர்கள் பங்கேற்கின்றனர்.
0
Leave a Reply