25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


வெள்ளித்திரை

May 07, 2026

கேன்ஸ் பட விழாவிற்கு தேர்வாகி உள்ள 'பாலன் தி பாய்'.

 'பாலன் தி பாய்'. இயக்குனர் ஜித்து மாதவன் கதையில் சிம்பரம் இயக்கத்தில் உருவாகி உள்ள மலையாள படம். உலக புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவின் 'மார்ச் டு பிலிம் பிரிவில் திரையிட இப் படம் தேர்வாகி உள்ளது. தாயை தேடி அலையும் ஒரு சிறுவனின் வாழ்க்கை போராட்டத்தை மையமாக வைத்து இந்த படம் உருவாகி உள்ளது. கேன்ஸ் பட விழாவிற்கு இப்படம் செல்வது மகிழ்ச்சி என்றார் இயக்குனர்.

Apr 30, 2026

பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் இயக்கத்தில் மகன்  ராஹில் அறிமுகம்.

மராத்தியில் 'ராஜா சிவாஜி' என்ற படத்தை பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் தற்போது இயக்கி, நடித்துள்ளார். இவரது மனைவி ஜெனிலியா, அபிஷேக்பச்சன், சஞ்சய் தத்,  வித்யாபாலனும் நடித்துள்ளனர். இளம் வயது சிவாஜி கதாபாத்திரத்தில் ரித்தேஷ் ஜெனிலியாவின் இளைய மகன் ராஹில் நடித்துள்ளார். இதன்மூலம் நட்சத்திர வாரிசு, அப்பாவின் முதல் இயக்கத்தில் தனது நடிப்பு பயணத்தை துவங்கியுள்ளார். 

Apr 30, 2026

மலையாள நடிகை மமிதா பைஜூவின்  படங்கள் அடுத்தடுத்து ரிலீசாக உள்ளன.

மலையாள நடிகை மமிதா பைஜூ, தமிழில் முழு கவனம் செலுத்தி வரு கிறார். இந்தாண்டு அவரது முதல் தமிழ் படமாக விஜயுடன் நடித்த 'ஜனநாயகன்' சென்சார் பிரச்னையால் தாமதமாகிறது. விரைவில் வெளியாகும் என்கின்றனர். இதற்கிடையே அவர் நடித்த 'கர' ஏப்.30ல் ரிலீசாகிறது. அவர் நாயகியாக நடித்துள்ள சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்', விஷ்ணு விஷாலின் 'இரண்டு வானம்' படங்களும் ரிலீசாக உள்ளன.

Apr 30, 2026

ஏப்.30ல் தனுஷ் நடித்த 'கர' படம் ரிலீசாகிறது.

தனுஷ் நடித்த 'கர' படம் ஏப்.30ல் ரிலீசாகிறது. இப்பட விழாவில் பேசிய தனுஷ், "அடுத்து ராஜ்குமார் பெரிய சாமி, மாரி செல்வராஜ், தமிழரசன் பச்சமுத்து என 3 இயக்குனர்கள் எனக்காக காத்திருக்கின்றனர். இதில் 'வட சென்னை 2' படமும் இருக்கிறது. இந்த படங்களை எல்லாம் முடித்துவிட்டு தான், புதிய படம் இயக்குவது பற்றி மீண்டும் யோசிக்க வேண்டும்" என்றார். 

Apr 30, 2026

மலையாள நடிகர் திலீப், சிவகார்த்திகேயன் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இயக்குனர் ராம்குமார் பால கிருஷ்ணன் இயக்கத்தில்'பார்க்கிங்', சிம்புவின் 49வது படம், ரஜினியின் படம் ஆகியவை பேச்சுவார்த்தையில் இருந்து பின்னர் கைவிடப் பட்டது. தற்போது சிம்புவுக்கு கூறிய அதே கதையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். சாய் அபயங்கர் இசையமைக்க, மலையாள நடிகர் திலீப் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

Apr 30, 2026

மே 1ல் மலையாளத்தில் 'பேட்ரி யாட்'. படம் ரிலீசாகிறது.

மே 1ல் மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லால், பஹத் பாசில், குஞ்சாக்கோ போபன், நயன்தாரா என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள படம் 'பேட்ரி யாட்'. ரிலீசாகிறது. இதில் மோகன்லால் வேடத்தில் நடிக்க முதலில் சுரேஷ் கோபியை வைத்து தான் கதை எழுதினாராம் இயக்குனர் மகேஷ் நாராயணன். மம்முட்டியிடம் கதை சொன்னபோது அவர்தான் மோகன்லாலை பரிந்துரைத்த  பிறகு, மோகன்லால் இப்படத்தில் நடித்துள்ளார்.

Apr 30, 2026

'கல்நாயக்' 33 ஆண்டுகளுக்குப் பிறகு 2ம் பாகம் 

1993 ரிலீசான 'கல்நாயக்' படம் ஹிந்தி நடிகர் சஞ்சய் தத் நடித்து ஹிட்டானது. சுபாஷ் கை இயக்கியிருந்தார். 33ஆண்டுக களுக்கு பிறகு தற்போது 'கல் நாயக் ரிட்டன்ஸ்' என்ற பெயரில் இதன் 2ம் பாகம் அறிவிக்கப்பட்டுள்ளது. ' இப்படத்தையும் அதே இயக்குனர் இயக்க, விரைவில் படப்பிடிப்பை துவங்குகின்றனர்.

Apr 30, 2026

மே 2ல் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்வதாக தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.

 மே 2ல் புதுப் படங்கள் 8 வாரங்களுக்கு பிறகான ,ஒடிடி வெளியீடு, நடிகர்கள் வருவாய் பகிர்வு அடிப்படையில் நடிப்பது போன்றவற்றை வலியுறுத்தி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்வதாக தயாரிப்பாளர் சங்கம் அறிவித்தது. இதற்கு தென்னிந்திய நடிகர்கள் சங்கம், வினியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் உள்ளிட்ட சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து, வேலை நிறுத்தத்திற்கு ஆதரவில்லை எனத் தெரிவித்துள்ளன. அனைத்து தரப்பும் பேச்சு வார்த்தையில் ஈடுபடுமாஅல்லது எதிர்ப்பை மீறி வேலை நிறுத்தம் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Apr 30, 2026

“தி இந்தியா ஸ்டோரி' காஜல் அகர்வால் நாயகியாக நடித்துள்ள ஹிந்தி படம்.

சேட்டன் ஆர். கே இயக்க,காஜல் அகர்வால் நாயகியாக நடித் துள்ள ஹிந்தி படம் 'தி இந்தியா ஸ்டோரி'. ஷ்ரேயாஸ் தல்படே நாயகனாக நடித்துள்ளார். படத்தின் மையக்கரு 'இந்திய விவ சாயத்தில் கலக்கப்படும் விஷம்' என்பதுதான் .தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் வரும் ஜூலை 24ல் படம் வெளியாகிறது.  இயக்குனர் சேட்டன் இன்றைய பார்வையாளர்களுக்கு பொருத்தமான, சிறந்த திரை வெளியீடாக இப்படம் இருக்கும் என்கிறார்..

Apr 23, 2026

'தீயோர் கூடம்"

இயக்குனர் சக்திவேல்  படம் பற்றி கூறியதாவது "ஒரே நாளில் நடக்கும் கிரைம் கதை. ஒரு வீட்டில் திடீரென நடக்கும் கொலை, அதில் மூன்று பேர் சந்திக்கும் பிரச்னைகளை திரில்லர் பாணியில் சொல்லும் படம் இது" என்றார். நடிகை சாக்ஷி அகர்வால் கதையின் நாயகியாக நடிக்கும் படம் 'தீயோர் கூடம்'.டேனியல் ஆனி போப், வையாபுரி முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

1 2 ... 13 14 15 16 17 18 19 ... 91 92

AD's



More News