25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமை உறுப்பினர்களுக்கு 50-இலட்சம் ரூபாய் மீன்வளர்ப்பு உள்ளீட்டு மானியமாக வழங்கப்படும்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமை உறுப்பினர்களுக்கு 50-இலட்சம் ரூபாய் மீன்வளர்ப்பு உள்ளீட்டு மானியமாக வழங்கப்படும்

 2025-26-ம் ஆண்டு சட்டமன்றக் கூட்டத்தொடரில்  மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு எண்: 22-ல் மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமை உறுப்பினர்களுக்கு 50-இலட்சம் ரூபாய் மீன்வளர்ப்பு உள்ளீட்டு மானியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, மேலும் மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமை உறுப்;பினர்களுக்கு முகமையின் நிதி மூலம் இத்திட்டத்தினை செயல்படுத்திட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து, விருதுநகர் மாவட்டத்தில், இத்திட்டத்தினை செயல்படுத்திட 10-ஹெக்டேர் இலக்காக நிர்ணயம் செய்து ஆணை வழங்கப்பட்டுள்ளது.

மேலும், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் விருதுநகர் மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் பதிவு செய்து, மீன்வளர்ப்புத் தொழில் செய்து வரும் மீனவ விவசாயிகளுக்கு உள்ளீட்டு மானியமாக 1-ஹெக்டேருக்கு அதிகபட்சமாக 10,000-எண்ணம் மீன்குஞ்சுகள் கொள்முதல் செய்வதற்கு ரூ.5000- மானியமாக வழங்கப்படவுள்ளது.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் முகமையில் பதிவு செய்து, மீன்வளர்ப்புத் தொழில் செய்து வரும் மீன்வள விவசாயிகள் 114,B 27/1,  வேல்சாமி நகர், என்ற முகவரியில் இயங்கிவரும் விருதுநகர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், தொலைபேசி எண். 04562 - 244 707 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.     

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News