ஜி.வி.பிரகாஷ், தேஜு அஸ்வினி, பிந்து மாதவி நடித்துள்ள படம் மு.மாறன் இயக்கத்தில். 'பிளாக்மெயில்' ,ஆக., 1ல்ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு 'தள்ளிப்போனது. பின்னர் ஆக., 22ல் ரிலீஸ் செய்ய முயற்சிகள் நடந்தன. இப்போது செப்., 12ல் ரிலீஸ் என புதிய தேதியை அறிவித்துள்ளனர்.
சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'மதராஸி' படம் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் செப்., 5ல் வெளியாகிறது. இப்படத்திற்கு தணிக்கையில் 'யு/ஏ' சான்று வழங்கப்பட்டுள்ளது. படம் ஓடும் நேரம் 2 மணி நேரம் 47 நிமிடங்கள். சமீபகாலமாக முன்னணி நடிகர்களின் படங்கள் இரண்டரை மணி வருவது அதிகமாகி உள்ளது. இது ரசிகர்களின் பொறுமையை சோதிக்கிறது.
அதர்வா, லாவண்யா திரிபாதி, அஷ்வின் காக்மானு நடித்துள்ள படம் ரவீந்திர மாதவா இயக்கத்தில் 'தணல்'.ஆக., 29ல் படம் ரிலீஸ் என அறிவித்தனர். ஆனால் வெளியாகவில்லை. இப்போது படத்தின் டிரைலரை வெளியிட்டு அதன் உடன் வரும் செப்., 12ல் ரிலீஸ் என புதிய தேதியை அறிவித்துள்ளனர். .
சில வருடங்களுக்கு முன்பு வாங்கப்பட்ட இந்த வீட்டை பெரிய தொகை தந்து விலைக்கு வாங்கி, இடித்து, ஸ்டுடியோ வடிவில் நயன்தாரா போயஸ் கார்டனில் 7,000 சதுர அடியில் ரூ.100 கோடியில், வீட்டை கட்டி முடித்துவிட்டார்.. 3 தளங்களில் கட்டியிருக்கிறார், சினிமாவை மிஞ்சும் வகையில் தோட்டம் அருங்காட்சியகம் போன்று பழங்கால தாழி, காற்றோட்டம் மற்றும் சூரிய ஒளி ஊடுருவும் வகையில் கட்டமைப்புடன் காட்சி தருகிறதாம் நயன் வீடு, 3 தள வீட்டில், முதல் தளத்தில் கணவர், மகன்களுடன் நயன்தாரா வசிக்கிறார். 2வது தளத்தில் குழந்தைகள் விளையாடுவதற்கு தனி அறை என கண்களை சுவரும் கனவு இல்லமாக கட்டியிருக்கிறாராம். இப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன,
விஷால், துஷாரா விஜயன், அஞ்சலி நடிக்கும், ரவி அரசு இயக்கத்தில், புதிய படத்திற்கு 'மகுடம்' என பெயரிட்டுள்ளனர். விஷாலின் 35வது படமான இது கடல் சார்ந்த ஒரு ஆக்ஷன் படமாக உருவாகிறது.1992ல் பிரதாப் போத்தன் இயக்கத்தில் சத்யராஜ் நடிப்பில் ஏற்கனவே 'மகுடம்' படம் வெளியாகி உள்ளது.
அப்பா, மகள் தொடர்பான கதையில் ,அர்ஜூன் மகளாக பிரீத்தி முகுந்தன் நடிக்கிறார். சுபாஷ் இயக்குகிறார். நீண்ட இடைவெளிக்கு பின் அர்ஜூன் கதையின் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அபிராமி நடிக்க,இசையமைப்பாளர் ரவி பசூர் இசையமைக்கிறார்
பசங்க திரைப்படத்தில் ஜீவா கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் ஸ்ரீராம், சென்னையில் உள்ள மிகப்பெரிய நிறுவனமான ஆற்றல்- என்ற எரிசக்தி நிறுவனத்தின் CEO-ஆக பணியமர்த்தப்பட்டு இருக்கிறார் 2050-ஆம் ஆண்டுக்குள் பூமியை பாதிக்கும் கார்பன் வெளியிட்டை பூஜ்ஜியமாக மாற்ற வேண்டும் ,என்ற குறிக்கோளுடன் இந்த நிறுவனத்துடன் சேர்ந்து செயல்படுகிறார்.
முதன்மை கதாபாத்திரங்களில் ,நடிகர்கள் சரவணன், சுகுமார் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க, சுரேகா மற்றும் நிஷா துபே ஆகியோர் நாயகிகளாக நடிக்கும் படம் போலீஸ் பேமிலி' பாலு இயக்கியுள்ளார்.. போலீஸ் ஸ்டேஷனில் போலீசார் எதிர்கொள்ளும் பிரச்னைகள், அவர்களின் குடும்பச்சூழல் ஆகியவற்றையும், சஸ்பென்ஸ் நிறைந்த கிரைம் திரில்லராக உருவாகியுள்ளது.
அவதார் 3 படம் 'அவதார் - பயர் அண்ட் ஆஷ்' - என்ற பெயரில் ஜேம்ஸ் கே மரூன் ஹாலிவுட் இயக்குனர் இயக்கத்தில் தயாராகிறது.. பிரம்மாண்டமாக வியக்க வைக்கும் வகையில் விஎப்எக்ஸ் காட்சிகளுடன் டிரைலர் தமிழ், ஹிந்தி உள்ளிட்ட இந்திய மொழிகளிலும் வெளியா கியுள்ளது. டிச., 19ல் படம் வெளியாகிறது.
நடிகர் துல்கர் சல்மான் ,நடிகர் ராணா டகுபதி உடன் இணைந்து தயாரித்து, நாயகனா கவும் நடிக்கும் படம் 'காந்தா'. முக்கிய வேடத்தில் சமுத்திரக னியும் நாயகியாக பாக்யஸ்ரீயும் நடிக்கின்றனர். செல்வமணி செல்வராஜ் இயக்க தமிழ், தெலுங்கில் தயாராகிறது. ஆகஸ்ட் 1ல் படத்தை ரிலீஸ் செய்ய திட் ட மிட்டனர். ஆனால் பட பணிகள் முடியாததால் செப். 5ல் வெளியிட முடிவெடுத்துள்ளனர். அன்றைய தினம் சிவகார்த்திகேயனின் 'மதராஸி'படமும் ரிலீஸாகிறது.