'ஹிட் 3'. நடிகர் நானி நடிப்பில் மே 1 ல் ரிலீசாக உள்ள படம் ஒரு நிகழ்ச்சியில் பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த் சாமி நடித்த 'மெய்யழகன்' படம் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார் நானி. “தமிழ் சினிமாவில் மட்டுமல்ல. கடந்த பத் தாண்டுகளில் நான் பார்த்த சிறந்த படம் 'மெய்யழகன்'. அது ஒரு மேஜிக்கல் சினிமா. செட் அமைத்து ஆயிரம் கோடி செலவிடலாம். இந்த படம் ஒரு தனி மேஜிக். இவ்வளவு பர்சனலான ஒரு படத்தை எடுப்பது சாத்தியமில்லாதது. அதைப் பற்றி நினைத்தாலே சந்தோஷமாகி விடுவேன்" என பேசியுள்ளார் நானி.
ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், உருவாகி வரும் படம் 'மதராஸி', கடந்தாண்டு பிப்ரவரியில் துவங்கிய படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை. இடையில் சல்மான்கான் நடிப்பில் ஹிந்தியில் 'சிக்கந்தர்' படத்தை எடுத்து முடித்துவிட்டார் முருகதாஸ். மார்ச் 30ல் ரிலீஸ் ஆனது. அதன்பின் ஏப்ரல் மாத மத்தியில் 'மதராஸி' படத்தின் படப்பிடிப்பை மீண்டும் ஆரம்பிக்க உள்ள முருகதாஸ், 20 நாட்களுக்கு மேல் தொடர்ந்து நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும். படம் 'மதராஸி, ருக் மணி வசந்த், வித்யூத் ஜம்வால், விக்ராந்த், சபீர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார் . 80 சதவீத படப் பிடிப்பு முடிந்துள்ள நிலையில் மீதமுள்ள படப்பிடிப்பு மற்றும் மற்ற பணிகள் துவங்கி உள்ளன. இந்நிலையில் செப்., 5ல் படம் ரிலீஸ் ஆவதாக அறிவித்துள்ளனர்.
'உப்பேனா' பட இயக்குனர் புஞ்சி பாபு சனா இயக்கத்தில் , நடிகர் ராம் சரண் தனது 16வது படமாக 'பெத்தி' எனும் படத்தில் நடித்து வருகிறார். இதில் ஏ.ஆர்.ரஹ்மான் இசைய மைக்க ,கதாநாயகியாக ஜான்வி கபூர் நடிக்கிறார். சிவராஜ் குமார், ஜெகபதி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்துவரும் சூழலில் அடுத்தாண்டு மார்ச் 27ல் படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
ராம்குமார் பாலகிருஷ் ணன் இயக்கும் 49வது படம், அஸ்வத் மாரிமுத்து இயக்கும் தனது 50 வது படங்களிலும் அடுத்தடுத்து நடிக்கிறார். இதில் 49வது படத்திற்கு சாய் அபியன்கர் இசையமைப்பார் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். சாய் அபியன்கர் இசைய மைப்பில் இதுவரை எந்த படமும் வெளியாகாத நிலையில், அவர் கைவ சம் சூர்யாவின் 45வது படம், அட்லி அல்லு அர் ஜூன் படம், ராகவா லாரன்சின் 'பென்ஸ் 'பிரதீப் ரங்கநாதனின் 4வது படம் என வரிசையாக படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். கமல் நடிப்பில் 'தக்லைப்’ படத்தில் நடித்துள்ள நடிகர் சிம்பு, அடுத்து தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48வது படத்தில் நடிக்க உள்ளார்.
மறைந்த நடிகர் விஜய காந்தின் 100வது படம் 'கேப்டன் பிரபாகரன்'.அவரது திரையுலக பயணத்தில் மைல்கல்லாக அமைந்த இப்படம் வெளியாகி 34 ஆண்டு கள் ஆகிறது. இதைதற்போது '4கே' தொழில்நுட்பத் தில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். ஆர். கே.செல்வமணி இயக்கிய இந்தபடத்தில், இளைய ராஜா இசையில், சரத்குமார், மன்சூர் அலி கான், ரூபிணி, ரம்யா கிருஷ்ணன், லிவிங்ஸ் டன் ஆகியோர் நடித்திருந்தனர்.
'பார்க்கிங், லப்பர் பந்து' என தொடர்ச் சியாக இரு வெற்றி படங்களை கொடுத்த ஹரிஷ் கல்யாண் கைவ சம், 'நுாறு கோடி வான வில், டீசல்' ஆகிய படங்கள் உள்ளன. இத னையடுத்து தற்போது 'லிப்ட்' பட இயக்கு னர் வினித் வரபிரசாத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகி றார் ஹரிஷ் கல்யாண். இது அவரது 15வது படம். இதில் பிரீத்தி முகுந்தன் நாயகியாக நடிக்கிறார்.
'உலகின் செம் மொழிகளில் இன்றும் பரிணமித்து வளரும் மிகத்தொன்மையான மொழி தமிழ். இந்த அடிப் படையில் எங்களது குழு, தமிழ்மொழிக்கானஒருபெருமைச்சின்னத்தைஉருவாக்கும்முயற்சியில்ஈடுபட்டுள்ளது.தமிழ்இலக்கியங்களைவிளக்கப்படங்களாகவும்இன்னும்பல்வேறுபுதியவடிவங்களிலும்வழங்கவிருக்கிறது.இந்ததமிழ்பெருமைச்சின்னத்தைஒருடிஜிட்டல்ரெண்டரிங்காகஉருவாக்கவுள்ளது.எதிர் காலத்தில் இதற்கென ஒரு கட்டடமும் வரக்கூடும்' என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட சமூக வலை தளப்பதிவில் தெரிவித்துள்ளார்.
'நாடோடிகள்' படத்தின் மூலம் பிரபல மானவர் நடிகை அபிநயா. தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத் திறனாளியாக இருந்தாலும் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர். ஹைதராபாத்தை சேர்ந்த வெகசனா கார்த்திக் என்பவரை 15 ஆண்டுகளாக காதலித்து வந்தார் அபிநயா. இவர்களின் திருமணம் ஹைதராபாத்தில் பாரம்பரிய முறைப்படி நேற்று நடந்தது. அந்த புகைப்படங்கள் வைரலாகின.
சினிமாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக நாயகியாக நடித்து வரு கிறார் திரிஷா. அனேகமாக இந்த ஆண்டில் அதிக படங்களில் நடித்த நடிகையாக இவராக தான் இருப்பார் போல. 2025ல் இது வரை இவரது நடிப்பில் 'ஐடென் டிட்டி (மலையாளம்), விடா முயற்சி, குட் பேட் அக்லி' ஆகிய 3 படங்கள் வெளிவந்துவிட்டன. அடுத்து தமிழில் 'தக்லைப், சூர்யா 45' மற்றும் 'விஸ்வாம் பரா' (தெலுங்கு) ஆகிய மூன்று படங்கள் இந்தாண்டுக்குள் வெளியாக உள்ளன.
நடிகர் அஜித் தொடர்ச்சியாக கார் ரேஸில் பயணித்து வருகிறார். ஏற்கனவே போர்ச்சுக்கல் மற்றும் ஸ்பெயின் நாடுகளில் நடந்த ரேஸில் அஜித் அணி 3வது இடம் பிடித்தது. இப்போது பெல்ஜியம் நாட்டில் பிர பலமான ஸ்பா பிராங்கோர் சாம்ப்ஸ் சர்க்யூட்டில் சர்வ தேச கார் பந்தயம் நடந்தது. இதில் அஜித் அணி 2வது இடம் பிடித்தது . போட்டியை நேரில் பார்த்த இந்தியர்கள் அஜித் அணி வெற்றி பெற்றதும் ஏகே.... ஏகே... என்று சத்தம் எழுப்பியபடி இந்திய தேசிய கொடியை அசைத்து தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.