'சூரரை போற்று' படத்துக்காக தேசிய விருது பெற்ற ஜி.வி.பிரகா சுக்கு, மீண்டும் தேசிய விருது கிடைத்துள்ளது .71-வது தேசிய திரைப்பட விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் 'பார்க்கிங்' படத்துக்கு 3 விருதுகள் கிடைத்தது. 'வாத்தி’படத்தில் இசையமைத்த ஜி.வி.பிரகாசுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது அறிவிக்கப்பட்டது. அவர் கூறும்போது, "ஜி.வி.பிரகாசுக்கு 2-வது முறையாக சிறந்த இசையமைப்பாளருக்கான விருது கிடைத்திருப்பதால் முன்னாள் மனைவி சைந்தவி வாழ்த்தி பாராட்டி விருதுக்காக அவரை தேர்வு செய்த தேர்வுக்குழுவினர், வாத்தி படத்தில் அவரை இடம்பெற செய்த படக்குழுவினர், படத்தில் என்னையும் ஒரு பகுதியாக இணைத்திட்ட தனுசுக்கும் என் நன்றிகள்”, என்றார்.ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டாலும், இசை நிகழ்ச்சிகளில் இருவரும் ஒன்றாக பங்கேற்று வருகிறார்கள் .இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷ் நடிகராகவும் பயணிக்கிறார். இவர் நடித்துள்ள 'பிளாக்மெயில்' படம் ரிலீஸாவதாக இருந்தது. நிதி பிரச்னையால் கடைசிநேரத் தில் தள்ளி வைக்கப்பட்டது. இதேபோல்இவர் நடித்து நீண்ட காலமாக வெளியாகாமல் இருந்த அடங்காதே படம் ஆக., 27ல் ரிலீஸ் என அறிவித்தனர். ஆனால் இப்பட தயா ரிப்பாளர் சரவணன் சிறையில் உள்ளதால் தள்ளிப் போகிறதாம்.
ஆகஸ்ட் 14 ல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 'கூலி' படம் ரிலீஸ் ஆகிறது. ஆக., 2ல் சென்னை நேரு ஸ்டேடியத்தில் பாடல் வெளியீட்டு விழா. படத்தின் டிரைலரும் வெளியானது. அனிருத் இசையமைத்து, நாகார்ஜுனா, அமீர் கான், சவுபின் சாஹிர், உபேந்திரா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இதில் வில்லனாக நடித்த நாகர்ஜூனா, ஐதராபாத்தில் பேசும்போது “எனக்கு புதுமை பிடிக்கும். வித்தியாசமான கதாபாத்திரங்களை செய்ய விரும்புவேன். லோகேஷ் உடன் பணி செய்ய ஆசைப்பட்டேன். கூலி கதையை கேட்டதும் பிடித்து விட்டது. ரஜினி இந்த கதையை ஏற்றாரா என கேட்டேன். ஏனென் றால் இதில் நான் நடித்த 'சைமன்' கதாபாத்திரம் தான் ஹீரோவை போல இருக்கும். ஹீரோவையும், வில்லனையும் லோகேஷ் சமமாக சித்தரிக்கிறார். படங்களில் எப்போதும் நல்லவர்களாக நடிப்பது நல்லதல்ல" என்றார்.
நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட். பாலிவுட்டின் முன்னணி நட்சத்திர தம்பதியர் இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். தங்களது குடும்பத்தாருடன் வசிக்க மும்பை, பாந்த்ரா மேற்குப் பகுதியில் 250 கோடி ரூபாய் செலவில் கனவு இல்லம் ஒன்றை கட்டி உள்ளனர். 6 மாடி கொண்ட இந்த வீட்டின் பணிகள் முடிந்துவிட்டதால் விரைவில் அங்கு குடியேற உள்ளனர்.
30 சதவீதம் ஊதிய உயர்வு கோரி தெலுங்கு திரைப் பட தொழிலாளர் கூட்டமைப்பு ஸ்டிரைக்கில் ஈடுபட் டுள்ள நிலையில். படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ள தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை, எந்த திரைப்பட தொழிலாளர் சங்கத்திலும் உறுப் பினர் அல்லாதவர்களை, தங்கள் படங்களின் படப்பிடிப்புக்கு பயன்படுத்துவோம். தயாரிப்பாளர்கள் இல்லை என்றால் சினிமா தொழில் இல்லை என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.
ஜூனியர் என்டிஆர், ஹிருத்திக் ரோஷன், கியாரா அத்வானி நடித்துள்ள ஹிந்தி பட மான 'வார் 2' ஆக., 14ல் ரிலீஸாகிறது. ஹிருத்திக் கூறுகையில், "ஜூனியர் என்டிஆர் உடன் பணிபுரிந்தது நம்ப முடியாத அனுபவமாக உள்ளது. எப்படிப்பட்ட காட்சி என்றாலும் ஒத்திகை கூட தேவையில்லை, ஒரே டேக்கில் ஓகே செய்துவிடுவார். இது என்னை ஆச்சர்யப்படுத்தியது. அவரின் நடனத்தையும் பார்த்து அசத்து போய் இருக்கிறேன். அவர் மூலம் இந்தப்படம் எனக்கு ஒரு கற்றல் அனுபவத்தை தந்தது" என்றார் ஹிருத்திக்.
நாளை (ஆக., 8ல்) "அகதி, பாய், காத்துவாக்குல ஒரு காதல், மாமரம், நாளை நமதே, நெடுமி, நிஷா, ஒரு கைதியின் நாட்குறிப்பு, ராகு கேது, ரெட் பிளவர், தங்க கோட்டை, உழவர் மகன்,வானரன்" ஆகிய 13 படங்கள் ரிலீஸாகின்றன. இந்தாண்டுஒரேநாளில் இவ்வளவு படங்கள் வெளியாவது இதுவே முதல்முறை. இவற் றில் பல படங்களுக்கு ஓரிரு தியேட்டர்கள் அல்லது காட்சிகள் கிடைக்குமா?நடிகர் நாகேஷின் பேரனும், நடிகர் ஆனந்த் பாபுவின் மகனுமான கஜேஷ் நாகேஷ் நடித்த “வானரன்” நாளை ரிலீஸாகின்றது.நடிகர் நாகேஷின் பேரனும், நடிகர் ஆனந்த் பாபுவின் மகனுமான கஜேஷ் நாகேஷ் பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில் நாயக னாக நடித்துள்ள படம் 'உருட்டு உருட்டு'. நாயகியாக ரித்விகா ஸ்ரேயா நடித்துள்ளார். படத் தின் இசை வெளியீட்டு விழா வில் பேசிய கஜேஷ், "என் தாத்தா, தந்தையின் பெயரை நிச்சயம் காப்பாற்றுவேன். இருவரை போல நானும் திரைத் துறையில் ஜொலிப்பேன். சினி மாவுக்காக என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். அதிகம் பேசாமல் சாதிக்க விரும்புகிறேன்" என்றார்.
மலையாள நடிகர் மோகன்லால், ரஜினியின் 'ஜெயிலர் 2' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து,சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் அப்பா கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.அதேபோல், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ள அவரது 64வது படத்திலும் மோகன்லால் நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. ரஜினி, அஜித், சிவகார்த்திகேயன் படங்கள் என அடுத்தடுத்து தமிழில் மோகன்லால் பிசி யாக நடிக்க உள் ளார். மலையாள நடிகர் மோகன்லால், அவ்வப் போது தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
பிகாய் அருண் என்பவர் இயக்கத்தில் ராஜ்குமார் தயாரித்து நடித்துள்ள 'டெவிலன்' படத்தை 48 மணிநேரத்தில் எடுத்து திரையிட்டு காண்பித்துள் ளனர். திரைக்கதை எழுதுதல், ஷூட்டிங், எடிட், பின்னணி இசை உள்ளிட்ட அனைத்து வேலை களையும் 48 மணிநேரத்தில் முடித்து திரையிட்டும் காண்பித்து 'நோபிள் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ்' சாதனையை படைத்துள்ளது.
விநியோகஸ்தர்களால் ஆரம்பத்தில் புறக்கணிக் கப்பட்ட படம் பின்னர் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு தேசிய விருது வரை வென்றது.இப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆன நிலையில் டிஜிட்டலுக்கு மெருகேற்றப்பட்டு மீண்டும் ரிலீஸாகிறது. விரைவில் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட உள்ளது. பல ஆண்டுகளாக சினிமாவில் போராடி வந்த நடிகர் விக்ரமிற்கு அடையாளம் தந்த படம் 1999 ல் வெளியான 'சேது'. பாலா இயக்கிய முதல் படம். அபிதா, சிவகுமார், ஸ்ரீமன் உள்ளிட்டோர் நடித்தனர்.
ஜி.வி. பிரகாஷ் நாயகனாக நடித் துள்ள படம் மு.மாறன் இயக்கத்தில் நாயகி யாக தேஜு ,அஸ்வினி நடித்துள்ளார். பிந்து மாதவி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். கிரைம் கலந்த சஸ்பென்ஸ், திரில்லர் படமாக உருவாகி உள்ளது. இதன் படப் பிடிப்பு முடிந்தும் சில மாதங்களாக சரியான ரிலீஸ் தேதிக்காக காத்திருந்தனர். இந்நிலையில் ஆகஸ்ட் 1ல் இப்படம் திரைக்கு வருகிறது என அறிவித்துள்ளனர்.