அட்லி. இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து சூப்பர் ஹீரோ மாதிரியான சயின்ஸ் பிக்ஷன் பட ம். இதற்கான முன்கட்ட பணிகள் நடப்பதோடு நடிகர்கள் தேர்வும் நடக்கிறது. தீபி படுகோனே நாயகியாக நடிப்பதாக அறிவித்துள்ளனர். மேலும் மிருணாள் தாக்கூர், ஜான்வி கபூர், ராஷ்மிகா உள்ளிட்டோரும் அடுத்தடுத்து இணைய உள்ளனர். இந்நிலையில் 'மென் இன் பிளாக், பேட் பாய்ஸ்' போன்ற படங்களில் நடித்த பிரபல ஹாலிவுட் நடிகரான வில் ஸ்மித் இதில் முக்கியமானவில்லன் வேடத்தில் நடிப்பதாக பேச்சுவார்த்தை நடக்கிறது.
தற்போது ஆதித்யா சர் போதார் இயக்கத்தில் தமா என்ற ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா.. அவருடன் ஆயுஷ்மான் குரானா, நவாசுதீன் சித்திக் ஆகியோர் நடித்துள்ளனார். ஹாரர், திரில்லர் படமாக உருவாகி உள்ள இதன் டீசர் வெளியாகி உள்ளது. படம் தீபாவளிக்கு ரிலீஸ் என அறிவித்துள்ளனர்.
தமிழில் கீர்த்தி சுரேஷ் அவர் கதை யின் நாயகியாக நடித்த படங்களும் ஓட வில்லை. இப்போது 'ரிவால்வர் ரீட்டா' படத்தை மலை போல நம்பியிருக்கி றார். ஆண் துணை இல்லாத வீட்டில் உள்ள பெண்களுக்கு 2 கேங்ஸ்டர் டார்ச்சர் கொடுக்கிறார்கள். அவர் களை கீர்த்தி சுரேஷ் என்ன செய்கிறார் என்பது கதை. சந்துரு இயக்கி உள்ளார். ஆக., 27ல் படம் ரிலீஸாகிறது.
1986ல் 'பகவான் தாதா' என்ற ஹிந்தி படத்தில் ரஜினியின் தத்து பிள்ளையாக சிறு வயதில் ஹிருத்திக் நடித்துள்ளார். தமிழில் ரஜினி நடித்துள்ள 'கூலி' படமும், ஹிந்தியில் ஹிருத்திக் ரோஷன் நடித்துள்ள 'வார் 2' படமும் இன்று பான் படமாக வெளியாகிறது 39 ஆண் டுகளுக்கு பின் இப்போது ரஜினியுடன் போட்டி போடுகிறார்.
பிலிம்பேர் வழங்கிய 'பிலிம்பேர் கிளாமர் அண்ட் ஸ்டைல் தென்னிந்தியா 2025 விருது களில் நடிகை மாளவிகா மோகனன், "ஹாட்ஸ்டெப்பர் ஆப் தி இயர்' மற் றும் ஹாட்டஸ்ட் ஸ்டார் ஆப் தி இயர்' என்ற இரண்டு விருதுகளை வென்றுள்ளார்.
ரிஷப் ஷெட்டி இயக்கி, நடிக்க, முக்கிய வேடங்களில் ஜெயராம், ருக்கு மணி வசந்த் உள்ளிட்டோர் நடிக்க 'காந்தாரா சாப் டர் 1' படம் உருவாகி வருகிறது .சமீபத்தில் படப்பிடிப்பு முடிந்தது. வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு இதில் 'கனகாவதி' ஆக நடிக்கும் ருக்மணி வசந்த்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ரிஷப் ஷெட்டி.அடுத்து 'ஜெய் ஹனுமான், சத்ரபதி சிவாஜி மகாராஜ்' படங்கள் அவர் கைவசம் உள்ளன. அதனை முடித் ததும் ‘நான் ஈ, பாகுபலி' படங்களில் இணை இயக்குனராக இருந்த அஸ்வின் கங்கராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இவர் 'ஆகாச வாணி' படத்தை இயக்கியுள்ளார்.
சமீபத்தில் தக் லைப் படம் மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி தோல்வி அடைந்தது. எனது அடுத்தபடம் இளம் நடிகர்களை வைத்து காதல் கதையில் உருவாகும் என மணிரத்னம் கூறி வந்தார். இப்போது இந்த படத்தில் நாயகனாக விக்ரம் மகன் துருவ், நாயகியாக ருக்மணி வசந்த் நடிக்க நவம்பரில் படப்பிடிப்பை துவங்க உள்ளனர்.
தமிழில் வாரம் ஏழெட்டு படங்கள் கடந்த வாரத்திற்கு முன்பு வரை வெளியாகின. கடந்தவாரம் 'கூலி' படம் மட்டுமே வெளியானது. தமிழகத்தில் 90 சதவீத தியேட் டர்களை இந்தப்படம் ஆக்கிரமித்ததால் மற்ற படங்களுக்கு தியேட்டர் கிடைக்கவில்லை. ஆக., 22ல் "இந்திரா, சினிமா பேய்' ஆகிய இரு படங்கள் மட்டுமே வெளியாகின்றன. மறுவெளியீடாக விஜயகாந்தின் 'கேப்டன் பிரபாகரன் படம் மறுவெளியீடாக வருகிறது
மறைந்த நடிகர் விஜயகாந்த் நடிப்பில் 1991ல் அவரின் 100வது படம் இளையராஜா இசையமைக்க, ஆர்கே செல்வமணி இயக்கி வெளியான 'கேப்டன் பிரபாகரன்'.அவரது திரைப்பயணத்தில் முக்கியமான படம். சரத்குமார், மன்சூர் அலிகான், ரூபிணி, ரம்யா கிருஷ்ணன், லிவிங்ஸ்டன் நடித்தனர். ஆக., 25ல் விஜயகாந்த் பிறந்தநாள் முன்னிட்டு, 4கே தரம் மற்றும் 7.1 சவுண்ட் மிக்ஸிங் உடன் இந்த படம் ஆக., 22ல் 500 தியேட்டர்களில் ரீரிலீஸாகிறது.
ஒவ்வொரு முறை தேசிய விருதுகள் அறிவிக்கப்படும் போது அதில் சர்ச்சைகள் எழும். இந்தமுறை நடிகை ஊர்வசி குரல் எழுப்பி உள்ளார். இத்தனைக்கும் இவருக்கு இந்தாண்டு சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது 'உள்ளொழுக்கு' என்ற மலையாள படத்திற்காக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் கூறுகையில், "எதன் அடிப்படை யில் ஷாரூக்கான் சிறந்த நடிகர் என தேர்வு செய்தீர்கள். சிறந்த நடிகரான விஜயராகவனை துணை நடிகராக தேர்வு செய்தது ஏன். பூக்காலம் படத்திற்காக அவர் பல மணி நேரம் மேக்அப் போட்டு கஷ்டப்பட்டு நடித்தார்.தமிழில் நான் நடித்த ஜே.பேபி படமும் சிறந்த நடிகைக்கான விருது பரிந் துரையில் இருந்தது. ஆடுஜீவிதம் படத்திற்கு ஒரு பாராட்டு கூட இல்லை. கஷ்டப்பட்டு நடிக்கிறோம், வரி கட்டுகிறோம். நீங்கள் கொடுப்பதை வாங்கிச் செல்ல இது ஓய்வூதியம் கிடையாது" என தெரிவித்துள்ளார்