25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


வெள்ளித்திரை

Oct 02, 2025

'விருஷபா' மோகன்லால் நடிப்பில் தீபாவளிக்கு  இப்படம் ரிலீஸாகிறது.

'விருஷபா' மோகன்லால் நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம் நந்தா கிஷோர் இயக்கி உள்ளார். தற்போது வெளியிட்டுள்ள டீசரில் ,'பாகு பலி' போன்று சரித்திர பின்னணியில் இப்படம் உருவாகி உள்ளது. பிரமாண்ட அரண்மனை செட்டுகள்  மன்னர் வேடத்தில் மோகன்லால் சண்டையிடும் காட்சிகள், போன்றவை டீசரில் இடம் பெற்றுள்ளன.  தீபாவளிக்கு தெலுங்கு, மலையாளம் என இரு மொழிகளில் உருவாகி உள்ள இப்படம் ரிலீஸாகிறது. 

Oct 02, 2025

சரித்திர படமாக உருவாகி வரும் 'திரௌபதி 2' படப்பிடிப்பு நிறைவு.

 சரித்திர படமாக உருவாகி வரும் மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட், ரக்ஷனா, நட்டி நடித்துள்ள படம் 'திரௌபதி 2' ,படப்பிடிப்பு முடிந்துவிட்டது. எங்கள் குழுவினரின் அயராத  . 5 மாத உழைப்பு. உங்களை உறைய வைக்கும் ஒரு வரலாற்று திரைப்படம் உருவாகிறது. மும்பையில் ஆரம்பித்த திரௌபதி 2 படப்பிடிப்பு அரியலுாரில் நிறைவடைந்தது.  மோகன் ஜி.டிசம்பர் மாதம் திரையில். ஈசனுக்கு நன்றி" என்று பதிவிட்டுள்ளார் .

Sep 25, 2025

2021-23 ஆம் ஆண்டிற்கான ‘கலைமாமணி’ விருதுகள்.

 2021,2022 மற்றும்2023 ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளைப் பெற90 கலைஞர்கள் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இலக்கியம், இசை, நடனம், நாடகம், சினிமா மற்றும் பாரம்பரிய கலைகள் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றனஇலக்கியத்திற்கான பாரதியார் விருதைப் பெற இலக்கியவாதி என். முருகேச பாண்டியனும், இசைக்கான எம்.எஸ். சுப்புலட்சுமி விருதுக்கு‘பத்ம பூஷண்’ கே.ஜே. யேசுதாஸும், நடனத்திற்கான பாலசரஸ்வதி விருதுக்கு பத்மஸ்ரீ முத்துகண்ணம்மாளும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். . தமிழ்நாடு அரசின்‘கலைமாமணி’ விருதுகள் 2021,2022 மற்றும்2023 ஆம் ஆண்டுக்கான விருதுகளைப் பெற நடிகர்கள் எஸ்.ஜே. சூர்யா, சாய் பல்லவி, விக்ரம் பிரபு, ஜெயா வி.சி. குகநாதன், கே. மணிகண்டன் மற்றும் எம். ஜார்ஜ் மரியன் ஆகியோர் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. பல்வேறு பிரிவுகளின் கீழ் பட்டியலை மாநில அரசு புதன்கிழமை (செப்டம்பர் 24, 2025) வெளியிட்டது.திரைப்பட இயக்குனர் லிங்குசாமி, கலை இயக்குனர் ஜே.கே. என்கிற எம். ஜெயக்குமார், ஸ்டண்ட் மாஸ்டர்‘சூப்பர்’ சுப்பராயன், பாடலாசிரியர் விவேகா, இசை இயக்குனர் அனிருத், பின்னணி பாடகி ஸ்வேதா மோகன், நடன இயக்குனர்‘சாண்டி’ என்கிற ஏ. சந்தோஷ் குமார் ஆகியோரும் இந்த ஆண்டுகளுக்கான‘கலைமாமணி’ விருதைப் பெற உள்ளனர்..தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்திலிருந்து சங்கங்கள் பிரிவின் கீழ் சென்னையில் உள்ள தமிழ் இசை சங்கம்(ராஜா அண்ணாமலை மன்றம்) விருதுக்கும், நாடகக் குழு பிரிவின் கீழ்‘கலைமாமணி’ எம்.ஆர். முத்துசாமி நினைவு நாடகக் குழு விருதுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு அக்டோபரில் சென்னையில் நடைபெறும் விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். அங்கு இந்த விருதுகள் வழங்கப்படும்.

Sep 25, 2025

மலையாள சினிமாவில் முதலிடம்'லோகா சாப்டர் 1 சந்திரா"

 டொமினிக் அருண் இயக்கத்தில், கல்யாணி பிரியதர்ஷன் வெளி வந்த 'லோகா சாப்டர் 1 சந்திரா ' படம்  23 நாட் களில் 267 கோடி வசூலித்து முதலிடம்..மலையாளத்தில் இதுவரை வெளியான படங்களில் அதிக வசூலைக் குவித்த படமாக இந் தாண்டு பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்த 'எல் 2 'எம்புரான்' படம் ரூ.265 கோடி முதலிடத்தில் இருந்தது. 

Sep 25, 2025

தாதாசாகேப் பால்கே விருது 2023: பெற்ற மோகன்லால்

மலையாளத் திரையுலகிற்கு கிடைத்த பெருமைக்குரிய சாதனையாகவும், தனிப்பட்ட முறையில் தனக்குக் கிடைத்த பெருமைக்காகவும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டு, 2023 ஆம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருதை மூத்த நடிகர் மோகன்லால் பெற்றுள்ளார். தனது 48 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் தன்னை வடிவமைத்ததில் பங்காற்றிய பார்வையாளர்கள், திரைப்படக் குடும்பத்தினர் மற்றும் அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.நான்கு தசாப்த கால திரையுலக வாழ்க்கையைக் கொண்ட நடிகர், நாட்டின் மிக உயர்ந்த திரைப்பட விருதை தனக்கு வழங்கியதற்காக நடுவர் மன்றத்திற்கும் அரசாங்கத்திற்கும் நன்றி தெரிவித்தார்."இன்று என்னை இந்த நிலையில் வைத்திருக்கும் திரையுலகக் குடும்பத்தினருக்கும், பார்வையாளர்களுக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இந்த தருணத்தை நான் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறேன். இந்த விருது, எனது 48 ஆண்டுகாலசினிமா வாழ்க்கையில் என்னை நேசித்தவர்களுக்கு நான் திருப்பித் தரக்கூடிய அங்கீகாரமாகும்" என்று மோகன்லால் கூறினார்.2004 ஆம் ஆண்டு புகழ்பெற்ற இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன் தாதாசாகேப் பால்கேவிருதை வென்ற பிறகு, இந்த விருதைப் பெறும் இரண்டாவது மலையாள நட்சத்திரம் மோகன்லால் ஆவார். அவரதுவெற்றியைத் தொடர்ந்து,.பிரதமர் மோடி மற்றும் பிற அரசியல்வாதிகள் மோகன்லாலுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Sep 25, 2025

செப். 26ல்  9 படங்கள் வெளியாக  உள்ளன .

இந்த வாரம் செப். 25ல் அந்த 7 நாட்கள்" மற்றும் செப்., 26ல் "கயிலன், கிஸ் மீ இடியட், ரைட், குற்றம் தவிர், சரீரம், டோர் நம்பர் 420. பணை, ஐஏஎஸ் கண்ணம்மா ஆகிய 9 படங்கள் வெளியாக  உள்ளன. கடந்த வாரத்துடன் இந்தாண்டில் வெளியான படங்களின் எண்ணிக்கை 190ஐ கடந்துள்ளது. இவற்றுடன் விஜயீன் குஷி படம் ரிலீஸாகிறது.

Sep 25, 2025

பிரதமர் மோடி யின் வாழ்க்கை "மா வந்தே". பிரதமர் மோடி வேடம் உன்னி முகுந்தன் பெருமிதம்

பிரதமர் மோடியின் வாழ்க்கை "மா வந்தே" என்ற பெயரில் சினிமாவாகிறது. கிராசாந்தி  குமார் இயக்க ,மோடியின் வேடத்தில் உன்னி முகுந்தன் நடிக்கிறார். மோடி யின் சிறுவயது முதல் தேசத்தின் தலைவராக உயர்ந்தது வரை இப் படம் பேசப் போகிறது. குறிப்பாக மோடியின் தாயார் ஹீராபென் சம் பந்தப்பட்ட ஆழமான பந்தத்தை இப்படம் வெளிப்படுத்த உள்ளது. பான் இந்தியா அளவில் படத்தை வெளியிட உள்ளனர்.பிரதமர் நரேந்திர மோடியின் வேடத்தில் உன்னி முகுந்தன் கூறுகையில், "இதை பெருமையாகவும், கவுரவமாகவும் கருதுகிறேன். நான் ஆமதாபாத்தில் பிறந்து வளர்ந்தவன். என் குழந்தை பருவத்தில் அப்போது குஜராத்தின் முதல்வராக மோடி இருந்தார்.அது முதலே அவர் மீது எனக்கு ஈர்ப்பு உண்டு. தேசத்திற்கான தலைவனாக அவர் எப்படி உருவானார். தாய் உடனான அவரின் பாசப்பிணைப்பு இந்த படத்தில் ஹைலைட்டாக இருக்கும்" என்றார்.

Sep 25, 2025

தாய்மொழியான கன்னடத்தில் நடிக்கும் வர்ஷா பொல்லம்மா.

முதன் முறையாக கன்னடத்தில் பி.சி சேகர் இயக்கும் 'மஹான்' என்ற படத்தில்நாயகியாகநடிக்கஒப்பந்தம் ஆகியுள்ளார். 10 ஆண்டு சினிமா பயணத்தில் தன் சொந்த மொழியில் இப்போதுதான் அறி முகமாவது மகிழ்ச்சி என வர்ஷா தெரிவித்துள்ளார். தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் நடித்து வந்த வர்ஷா பொல்லம்மா தனது தாய்மொழியான கன்னடத்தில் இதுவரை நடித்ததில்லை.

Sep 25, 2025

'மதராஸி' ரூ.100 கோடி வசூலைக் கடந்தது.

சிவகார்த் திகேயன், ருக்மணி வசந்த் நடிப் பில்  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத் தில் செப்., 5ல் வெளி யான படம் 'மதராஸி'. கலவையான விமர்சனங்கள் வந்தபோதிலும் இப்படம் தற்போது ரூ.100 கோடி வசூலைக் கடந்துள்ளது. டாக்டர், டான், அமரன் படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேய னுக்கு 4வது ரூ.100 கோடி படமாக மதராஸி அமைந்துள்ளது..

Sep 18, 2025

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 2040ல் நடக்கும் 'எல்ஐ கே ' படக் கதை .

 பிரதீப் ரங்கநாதன், எஸ். ஜே. சூர்யா நடித்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'லவ் இன்சூரன்ஸ் சும்பெனி (சுருக்கமாக எல்ஐகே) படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 2040 காலகட்டத்தில் நடக்கும் காதல் கதை. காதலுக்கே இன்சூரன்ஸ் கம்பெனி இருக்கும் ஒரு கால கட்டத்தில், ஒருவன் தன் காதலை காப்பாற்ற என்ன செய்கிறான் என்பது படத்தின் ஒருவரிக் கதை. புதுமையான விஷூவல், அனிருத்தின் பழைய ஆல்பம் பாடலான 'எனக்கென யாரும் இல்லையே' ரசிக்க வைத்துள்ளது.

1 2 ... 37 38 39 40 41 42 43 ... 90 91

AD's



More News