சமீபத்தில் தக் லைப் படம் மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி தோல்வி அடைந்தது. எனது அடுத்தபடம் இளம் நடிகர்களை வைத்து காதல் கதையில் உருவாகும் என மணிரத்னம் கூறி வந்தார். இப்போது இந்த படத்தில் நாயகனாக விக்ரம் மகன் துருவ், நாயகியாக ருக்மணி வசந்த் நடிக்க நவம்பரில் படப்பிடிப்பை துவங்க உள்ளனர்.
வெறும் ரூ.6 கோடி பட்ஜெட்டில் உருவாகி 100 கோடி வசூலித்தது. ஹாரர் கலந்த காமெடி கன்னட படமான இதனை தமிழில் ரீமேக் செய்ய முடிவெடுத்துள்ளனர். கன்னடத்தில் இயக்குனரும், நடிகருமான ராஜ் பி ஷெட்டி நடித்து, ஜேபி துமினாடு இயக்கிய படம் 'சூப்ரம் சோ'. இதில் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறது.
கவின், பிரீத்தி அஸ்ராணி நடித்துள்ள, நடன இயக்குனர் சதீஷ் கிருஷ்ணன் இயக்கி உள்ள முதல் படம் 'கிஸ்'. காதல் கதையில் உருவாகி உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில் செப்., 19ல் ரிலீஸ் செய்வதாக அறிவித்துள்ளனர்.
நடிகர்கள் சோஹம் ஷா, நுஷ்ரத் பருச்சா, நோரா பதேஹி, ஓம்கார் கபூர் உள்ளிட்டோர் நடித்துள்ள ஜி. அசோக் இயக்கத்தில் படம் 'உப் யே சியாபா'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள் ளார். இப்படத்தில் எந்தவொரு வசனமும் இல்லையாம். படம் பற்றி ரஹ்மான் கூறுகையில், "இசையே இப்படக் கதையின் ஒரு பகுதி. புதிய பாணிகளை பரிசோதிப்பதை ரசித்தேன். நகைச்சுவை, திரில்லர் வகை படமாக இது இருந்தது " என்றார்.
திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்தமைக் காகவும். சிம்பொனி இசைக்காகவும் இசையமைப்பாளர் இளைய ராஜா அவருக்கு பாராட்டு விழா ஜூன் 2ல் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது அந்த விழா தள்ளி வைக்கப்பட்டு. செப்., 13ல் சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கிறது. இதில் தமிழ் சினிமாவை தாண்டி இந்திய அளவில் உள்ள பிரபல நட்சத்திரங்களும் பங்கேற்க உள்ளனர்.
இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட காதல் நகைச்சுவைப் படங்களில் ஒன்றான, சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் ஜான்வி கபூர் நடித்த பரம் சுந்தரி, ஆகஸ்ட்29 வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. துஷார் ஜலோட்டா இயக்கிய இந்தப் படம், சீரான தொடக்கத்தைக் கொண்டிருந்தது மற்றும் பாக்ஸ் ஆபிஸில் தொழில் கண்காணிப்பாளர் சக்னில்க் கருத்துப்படி, பரம் சுந்தரி முதல் நாளில் ரூ.7.25 கோடி வசூலித்து, நல்ல தொடக்கத்தை அளித்தது. சனிக்கிழமை பாக்ஸ் ஆபிஸ் வசூல் கணிசமாக மேம்பட்டது, படம் ரூ.9.25 கோடி வசூலித்தது, ஞாயிற்றுக்கிழமையும் இந்த உயர்வு தொடர்ந்தது, ரூ.10.45 கோடியை ஈட்டியது, இது இதுவரையிலான ஒரே நாளில் அதன் சிறந்த வசூலைக் குறிக்கிறது.இந்த வார இறுதி வசூல், பரம் சுந்தரியின் மொத்த உள்நாட்டு பாக்ஸ் ஆபிஸ் வசூலை அதன் முதல் வார இறுதிக்குப் பிறகு ரூ.26.75 கோடியாகக் கொண்டு வந்ததுபரம் சுந்தரி திரைப்படம் ஒட்டுமொத்தமாக20.71 சதவீத ஹிந்தி திரைப்பட ஆக்கிரமிப்பை பதிவு செய்தது. மாலை காட்சிகள் சிறப்பாக செயல்பட்டன, கிட்டத்தட்ட30 சதவீத திரையரங்க இருக்கைகள் நிரம்பியிருந்தன, காலை காட்சிகள் சுமார்10 சதவீதம் மட்டுமே நிரம்பியிருந்தன. இரவு காட்சிகள் சற்று குறைந்து18.39 சதவீத ஆக்கிரமிப்பை பதிவு செய்தன.. சென்னை, ஹைதராபாத் மற்றும் ஜெய்ப்பூர் போன்ற நகரங்களிலும் படத்திற்கு நல்ல பார்வையாளர்கள் வருகை பதிவாகியுள்ளது.பரம் சுந்தரி என்பது ஒரு பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த கவலையற்ற டெல்லி சிறுவன் பரம்(சித்தார்த் மல்ஹோத்ரா) பற்றிய ஒரு படம், அவர் தனது தந்தையின் பணத்தை புதிய யுக தொடக்க நிறுவனங்களில் முதலீடு செய்கிறார். 'சோல்மேட்ஸ்' என்ற AI- இயங்கும் திருமணப் பொருத்த செயலியை முயற்சிக்கும்போது, அவர் தனது மாமாவுடன் தனது மூதாதையர் இல்லத்தை நடத்தும் கேரளாவைச் சேர்ந்த தென்னிந்தியப் பெண்ணான சுந்தரி(ஜான்வி கபூர்) உடன் ஜோடி சேருகிறார்.இந்தப் படம் பரமின் நவீன, நகரமயமாக்கப்பட்ட வாழ்க்கை முறைக்கும் சுந்தரியின் வேரூன்றிய, பாரம்பரியம் நிறைந்த உலகத்திற்கும் இடையிலான மோதலைக் காட்டுகிறது. பரம் சுந்தரி இந்த ஆண்டின் மிகப்பெரிய காதல் பொழுதுபோக்கு படமாக விளம்பரப்படுத்தப்பட்டாலும், பாக்ஸ் ஆபிஸில் கடுமையான போட்டியை எதிர்கொண்டது.
சூரி நடிப்பது மட்டுமின்றி சொந்தமாக மதுரையில் அம்மன் உணவகம் என்ற பெயரில் அவர் ஹோட்டல் நடத்துகிறார். இந்நிலையில் சூரி புதிதாக ஸ்வீட்ஸ் கடையை திறந்து இருக்கிறார். சூரி மற்றும் அவருடன் பிறந்த TWIN சகோதரர் லக்ஷ்மணன் இருவரும் விநாயகர் சதுர்த்தி மற்றும் பிறந்தநாள் என இரண்டும் ஒரே நாளில் வந்த நிலையில் புது தொழிலை அந்த நாளில் தொடங்கி இருக்கின்றனர். .
இயக்குனர் சிதம்பரம் கடந்தாண்டு வெளியான 'மஞ்சும்மல் பாய்ஸ்' என்ற வெற்றி படத்தை தந்தவர்.. அடுத்த படம் பற்றிய எந்த தகவலும் இல்லை. இப்போது, அம்மா, மகன் சம்பந்தப்பட்ட கதையாக 'பாலன்' எனும் படத்தை ஜீத்து மாதவன் இதற்கு கதை எழுத ,தமிழ், மலையாளத்தில் இயக்குகிறார்.
விஷால், துஷாரா விஜயன், அஞ்சலி உள்ளிட்டோர் நடிக்கும் ரவி அரசு இயக்கத்தில் படம் 'மகுடம் ". விஷாலின் 35வது படமான இதில், அவர் மூன்று விதமான தோற்றங்களில் நடித்துள்ளார். அவற்றின் முதல் பார்வையை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு படக்குழு வெளியிட்டுள்ளது. ஒன்றில் வயதான தோற்றத்திலும், இரண்டில் இளமையான தோற்றத்தில் விஷால்..
புதிய படத்துக்கு 'ஒர்க்கர்' என தலைப்பு வைக்கப்பட்டு ஜெய், யோகி பாபு நடிக்கும் 'உண்மை உணர்வுகள், சுவாரஸ்யமான கதையில் இது உருவாகிறது' என்கிறார் இயக்குனர் வினய் கிருஷ்ணா. இந்த படத்தின் மூலம் கன்னட நடிகை ரீஷ்மா நனையா ஹீரோயினாக அறிமுகம் ஆகி, ஜிப்ரான் இசையமைக்கிறார்.