துபாயில் நடந்த சைமா விருது விழாவில் பேசிய கமல், "நாங்கள் இணைந்து ரொம்ப நாள் ஆகிவிட்டது ஆளுக்கு ஒரு பிஸ்கெட் சாப்பிட ஆசைப்பட்டோம், தனியாக படம் செய்து அதை சாப்பிட்டோம். இப்ப மீண்டும் அரை பிஸ்கட் போதும்ங்கிற நிலைக்கு வந்து விட்டோம். எப்போதோ நடக்க வேண்டி யது. இப்போதாவது நடக்குதே" என்றார். ரஜினியும், கமலும் இணைந்து பல படங்களில் நடித்தனர்
40 வருடங்களுக்கு மேலாக மலையாளம், தமிழ், ஹிந்தி மொழிகளில் இயக்குனராக வலம் வரும் பிரியதர்ஷன், தற்போது ஹிந்தியில் அக் ஷய் குமார், சைப் அலிகானை வைத்து 'ஹைவான்' படத்தை இயக்குகிறார். இது அவர் இயக்கும் 99வது படம். தனது 100வது படத்துடன் சினிமாவில் ஓய்வு பெறுவதாக வெளியான செய்தி பற்றி பேசிய பிரியதர்ஷன், “ஓய்வு பெறுவதாக நான் எப்போதுமே சொன்னதில்லை. என் உடல் ஒத்துழைக்கும் வரை ஓடிக் கொண்டே இருப்பேன், 100வது படத்தில் மோகன்லால் நடிப்பது மட்டும் இப்போதைக்கு உறுதி" என்றார்
சந்தனமரக் கடத்தல்காரனாக பிரித்விராஜ் நடித்துள்ள விலாயத் புத்தா' பட டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இதில் உள்ள காட்சிகள், 'புஷ்பா' படத்தை ஞாபகப்படுத்துவதாக இருந்தாலும், டீசரில் ஒரு போலீஸ் அதிகாரி, 'நீ என்ன புஷ்பாவா?' எனக் கேட்க, பிரித்விராஜ், 'ஐயோ சார் அவர் இன்டர் நேஷனல்,நான் வெறும் லோக்கல்' என பதில் சொல்லும் காட்சி இடம் பெற்றது .
நடிகர் தனுஷ் இயக்கி, நடித்துள்ள படம் 'இட்லி கடை'. நித்யா மேனன், ராஜ்கிரண் உள் ளிட்டோர் நடிகர் தனுஷ் இயக்கி, நடித்துள்ள, படம் வெளியீட்டிற்கு தயாராகிறது. . அக்., 1ல் படம் ரிலீஸாகும் சூழலில் செப்., 14ல் சென்னை, நேரு உள்விளையாட்டு அரங் கில் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாய் நடந்தது.
ரஜினி, மஞ்சு வாரியர், ராணா நடிப்பில் த.செ., ஞானவேல் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான படம் 'வேட்டையன்'. பெரிய வர வேற்பையும், வசூலையும் பெறவில்லை.தற்போது இந்தப் படம் 'புல்லட்ஸ் அன்ட்ஸ் ஜஸ்டிஸ்' என்ற பெயரில் ஜப்பானில் வெளியாகி வரவேற்பு உடன் ஓடிக் கொண்டிருக்கிறது
கர்நாடக அரசு ஆண்டு தோறும் கலை, இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு 'கர்நாடக ரத்னா' விருது வழங்கி வருகிறது. 2025ம் ஆண் டுக்கான விருது அறிவிக்கப்பட்டுள் ளது. இதில் கலை உலகைச் சேர்ந்த மறைந்த நடிகை சரோஜாதேவி, நடிகர் விஷ்ணுவர்தன் ஆகியோருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் 90வது பிறந்தநாளை கொண்டாடிய ,பழம் பெரும் நடிகை எம். என்.ராஜம் 200 படங்கள் வரை நடித்த அவருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செப்., 21ல் சென்னையில் நடக்கும் நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் இவ்விருது வழங்கப் பட இருக்கிறது.
கர்நாடகாவில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு இசையமைப்பாளர் இளைய ராஜா, மகன் கார்த்திக் ராஜா ,பேரன் யத்தீஸ்வர் உடன் சென்றார். அங்கு மூகாம்பிகைக்கு வைர கிரீடம், தங்க நெக்லஸ் ,வீரபத்திர சுவாமிக்கு தங்க வாளை காணிக்கையாக வழங்கினார். இவற்றின் மதிப்பு பல கோடி. சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தெய்வங்களுக்கு ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டன.
மும்பையில் உள்ள தங்களது 17.5 கோடி மதிப்பிலான அம்பார்ட்மெண்டை நடிகர் மாதவன் - சரிதா தம்பதி, வாடகைக்கு விட்டு, மாதம் ரூ. 6.50 லட்சம் வாடகை பெறுகின்றனர் - 2 ஆண்டுகளில் அவர்கள் ரூ.1.6 கோடி வருவாய் ஈட்டியுள்ளனர் - மாதவன் மும்பையில் இருந்து துபாய்க்கு இடம்பெயர்ந்ததுள்ளனர்.
பாபி தியோல், சான்யா மல்கோத்ரா நடித்து அனுராக் காஷ்யப் இயக்கத்தில் ஹிந்தி படம் 'பாந்தர்' (மங்கி இன் ஏ கேஜ்). உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ள இப்படம் புகழ்பெற்ற கனடாவின், டொராண்டோ திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகி உள்ளது. செப்., 4 முதல் 14 வரை நடக்கும் இந்த விழாவில் உலகம் முழுக்க இருந்து பல்வேறு திரைக்கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.