25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


வெள்ளித்திரை

May 21, 2025

ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற 'தக் லைப் ‘டிரைலர்'

கமல், சிம்பு, திரிஷா நடித்துள்ள, மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர். இசையமைப்பில் உருவான'தக்லைப்'. படம் ஜூன் 5ல் ரிலீசாகிறது. இதன் டிரைலர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் வெளியிட்டனர். 24 மணிநேரத்தில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற டிரைலர் தமிழில் 18.8 மில்லியன் பார்வைகளும், ஹிந்தியில் 3 மில்லியன் பார்வைகளும், தெலுங்கில் 3.8 பார்வைகளும் பெற்றுள்ளது. கமல் இதற்கு முன் நடித்த 'விக்ரம்' படத்தின் டிரைலர் 24 மணிநேரத்தில் 12 மில்லியன் பார்வைகளை பெற்றிருந்த நிலையில் அதனை தக்லைப் முறியடித்துள்ளது.

May 21, 2025

'டூரிஸ்ட் பேமிலி' மே 24ல் ஜப்பானில் ரிலீஸ்.

சசிகுமார், சிம்ரன் இணைந்து நடித்து அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் வெளியானபடம் 'டூரிஸ்ட் பேமிலி'. பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று 16 நாட்களில் 63 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளது. இப்படத்தை மே 24ல் ஜப்பான் மொழியில் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர். சில மாதங்களுக்கு முன் விஜய் சேதுபதி நடித்த 'மகாராஜா' படம் ஜப்பான் மொழியில் ரிலீசாகி வரவேற்பை பெற்றதுபோல், 'டூரிஸ்ட் பேமிலி' படமும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கின்றனர்.

May 21, 2025

மே 23ல் 7 ரிலீஸ் ஆகும் படங்கள்

மே 23ல் 7 படங்கள் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. கோடை விடுமுறை முடிய இன்னும் பத்து நாட்களே உள்ளது. விஜய் சேதுபதியின் 'ஏஸ்', சண்முகபாண்டியனின் 'படை தலைவன் 'ஆகியவற்றுடன் "அக மொழி விழிகள், ஆகக் கடவன, மையல்,திருப்பூர் குருவி, ஸ்கூல்' உள்ளிட்ட படங்கள் ரிலீஸாகின்றன.

May 21, 2025

'அஅஅ' படத்தின் முதல் ஹீரோயின் மிருணாள் தாகூர்

மூன்று கதாநாயகிகள் நடிக்க உள்ளதாக அல்லு அர்ஜுன், அட்லி இணைய உள்ள பிரமாண்ட படத்தில் ஏற்கனவே தகவல் வெளி யானது. இதற்காக பாலிவுட்டின் முன்னணி ஹீரோயின்கள் சிலரிடம் பேச்சு நடந்த நிலையில், கால்ஷீட் பிரச்னையால் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் முதல் நாயகியாக 'சீதா ராமம், ஹாய் நானா' படத் தில் நடித்த மிருணாள் தாகூரை ஒப்பந்தம் செய்துள்ளார்களாம். 2வது நாயகியாக விரைவில் ஜான்வி கபூர் ஒப்பந்தம் செய்ய இருக்கிறார்.

May 21, 2025

இயக்குனர் ஷங்கரின் மகளான  அதிதி  தெலுங்கில் நாயகியாக அறிமுகமாகிறார்.

தமிழில் விருமன், மாவீரன் போன்ற படங்களில்  இயக்குனர் ஷங்கரின் மகளான அதிதி நடித்தார். தற்போது தெலுங்கில் பெல்லம் கொண்ட ஸ்ரீனிவாஸ் ஜோடியாக பைரவம் என்ற படத்தில் நடித்து, அங்கு நாயகியாக அறிமுகமாகிறார். விஜய் கனகமெடலா இயக்க, மே 30ல் படம் ளிலீஸாகிறது. அதிதி கூறுகையில், "விருமன் படத்தை பார்த்து இப்பட இயக்குனர் விஜய் இந்த வேடத் திற்கு நான் சரியாக இருப்பேன் என வாய்ப்பு வழங்கினார். தெலுங்கில் நடிப்பது கஷ்டம் என நினைத்தேன். ஆனால் நடிக்கும்போது அப்படி தோன்றவில்லை. சின்ன வயதில் அப்பாவுடன் ராமோஜி ராவ் பிலிம் சிட்டிக்கு வந்துள்ளேன். ஆனால் என் படத்தின் படப்பிடிப்புக்கும் அங்கு வருவேன் என நினைத்து கூட பார்க்க வில்லை, கனவு போல் உள்ளது" என்றார்.

May 14, 2025

சூரியின் 'மாமன்' பட டிரைலர் வெளியானது 

 சூரி கதை யின் நாயகனாக நடித் துள்ள படம் ,பிரசாந்த் பாண்டியராஜ்  இயக்கத்தில் “மாமன்.” அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்ய லட்சுமி நடிக்க, ராஜ்கிரண், சுவாசிகா, பால சரவணன் உள்ளிட் டோர் நடித்துள்ளனர். மே 16ல் படம் வெளியாகும் நிலையில் டிரைலர் வெளியாகி உள்ளது. 3 நிமிடம் ஓடும் டிரைலரில் குடும்ப உறவுகளுக்குஇடையே நடக்கும்  மோதல்கள், பாசப் போராட்டம்ஆகியவற்றுடன் அக்கா மகன், தாய் மாமன் பந்தத்தை முதன்மையாக கொண்டு இப்படத்தை எடுத்துள்ளனர்.'மாமன்' படம் மே 16ல் ரிலீஸாகிறது. 'மாமன்' பட கதையை சூரி எழுதி யுள்ளார். இவர் கூறுகையில் "கதையை நான் எழுதியிருந்தாலும் எனது பெயர் வர வேண்டாம் என இயக்குந ரிடம் சொன்னேன். ஆனாலும் பெயரை போட்டு விட்டார். நான் இங்கு நிற்க என் குடும்பம் தான் காரணம். என் குடும்பம் தான் எனக்கு சாமி. இந்த கதை அங்கிருந்து தான் உருவானது. சின்ன பையனுக்கும், அவனது தாய் மாமனுக்கும் இடையேயான உறவே கதை. படத்தில் சின்ன பையனாக நடித்தவர் இயக்குனரின் மகன் என்றார்.

May 14, 2025

இயக்குனர் ராஜ்மோகன் உண்மைக் கதையில் யோகி பாபு.

இயக்குனர் லெனின் பாரதியிடம் இணை இயக்குன ராக இருந்தவர் ராஜ்மோகன். இவர் யோகிபாபுவை வைத்துபுதிய படம் இயக்குகிறார். அனாமிகா மகி நாயகியாக அறிமுகமாகிறார். படம் பற்றி ராஜ்மோகன்கூறுகையில் . உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு திரைக்கதை உருவாக்கப்பட்டு "இரும் புக்கடை தொழிலாளியான நடுத்தர வர்க்கத்து இளைஞனின் வாழ்வும், அவனது காதலும் தான் இப்படம்..

May 14, 2025

சினிமாவுக்கு வரும் என்.டி.ஆர். கொள்ளுப்பேரன்.

தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்த என்.டி.ஆரின் மகன்களான பாலகிருஷ்ணா (பாலய்யா), ஹரிகிருஷ்ணா ஆகியோரும் முன்னணி நடிகர்களாக திகழ்கிறார்கள். இதில் ஹரிகிருஷ்ணாவின் மகன்களான ஜானகிராம், ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோரும் ஹீரோக்களாக நடித்து வருகிறார்கள். இந்தநிலையில் ஜானகிராமின் மகன் தாரக ராமராவும் சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்துள்ளார். ஒய்.வி.எஸ்.சவுத்ரி தயாரித்து, இயக்கும் புதிய படத்தில் அவர் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக குச்சிப்புடி நடன கலைஞர் வீணா ராவ் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பை ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவின் மனைவி புவனேஸ்வரி 'கிளாப்' அடித்து தொடங்கி வைத்தார்.என்.டி.ஆரின் மகளுமான புரந்தரேசுவரி கூறும்போது, சினிமா உள்ளவரை என். டி.ஆரின் புகழ் மறையாது. தற்போது அவரது குடும்பத்தில் இருந்து 4-ம் தலைமுறையாகவும் நடிக்க வந்துவிட்டார். என்.டி.ஆரின் ரசிகர்கள் அவரை பார்த்துகொள்வார்கள்" என்றார்.

May 14, 2025

" Single " படத்தின் வசூல் விவரம்.

 நடிகை இவானா “லவ் டுடே “திரைப்படத்தின்மூலம்பிரபலமானார்.இப்படத்தைகார்த்திக்ராஜுஇயக்கஸ்ரீவிஷ்ணுகதாநாயகனாகநடித்துள்ளார்.பிரதீப்ரங்கநாதன்இயக்கத்தில்வெளியானலவ்டுடேதிரைப்படத்தின்மூலம்பிரபலமானார்நடிகைஇவானா. தெலுங்குதிரையுலகில்காலடிஎடுத்துவைத்து,.“சிங்கிள்“என்றதெலுங்குதிரைப்படத்தில்நடித்துள்ளார்.இப்படத்தைகார்த்திக்ராஜுஇயக்கஸ்ரீவிஷ்ணுகதாநாயகனாகநடித்துள்ளார். திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைபெற்றுவருகிறது.இவர்களுடன்  முன்னணி கதாப்பாத்திரத்தில் கேடிகா ஷர்மா மற்றும் வென்னிலாகிஷோர்  நடித்துள்ளனர்.திரைப்படம்  முதல் நாள் மட்டும் 5.1 கோடிரூபாய்வசூலித்துள்ளது.திரைப்படம்வெளியான3நாட்களில்16.30 கோடிரூபாய்வசூலித்துள்ளது.விரைவில்இப்படம்உலகளவில் 20 கோடிரூபாய்இலக்கைஅடையும்எனஎதிர்ப்பார்க்கப்படுகிறது.

May 14, 2025

3 காமெடி ஹீரோக்களின் படங்கள் ஒரே நாளில் மே 16ல் ரிலீசாகிறது.

காமெடி நடிகராக இருந்து 'விடுதலை' படம் மூலம் ஹீரோவான சூரி நடித்துள்ள 'மாமன்' படமும் அதே நாளில் ரிலீசாவதாக அறி விக்கப்பட்டது. தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி யன்களாக இருந்து அதன்பிறகு ஹீரோ வாகி விட்ட சந்தானம் நடித்துள்ள 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படம் மே 16ல் ரிலீசாகிறது.  இந்த நிலையில், காமெடி நடிகர் யோகிபாபு நாயகனாக நடித்துள்ள 'ஜோரா கைய தட்டுங்க' என்ற காமெடி படமும் மே 16ல் ரிலீசாகும் என அறிவித்துள்ளனர். காமெடி நடிகர்களாக இருந்தவர்கள் ஹீரோ வாக நடித்துள்ள 3 படங்களும் ஒரே நாளில் வெளியாகிறது.

1 2 ... 50 51 52 53 54 55 56 ... 90 91

AD's



More News