25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >>


வெள்ளித்திரை

Apr 12, 2023

ஆண்டவன் மேல் பாரத்தை போட்ட சூரி இப்போது பல மடங்கு சம்பாதித்து வருகிறார்.

சூரி சினிமாவுக்கு நடிக்க வந்த புதிதில் பல அவமானங்களை சந்தித்துள்ளார். அதிலிருந்து படிப்படியாக வளர்ந்து காமெடி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றார். பெரும்பாலும் சிவகார்த்திகேயன், சூரி காம்போவில் வெளியாகும் படங்களுக்கு மக்கள் நல்ல ஆதரவு கொடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து சூரி ஆலமரமாய் தற்போது வளர்ந்து நிற்கிறார்.மதுரையில் சொந்தமாக ஹோட்டல், சென்னையில் தனக்கு தேவையான அளவு சொத்து என, பல வசதி வாய்ப்புடன் வாழ்ந்து வருகிறார். சமீபத்தில் கதாநாயகனாக நடித்து, சூரி நடிப்பில் வெளியான விடுதலை படத்திற்கு ,ரசிகர்கள் ஏகபோக வரவேற்பு கொடுத்து வருகிறார்கள். அதுமட்டுமின்றி அவருடைய நடிப்புக்கு, சூப்பர் ஸ்டார் முதல் பல பிரபலங்கள், பாராட்டுகளை கூறிவருகிறார்கள். விடுதலை படத்தின் இரண்டாம் பாகமும் உருவாகி உள்ளது.கடைசியாக ஆண்டவன் மேல் பாரத்தை போட்ட சூரி இப்போது பல மடங்கு சம்பாதித்து வருகிறார். பார்க்கும் இடமெல்லாம் சொத்துக்களை வாங்கி குவித்து வருகிறாராம். நடிக்க வந்த புதிதில் பல அவமானங்களை சந்தித்து,ஒரு கதவை மூடினால் கண்டிப்பாக இன்னொரு கதவு திறக்கும் என்பது போல அவமானப்பட்டாலும் தன்னுடைய கடின உழைப்பால் சூரி முன்னேறி உள்ளார்.

Mar 31, 2023

விடுதலை திரைப்படம்

விடுதலை திரைப்படம்  உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் விமர்சகர்களின் பாராட்டுக்களை குவித்து வருகிறது.வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடுதலை. இந்தப் படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடித்துள்ளார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. விஜய் சேதுபதி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜிவி பிரகாஷின் தங்கை பாவானிஸ்ரீயும் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.விஜய் சேதுபதி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜிவி பிரகாஷின் தங்கை பாவானிஸ்ரீயும் ,இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தை ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்துள்ளார். திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ள. இப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் படம் குறித்த தங்களின் விமர்சனங்களை சமூக வலைதள பக்கங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.  விடுதலை முதல் பாதி- காவியத் திரைப்படத் தரத்தை மீண்டும் வெற்றிமாறன் வெளிப்படுத்தியிருக்கிறார். ரயில் விபத்தின் பின்விளைவுகளை உள்ளடக்கிய முதல் பதினைந்து நிமிடங்கள் இந்திய சினிமா இதுவரை கண்டிராத ஒன்று! பிரம்மாண்டம் என்பது பளபளக்கும் செட் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் மட்டுமல்ல, திரையில் பாதிக்கப்பட்டவர்களின் ஆழமான உணர்ச்சிகள், கஷ்டங்கள், கொடூரமான வன்முறை மற்றும் வலி ஆகியவற்றை நம்பவைத்து வெளிப்படுத்தும் விதம் உண்மையிலேயே விதிவிலக்கானது! அரசியல் ரீதியாக அவர் எப்போதும் சமநிலையானவர்! அதை விரும்புகிறேன்.. என சூப்பர் ஈமோஜியை குறிப்பிட்டுள்ளார்.விடுதலை முதல் பாதி ரயில் விபத்துக்குப் பிறகு இளையராஜாவின் பின்னணி இசை உலகத்தரம் வாய்ந்தது. சூரி மனிதாபிமான காவலர் சிறந்தவர். காவல்துறை, அரசு அமைப்பு மற்றும் அரசியல் எவ்வாறு செயல்படுகிறது என்பதை மீண்டும் பாராட்டுக்கள், அவரது கேமரா கோணங்களும் பிரேம்களும் சூப்பர் என பாராட்டியுள்ளார். விடுதலை படம் விமர்சகர்களின் பாராட்டு மழையில் நனைந்து வருவது படக்குழுவினரையும் ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.சூரி செம்ம பொருத்தம்.. அவரது அப்பாவித்தனம் மிகவும் இயல்பாக இருந்தது. நேர்மையான காவலராக பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார் என குறிப்பிட்டுள்ளார். . இதுவரை நேர்த்தியாகவும் சுத்தமாகவும் சொல்லப்பட்டிருக்கிறது என பதிவிட்டுள்ளார். மேலும் இது கதையின் நாயகர்களின் காலம்என்றும் மனதையும் காதையும் இம்சிக்காத தேனாய் பின்னணி இசை! என்றும் விடுதலை படத்தை குறிப்பிட்டுள்ளார்.விடுதலை முதல் பாதி என ஒரு ஸ்டார் பதிவிட்டுள்ளார். மேலும் வெற்றிமாறன் ஒருபோதும் இம்ப்ரஸ் செய்ய தவறுவதில்லை. பவானி ஸ்ரீ மற்றும் நடிகர்கள் சிறப்பாக நடித்துள்ளார்கள். லொகேஷன் மற்றும் உருவாக்கம் டாப். அறிமுகம் ஒரே ஷாட்.மெதுவான விவரிப்பு ஆனால் முற்றிலும் ஈர்க்கக்கூடியதாக உள்ளது. விஜய் சேதுபதிக்கான பில்ட்அப்ஸ் சூப்பர்.இரண்டாம் பாதியில், கதை இப்போது தொடங்குகிறது சூப்பர் என குறிப்பிட்டுள்ளார்.

Mar 28, 2023

,ஈழத்தமிழர்களின் நலனுக்காக திவ்யா சத்யராஜ்

இந்தியஅளவில்பிரபலமானநடிகர்களில்ஒருவர்சத்யராஜ்.இவருக்குசிபிராஜ்,திவ்யாசத்யராஜ்எனஇருபிள்ளைகள்உள்ளனர்.இந்நிலையில்,நடிகர்சத்யராஜ்தனதுமகள்குறித்துபெருமிதமாகபேசியுள்ளார்.அவர்கூறியதாவதுபசுமைப்பள்ளி,பசுமைசமுதாயம்திட்டத்தில்,ஈழத்தமிழர்களின் நலனுக்காக  ஈழத்து செல்வா பேத்தியுடன் என் மகள்  திவ்யா சத்யராஜ் இணைந்துசெயல்படுவார் என்று கூறியுள்ளார். 

Mar 23, 2023

95-வது ஆஸ்கர் விருதினை வென்ற சிறந்த ஆவணக் குறும் படம்."THE ELEPHANT WHISPERERS" .

தாயை இழந்த இரண்டு யானைக்கன்றுகளைப் பெற்றோரைப்போலப் பராமரித்து வளர்த்த தென்னிந்தியாவின் முதல் தம்பதியைப் பற்றிய உண்மைச் சம்பவம்தான், இயக்குநர் கார்த்திகி கான்சால்வஸ் இயக்கத்தில் நெட்ப்ளிக்ஸில் வெளியாகியுள்ள "The Elephant Whisperers' ஆவணப்படம். இந்தப் படம் இன்று நடைபெற்ற 95-வது ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த ஆவணக் குறும் படத்துக்கான விருதினை வென்றிருக்கிறது. காட்டின்பேரழகைப்படம்பிடிக்கும்ட்ரோன்காட்சிகள்,நம்கண்களைஅங்குமிங்கும்சுழலவிடாமல்கட்டிப்போட்டுவிடுகின்றன.பொம்மன் செல்லமாக அழைத்ததும் ரகு தனது குடிசையிலிருந்து வந்து குளிப்பது, அவரோடு ஃபுட்பால் விளையாடுவது, மற்றொரு யானை புல் சாப்பிடுவதைப் பார்த்து அப்படியே தானும் சாப்பிடுவது, ஸ்ட்ரா போட்டு ஜூஸ் குடிப்பது என ரகுவின் குறும்புகளைச் சிறப்பாகக் காட்சிப்படுத்தியிருக்கின்றனர். பெற்ற பிள்ளையைப்போல் வளர்த்துவிட்டு ரகுவை முகாமில் விடவேண்டும் என்ற சூழல் வரும்போது, இதயத்தைக் கனக்கவைத்துவிடுகிறது அந்த காட்சி, அதுவும், ரகு பிரியும்போது அம்முக்குட்டியின் கதறல்... ரகு திரும்ப ஓடிவருவது எல்லாமே. சகோதரத்துவ சென்டிமெண்ட காட்டின் பேரழகையும் மலையில் தேன் எடுக்கும் காட்சியையும் அப்படியே டெம்பிடித்திருக்கிறார்கள்தென்னிந்தியாவிலேயே, தாயை இழந்த இரண்டு குட்டி யானைகளை வளர்க்கும் தம்பதி என்ற பெருமையை அடைந்த பொம்மன் - பெல்லியின் பாசம் நிறைந்த வாழ்வியல், விலங்குகள் மீதான நேசிப்பை அதிகப்படுத்துகிறது.

Mar 19, 2023

ஆஸ்கார் விருது

 உலகில்  உள்ள அனைத்து திரைப்பட கலைஞர்களுக்கு மிகப் பெரிய கெளரமாகவும், கனவாகவும். ஆஸ்கார் விருது உள்ளது. உலகில் உள்ள கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் இவ்விருது வழங்கப்படுகிறது. ஆஸ்கார் விருது என்று அழைக்கப்பட பல காரணங்கள் உண்டு. இந்த விருது முதன் முதலில் லாஸ் ஏஞ்சலின் ஜார்ஜ் ஸ்டேன்லி என்பவரால் முதன் முதலில் வழங்கப்பட்டது. 1929 முதல் ஆரம்பிக்கப்பட்ட இவ்விருதுகள் ,ஆரம்ப காலத்தில் தங்க முலாம் பூசப்பட்ட வெண்கலத்தால் செய்யப்பட்டது. 2 ஆம் உலகப்போரின் போது உலோகத் தட்டுப்பாட்டின் காரணமாக வர்ணம் பூசப்பட்ட உலோகத்தால் செய்யப்பட்டது. பின்னர் விருதுகளின் உருவத்தை மாற்றியமைத்து, மூன்றரை கிலோ எடையுள்ளதாக, 2016 ஆம் ஆண்டு முதல் வெண்கலத்தால் செய்யப்பட்டு 24 காரட் தங்கத்தால் முலாம் பூசப்பட்டு, நியூயார்க் நகரில் தயாரிக்கப்படுகிறது. வருடத்திற்கு 60 விருதுகள் தயாரிக்கப்படுகிறது. ஒரு ஆஸ்கார் விருது தயாரிக்க சுமார் 6 மாத காலம் ஆவதாக கூறுகின்றனர்.

Mar 15, 2023

அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் கும்பாபிஷேகத்தை அடுத்து சினிமா பிரபலங்கள் வருகை

திண்டுக்கல் மாவட்டம் பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில்16 ஆண்டுகளுக்குப் பிறகு ஜனவரி27ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தைப்பூசத் திருவிழா10 நாள்களுக்கு வெகு விமர்சையாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து நடைபெறும் தைப்பூச விழா என்பதால் பக்தர்களின் வருகை வழக்கத்துக்கும் மாறாக அதிகமாக இருந்தது. தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான திருக்கல்யாணம், தேரோட்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தமிழகம் மட்டுமில்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் கோயில் விழாவுக்குத் தேவையான நன்கொடை வழங்கி கும்பாபிஷேகம் மற்றும் தைப்பூச விழாவில்கலந்துகொண்டனர். கும்பாபிஷேகத்தை அடுத்து சினிமா பிரபலங்கள் வருகை தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது.நடிகர்கள் சந்தானம், கெளதம் கார்த்திக், விதார்த், பாக்யராஜ், பூர்ணிமா, கூல் சுரேஷ், சமந்தா, மஞ்சிமா மோகன் உள்ளிட்ட பல தமிழ் சினிமா பிரபலங்கள் பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்துள்ளனர்.  மயோசிடிஸ் நோய் பாதிப்பில் இருந்து படிப்படியாக மீண்டு வரும் நடிகை சமந்தா,​பழநிக்கு வருகை தந்து படிப்பாதை வழியாக 600 படிகளில் சூடம் ஏற்றி மலைக்கோயில் வழிபாடு செய்தார். அவருடன்96 திரைப்பட இயக்குநர் பிரேம்குமார் மற்றும் சமந்தாவின் உறவினர்கள் வந்திருந்தனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த சம்ந்தா, உடல்நலக் குறைவால் பாதிக்கபட்டு, தற்போது கடவுளின் அருளோடும், மருத்துவர்களின் ஆலோசனைகளோடும் மீண்டு வந்ததாகவும் மேலும் முழுமையாக உடல் நலம் பெற வேண்டி வேண்டுதல்களை நிறைவேற்றுவதற்காகப் பழநிக்கு வந்து சாமி தரிசனம் செய்ததாகவும் தெரிவித்தார்.

Mar 12, 2023

போட்டிக்கு வந்த ஹீரோக்களால் ஆட்டம் கண்ட நடிகர் விஜய்

 கடந்த சில வருடங்களாகவே விஜய் நடிப்பில் வெளிவரும் படங்களுக்கு ஏகபோக வரவேற்பு கிடைத்து வருகிறது. சில வருடங்களாகவே விஜய் நடிப்பில் வெளிவரும் படங்களுக்கு வரவேற்பு கிடைத்து வருகிறது.தன் படங்கள் மூலம் கோடிக்கணக்கில் வசூல் வேட்டை நடந்தது.நமக்கு போட்டி யாரும் கிடையாது. நான்தான் நம்பர் ஒன் என்ற மிதப்பில் இருந்து வந்தார் நடிகர் விஜய்.அதனாலேயே அவருடைய படங்கள் வெளிநாட்டிலும் எக்கச்சக்கமாக பிசினஸ் ஆகி வருகிறது.இந்த நம்பிக்கை கொஞ்ச காலமாகவே ஆட்டம் கண்டுள்ளது.ரிட்டயர்மென்ட் ஆகிவிடுவார்கள் என்று நினைத்த உச்ச நட்சத்திரங்கள்கமல்,ரஜினிஎல்லாம் தற்போது போட்டிக்கு நாங்க ரெடி என்ற ரீதியில் களமிறங்கியுள்ளனர்.இதனால் கமல் மற்றும் ரஜினி ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர். அது மட்டுமல்லாமல் வாரிசு படத்துடன் மோதி தன் பவரை நிரூபித்த அஜித்தும் ஏகே62 மூலம் அடுத்த அதிரடிக்கு தயாராகி வருகிறார். அதேபோன்று சூர்யா, தனுஷ் போன்ற நடிகர்களும் தங்கள் கைவசம் வெயிட்டான திரைப்படங்களை வைத்திருக்கின்றனர்.எத்தனை போட்டி வந்தாலும் அவற்றையெல்லாம் அடித்து நொறுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான், அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க சம்மதித்தார். இதன் மூலம் உலக அளவில் ஹிட் கொடுக்க வேண்டும்.இப்படி அவர் ஒரு பிளான் போட்டு வைத்திருக்கும் நிலையில் போட்டிக்கு வந்துள்ள இந்த ஹீரோக்களால் அவர் கடும் யோசனையில் இருக்கிறாராம்..

Mar 01, 2023

பாகுபலி பிரபாஸின் 84 ஏக்கர் பண்ணை வீடு..

 இணையதளத்தில் தற்போது ட்ரெண்டாகி வரும் ஆடம்பர வாழ்க்கை வாழும் பாகுபலி நாயகனின் வீட்டு போட்டோக்கள்.தெலுங்கு நடிகரான  பிரபாஸ் ஆரம்பத்தில் எத்தனையோ வெற்றி திரைப்படங்களை கொடுத்திருந்தாலும், பாகுபலி திரைப்படம் தான் உலக அளவில்பிரபலம் அடைந்து,அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது பிரபலம் அடைந்தார். அவருக்கு தமிழ் உட்பட அனைத்து மொழியிலும் ரசிகர்கள் இருக்கின்றனர்.இவர் நடிப்பில் வெளிவந்த ராதே ஷ்யாம் எதிர்பார்த்தஅளவு வெற்றி பெறவில்லை. அதைதொடர்ந்து தற்போது ஆதி புருஷ்திரைப்படத்தில் இவர் நடித்து முடித்துள்ளார். ராமாயணத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும்இப்படத்தில் பிரபாஸ்ராமனாகநடித்திருக்கிறார்.அவர் சலார் உள்ளிட்டதிரைப்படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்நிலையில்இவரின் ஆடம்பரவாழ்க்கை பற்றியதகவல்கள் வெளிவந்துள்ளது..அரண்மனை போன்ற வீடு, நீச்சல் குளம், தோட்டம் என செல்வ செழிப்புடன் வாழ்ந்து வருகிறார். அதில் அவருடைய வீட்டின் மதிப்பு மட்டுமே60 கோடியை தாண்டுமாம். அது மட்டுமல்லாமல் உடற்பயிற்சி செய்யும் உபகரணங்களுக்காகவே இவர் இரண்டு கோடி வரை செலவழித்து இருக்கிறார்.84 ஏக்கர் பரப்பளவில் இவருக்கு ஒரு பண்ணை வீடும் இருக்கிறது. அரசியல்வாதிகள் உள்ளிட்ட பிரபலங்கள் வசிக்கும் ஏரியாவில் ,அவருக்கு மிகவும் பிடித்த மாதிரியாக தன்னுடைய பண்ணை வீட்டை உருவாக்கி இருக்கிறார்.இயற்கைஅழகுடன் இருக்கும்அந்த வீட்டில்தான் அவர் படப்பிடிப்பு இல்லாத சமயத்தில் தங்குவாராம்.

Feb 23, 2023

பல கோடிகளில் நடிகர் சூர்யா

சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர். ஆரம்ப காலகட்டத்தில் இவரின் நடிப்பை பலரும் விமர்சனம் செய்தாலும் அதன் பிறகு பல வித்தியாசமான கதைகளை நடித்து ரசிகர் கூட்டத்தை சம்பாரித்தார்.தற்போது இவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார் நடிகர் சூர்யாவின்  மொத்த சொத்து ரூ. 186 கோடி. இவர் படத்திற்கு ரூ. 20 முதல் 25 கோடிவரை சம்பளம் வாங்குகிறார். இவரின் ஆண்டு வருமானம் ரூ. 30 கோடி என கூறப்படுகிறது.நடிகர் சூர்யாவுக்கு சென்னை தியாகராய நகரில் பிரம்மாண்ட வீடு இருக்கிறது. 

Feb 21, 2023

ஹிந்தி படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி

எந்த வித சினிமா பின்னணியும் இல்லாமல் வந்து தனது நடிப்பு திறமையை மட்டுமே முதலீடாக வைத்து, எல்லோருக்கும் திறமையை நிரூபித்து தற்போது கோலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர்விஜய் சேதுபதி . தற்போது தென்னிந்திய சினிமாவை தாண்டி அவர் ஹிந்தியிலும் படங்கள் நடித்து வருகிறார்.ஷாருக் கான் - அட்லீ கூட்டணியில் உருவாகும் ஜவான் படத்தில் அவர் வில்லனாக தற்போது நடித்து , ஹிந்தி படம் என்பதால் 21  கோடி  சம்பளமாக பெறுகிறாராம். தமிழ் படங்களில் சுமார் 8   - 10 கோடி    சம்பளமாக வாங்கி வந்தார் விஜய் சேதுபதி .சென்னை உள்ளிட்ட பல இடங்களில் வீடுகள் வைத்து இருக்கிறார். சென்னை சேத்துப்பட்டில் அவர் புது வீடு சில வருடங்களுக்கு முன்பு தான் வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வளசரவாக்கம் பகுதியிலும் அவருக்கு வீடு இருக்கிறது.அதுமட்டுமின்றி தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் அவருக்கு சொத்து இருப்பதாக கூறப்படுகிறது. உச்சத்தில் இருக்கும் விஜய் சேதுபதி.

1 2 ... 86 87 88 89 90 91 92 93 94 95

AD's



More News