25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
கால மாற்றத்தால் வீழ்ச்சியடையும் ராஜபாளையம் வெல்ல உற்பத்தி: கரும்பு சாகுபடியைக் குறைக்கும் விவசாயிகள். >> வத்திராயிருப்பு & மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடர் மழை: நெல் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >>


கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் .

குறையின்றி வாழ விரும்புவோர் கன்னியாகுமரி பகவதியம்மனை தரிசியுங்கள்.கன்னி பெண்ணால் தான் தனக்கு மரணம் வேண்டும் என சிவனிடம் வரம் பெற்றான் பாணாசுரன்.

இந்த சமயத்தில் சிவனை திருமணம் செய்ய வேண்டும் என பகவதி என்ற பெயரில் இத்தலத்தில் தவம் இருந்தாள் பார்வதி. அசுரனை வதம் செய்யும் பணியை பகவதியிடம் ஒப்படைக்க நினைத்தார் சிவன். அதனால் அவளுடைய தவத்தை ஏற்கவில்லை.

இதை அறியாததால் பகவதிக்கு கோபம் வந்தது. ஆனால் பாணாசுரனோ தன்னை திருமணம் செய்யுமாறு பகவதியை வற்புறுத்தினான். அப்போது கோபத்தின் உச்சத்தில் இருந்த பகவதி அவனைக்கொன்றாள். பின்னர் கோபம் தணிந்தது. இங்குள்ள அம்மன் குமரியாக இருப்பதால் இந்த தலத்தை 'கன்னியாகுமரி' என அழைக்கின்றனர்.

முன்பு அம்மனின் மூக்குத்தி ஒளியை, கப்பல் கலங்கரை விளக்கின் ஒளி என ஓட்டுபவர்கள் கருதியதால் கப்பல்கள் பலமுறை விபத்துக்குள்ளானது.இதனால் கடற்கரை நோக்கி இருந்த வாசல் மூடப்பட்டு, வடக்கு நோக்கி வாசல் வைக்கப்பட்டது.

இந்தியாவின் தென்கோடி முனை கன்னியாகுமரி. முக்கடல் சேரும் இந்த கடலில் நீராடினால் குறைகள் நீங்கி நன்மை கிடைக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News