2045-ல் விண்வெளியில் மனிதர்கள் குடியேறுவார்களா?.
தொழில்நுட்ப வளர்ச்சியின் அடுத்தகட்டமாக,2045ஆம் ஆண்டுக்குள் லட்சக்கணக்கான மக்கள் விண்வெளியில் குடியேறி வாழும் சூழல் உருவாகலாம் என அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் கணித்துள்ளார்.
நிலவின் மேற்பரப்பிலோ அல்லது விண்வெளியின் பிற பகுதிகளிலோ மனிதர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகளுக்கு ரோபோக்களை அனுப்ப முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மனிதர்களை நேரடியாக விண்வெளிக்கு அனுப்புவதைவிட, ரோபோக்கள் மூலம் பணிகளை மேற்கொள்வது செலவைக் குறைக்கும் என்றும் ஜெஃப் பெசோஸ் குறிப்பிட்டுள்ளார்.எதிர்காலத்தில் விண்வெளியே மனிதர்களின் புதிய வாழ்விடமாக மாறுமா என்ற எதிர்பார்ப்பை அவரது கருத்து ஏற்படுத்தியுள்ளது.
0
Leave a Reply