இந்தியாவில் முதல் முறையாக பிக் பாஷ் லீக் போட்டி.
ஆஸ்திரேலிய விளையாட்டுப் போட்டிகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் நோக்கில், 'ஜி டே நமஸ்தே' விழா டிசம்பர் 7 முதல் 12-ம் தேதி வரை டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, கொல்கத்தா, கோஹிமா ஆகிய ஆறு நகரங்களில் நடைபெறுகிறது.
இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக, ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற பிக் பாஷ் லீக் (பி.பி.எல்.) கிரிக்கெட் தொடரின் போட்டி முதல் முறையாக இந்தியாவில் நடைபெற உள்ளது.
இதன் முதல் போட்டி டிசம்பர் 12-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் - பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.
பிக் பாஷ் லீக் தொடரின் போட்டி வெளிநாட்டில் நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். மேலும், இந்தியாவில் நடைபெறும் முதல் வெளிநாட்டு கிரிக்கெட் லீக் போட்டி என்ற சிறப்பையும் இது பெறுகிறது.
ஆஸ்திரேலியாவின் கலாசாரம், விளையாட்டு மற்றும் வர்த்தக உறவுகளை இந்தியாவில் மேம்படுத்தும் நோக்கில் ஆஸ்திரேலிய அரசு, ஆஸ்திரேலியா - இந்திய உறவுகள் மையம் மற்றும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா ஆகியவை இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்துகின்றன.
0
Leave a Reply