25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
கால மாற்றத்தால் வீழ்ச்சியடையும் ராஜபாளையம் வெல்ல உற்பத்தி: கரும்பு சாகுபடியைக் குறைக்கும் விவசாயிகள். >> வத்திராயிருப்பு & மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடர் மழை: நெல் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >>


தெற்காற்றினை தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தெற்காற்றினை தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டம் டி.கடம்பங்குளம் கிராமத்தில் தெற்காற்றினை தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் (26.11.2026) தொடங்கி வைத்தார்.நமது மாவட்டமானது வானம் பார்த்த பூமியாக இருப்பதால் நீர்நிலைகளைப் பாதுகாப்பதற்கான முன் முயற்சியாக  இப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், காரியாபட்டி வட்டம், D.கடம்பங்குளம் கிராமம் முதல் P.புதுப்பட்டி கிராமம் வரை தெற்காறு ஆற்றில் தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

தெற்காறு, மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே அமைந்துள்ள தொட்டப்பநாயக்கன் மலைத்தொடரின் வடக்கு முனையில் உற்பத்தியாகிறது. அங்கிருந்து மதுரை மாவட்டத்தில் சுமார் 60 கி.மீ. தூரமும், விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 16 கி.மீ. தூரமும் பாய்ந்து, புதுப்பட்டி கிராமத்தில் குண்டாற்றுடன் கலக்கிறது. இந்த ஆறானது பல்வேறு கிராமங்கள் மற்றும் குளங்களுக்கு நீராதாரமாக விளங்குவதுடன், விவசாயம், குடிநீர்த் தேவை மற்றும் நிலத்தடி நீர் செறிவூட்டலுக்கும் முக்கியப் பங்காற்றுகிறது.

தெற்காறு ஆற்றில் படிந்துள்ள வண்டல் மண்ணை அகற்றி, ஆற்றின் நீர்வழிப் பாதையைச் சீரமைப்பதன் மூலம் மழைக்காலங்களில் நீர் தடையின்றிச் செல்வதற்கும், ஆற்றின் நீர்வளத்தை மேம்படுத்துவதற்கும் இப்பணி மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் மழைநீர் சேமிப்பு அதிகரிப்பதுடன், நிலத்தடி நீர்மட்டம் உயரவும், சுற்றுவட்டாரப் பகுதிகளின் நீராதாரம் மேம்படவும் வழிவகை செய்கிறது.  இத்தூர்வாரும் பணியின் மூலம் சுமார் 2,840 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும். மேலும், இப்பகுதி விவசாயிகளின் பாசன நீர்த் தேவையைப் பூர்த்தி செய்து, வேளாண் உற்பத்தியை மேம்படுத்துவதற்கும் இப்பணி பெரிதும் துணைபுரியும்.இப்பணிக்கு எக்ஸ்னோரா இன்டர்நேஷனல், எம்.என்.காயத்ரி அறக்கட்டளை மற்றும் பிரதான் ஆகிய அமைப்புகள் ஆதரவு அளித்துள்ளன.இதேபோல், பல தொண்டு நிறுவனங்கள் ஒன்றிணைந்து செயல்பட்டு மண்வளத்தை சீர்படுத்துவதற்கும், பனை விதைகளை விதைப்பதற்கும் தங்களது ஆதரவைத் தர வேண்டும்.

எனவே, நீர்வளங்களைப் பாதுகாத்து, எதிர்காலத் தலைமுறையினருக்கும் பயனுள்ள வகையில் மேம்படுத்தும் நோக்கில், நீர்வளத்துறை, தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் இதர அமைப்புகளின் ஒருங்கிணைந்த ஒத்துழைப்புடன் இப்பணி தொடங்கப்பட்டுள்ளது.தூர் வாரும் பணியில்  பொதுமக்கள் பங்கேற்கும் பொழுது கூடுதல் பாதுகாப்புடன் நீண்ட காலத்திற்கு பயனுள்ளதாய் அமையும். இத்திட்டம் நமக்கானது நமது வருங்காலத்திற்கானது என்பதனை எண்ணி அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.நிகழ்வில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(விவசாயம்) திருமதி அம்சவேணி, உதவி செயற்பொறியாளர் திரு.ராஜேஸ்வரன், அரசு அலுவலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், விவசாயிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News