முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு அரங்கத்தினை தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் அவர்கள் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் அவர்கள் ஆகியோர்,திறந்து வைத்தார்கள்.
தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள் ஆகியோர், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.பி.செல்வம் அவர்கள், திருவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.அ.கார்த்திக் அவர்கள் ஆகியோர் முன்னிலையில், விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்க வளாகத்தில் ரூ.49.70 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு அரங்கத்தினை (28.07.2026) திறந்து வைத்தார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இளைஞர்களை நல்வழிப்படுத்திடவும், ஆரோக்கியமான இளைய தலைமுறையை உருவாக்கிடும் வகையிலும், இளைஞர்களிடம் விளையாட்டு ஆர்வத்தினை ஊக்கப்படுத்திடும் வகையிலும், அரசின் சார்பில் விளையாட்டு வீரர்களுக்கு தேவையான கட்டமைப்புகளை ஏற்படுத்திட அறிவுறுத்தியுள்ளார்.
அதன்படி விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் இளைஞர்களுக்கு நீச்சல், டென்னிஸ், கூடைபந்து, கைபந்து, பேட்மிட்டன் உள்ளிட்ட பல்வேறு வகையான விளையாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியான புதியதாக அமைக்கப்பட்டுள்ள முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு அரங்கம் இன்றைய தினம் விளையாட்டு வீரர்களின் பயன்பாட்டிற்கு திறந்த வைக்கப்பட்டுள்ளது. இந்த பாக்ஸ் கிரிக்கெட் ஆடுகளம் காலை 7.00 மணி முதல் இரவு 9.00 வரை செயல்படவுள்ளது. இதற்கென வடிவமைக்கப்பட்ட TURF TOWN MOBILE APP. என்ற இணையதளம் மூலம் விளையாட்டு வீரர்கள் தங்களுக்கான நேரத்தினை பதிவு செய்து கொள்ளலாம். இதற்கு 1 மணி நேரத்திற்கு ஜி.எஸ்.டி யுடன் மொத்தம் ரூ.826 அரசு கட்டணம் நிர்யணம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆடுகளத்தினை கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வமுள்ள இளைஞர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு சிறந்த வீரர்களாக உருவாகி நமது மாவட்டத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும். சிறு வயது முதலே இளைஞர்கள் தனக்கென ஒரு விளையாட்டினை தேர்வு செய்து தொடர்ச்சியாக பயிற்சி பெறுவதன் மூலம் மன வலிமையுடன், உடல் ஆரோக்கியம் மேம்படும் என அமைச்சர் பெருமக்கள் அவர்கள் தெரிவித்தார்கள்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் திரு.குமாரமணிமாறன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply