குரூசிபிள் கோப்பை ஸ்னூக்கர்: பங்கஜ் அத்வானி சாம்பியன்.
குரூசிபிள் கோப்பை ஸ்னூக்கர் தொடரில் இந்தியாவின் பங்கஜ் அத்வானி சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்தார்.
இங்கிலாந்தின் ரீடிங் நகரில் 900 பார்மட் முறையில் நடைபெற்ற இந்தத் தொடரில், நடப்பு உலக பில்லியர்ட்ஸ் சாம்பியனான இந்தியாவின் பங்கஜ் அத்வானி சிறப்பாக விளையாடினார்.
காலிறுதியில் ஆஸ்திரேலியாவின் நீல் ராபர்ட்சனை 5-2 என்ற கணக்கிலும், அரையிறுதியில் இங்கிலாந்தின் ஜோ பெர்ரியை 6-1 என்ற கணக்கிலும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இறுதிப்போட்டியில் மால்டாவின் டோனி டிராகோவை எதிர்கொண்ட பங்கஜ் அத்வானி, அபாரமாக விளையாடி 6-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றார்.
இதன் மூலம் குரூசிபிள் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.
மேலும், அடுத்த ஆண்டு குரூசிபிள் கோப்பை ஸ்னூக்கர் தொடர் முதல் முறையாக இந்தியாவில் நடைபெற உள்ளது.
0
Leave a Reply