25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
கால மாற்றத்தால் வீழ்ச்சியடையும் ராஜபாளையம் வெல்ல உற்பத்தி: கரும்பு சாகுபடியைக் குறைக்கும் விவசாயிகள். >> வத்திராயிருப்பு & மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடர் மழை: நெல் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >>


181 அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும்  குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் (RO Plant) பொருத்தப்பட  உள்ளது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

181 அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் (RO Plant) பொருத்தப்பட உள்ளது.

விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட 450 கிராம ஊராட்சி மன்ற அலுவலகங்களில் சொத்து வரி,  குடிநீர் கட்டணம் செலுத்துதல்,  கட்டிட  வரைபட  அனுமதி, குடிநீர் மற்றும் தெருவிளக்கு புகார் பதிவு மேற்கொள்ள வரும் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு, நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதியிலிருந்து ஒவ்வொரு ஊராட்சி மன்ற அலுவலகத்திலும் குடிநீர்  சுத்திகரிப்பு  இயந்திரம்  பொருத்தப்பட்டு வருகிறது.  இது முழுக்க தனியார்  நிறுவனத்தின்  மூலம்  இலவசமாக  வழங்கப்படுகிறது.அடுத்த கட்டமாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 181 அரசு உயர்நிலைப்பள்ளி  மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும்  குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் (RO Plant) பொருத்தப்பட  உள்ளது.

 அதேபோல் விருதுநகர் மாவட்டத்தில் போதை பொருள் கடத்தல், குற்ற நடவடிக்கைகள் தடுத்தல், பாலியல் ரீதியான குற்றங்கள் மற்றும் குழந்தைகள் கடத்தல் ஆகிய குற்றச் சம்பவங்கள் தடுக்கும் விதமாக அனைத்து கிராம ஊராட்சிகளிலும் காவல்துறை, சிங்கப்பெண் அதிரடி படை மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அலுவலர்களுடன் கூட்டாய்வு செய்து 33 இடங்கள் முக்கிய பகுதியாக கண்டறியப்பட்டு 200 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவுள்ளது.

மேலும் பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதி மற்றும் இருள் நிறைந்த பகுதிகளை கண்டறிந்து சிறு உயர் கோபுர  மின் விளக்குகள்,  உயர் கோபுர சூரிய மின் தகடுடன் கூடிய விளக்குகள் தனியார் நிதி  உதவியுடன்  பொருத்தப்பட உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S ., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News